Published:Updated:

LSG v DC: மே தின ஸ்பெஷல் இன்னிங்ஸ் ஆடிய ராகுல்; மிடில் ஓவர்களில் கோட்டைவிட்டதால் தோற்ற டெல்லி!

KL Rahul ( IPL )

LSG v DC: 7-15 இந்த மிடில் ஓவர்கள்தான் ஆட்டத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. பேட்டிங்கின் போது லக்னோ 7-15 இந்த 9 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 88 ரன்களை அடித்திருந்தது. ஆனால், டெல்லியோ..

LSG v DC: மே தின ஸ்பெஷல் இன்னிங்ஸ் ஆடிய ராகுல்; மிடில் ஓவர்களில் கோட்டைவிட்டதால் தோற்ற டெல்லி!

LSG v DC: 7-15 இந்த மிடில் ஓவர்கள்தான் ஆட்டத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. பேட்டிங்கின் போது லக்னோ 7-15 இந்த 9 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 88 ரன்களை அடித்திருந்தது. ஆனால், டெல்லியோ..

Published:Updated:
KL Rahul ( IPL )
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. ஓயாமல் உழைக்கும் கே.எல்.ராகுல் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஒரு ஸ்பெசல் இன்னிங்ஸை ஆட, லக்னோ அணி 190+ ஸ்கோரை எடுத்து அதை வெற்றிகரமாக டிஃபண்ட்டும் செய்து காட்டியிருக்கிறது.
KL Rahul
KL Rahul
IPL

லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலே டாஸை வென்றிருந்தார். மாலை நேரத்து போட்டி என்பதால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். டீகாக்கும் கே.எல்.ராகுல் வழக்கம்போல ஓப்பனர்களாக வந்தனர். முஷ்டபிசுர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தையே டீகாக் பவுண்டரியோடு தொடங்கியிருந்தார். கே.எல்.ராகுல் கொஞ்சம் நின்று ஆட, டீகாக் தனது அதிரடியைத் தொடர்ந்தார். சேத்தன் சர்க்காரியா வீசிய இரண்டாவது ஓவரில் மேலும் ஒரு பவுண்டரியையும் சிக்சரையும் அடித்திருந்தார். நன்றாக தொடங்கிய டீகாக் அந்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றத் தவறினார். லலித் யாதவ் வீசிய ஓவரில் 16 ரன்கள் செல்ல, விக்கெட் எடுப்பதற்கென்றே அளவெடுத்து செய்த ஷர்துல் தாகூருக்கு அடுத்த ஓவரை பண்ட் கொடுத்தார். பண்ட்டின் நம்பிக்கையை ஷர்துல் காப்பாற்றினார். 23 ரன்களில் டீகாக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். நம்பர் 3 இல் தீபக் ஹூடா இறங்கினார். தொடக்க விக்கெட்டுக்கு கிடைக்காத பெரிய பார்ட்னர்ஷிப் இரண்டாவது விக்கெட்டுக்கு கிடைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

LSG v DC
LSG v DC
IPL
ராகுல் + தீபக் ஹீடா இந்த கூட்டணி 95 ரன்களை சேர்த்தது. பஞ்சாபுக்கு எதிரான கடைசி போட்டியில்தான் தீபக் ஹூடா முதன் முதலாக நம்பர் 3 இல் இறங்கியிருந்தார். அந்த போட்டியில் டீகாக்குடன் சேர்ந்து 85 ரன்களை சேர்த்திருந்தார்.

லக்னோவின் லைன் அப்பில் அந்த நம்பர் 3 ஸ்பாட் மட்டும் செட்டில் ஆகாமல் இருந்தது. கீழே ஆடிக்கொண்டிருந்த தீபக் ஹூடாவை நம்பர் 3 க்கு ப்ரமோட் செய்யும் முடிவை எடுத்தனர். அந்த முடிவு உண்மையிலேயே நல்ல பலனைக் கொடுத்தது. பவர்ப்ளே முடிந்து மிடில் ஓவர்களிலேயே ராகுல் வேகமெடுக்க தொடங்கினார். குல்தீப், அக்சர், சேத்தன் சர்க்காரியா என அத்தனை பேரின் ஓவரிலுமே பவுண்டரி சிக்சர்களை அடித்து வெளுத்தார். ஆனால், ஓவருக்கு ஒரு பவுண்டரி அல்லது சிக்சர்தான். அத்தோடு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து தீபக் ஹூடாவுக்கு கொடுத்துவிடுவார். அவர் ராகுலை விட இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடினார். இதனால் ராகுல் தன் விருப்பப்படி நின்று ஆட முடிந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வீழாமல் நீண்டு கொண்டிருந்த இந்த பார்ட்னர்ஷிப்பையும் ஷர்துல் தாகூரே வந்து வீழ்த்தினார்.
Shardul Thakur
Shardul Thakur
IPL

அரைசதம் கடந்திருந்த தீபக் ஹூடாவை ஒரு நல்ல யார்க்கரை வீசி தானே கேட்ச் பிடித்து ஷர்துல் வெளியேற்றினார். மிடில் ஓவர்களில் ரன்களைக் குவித்த அளவுக்கு லக்னோ அணியால் டெத் ஓவர்களில் ரன்கள் குவிக்க முடியவில்லை. அடித்து வெளுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாய்னிஸ் தட்டுத்தடுமாறினார். 16 பந்துகளில் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். லக்னோவுக்கு 200, அடியேனுக்கு 100 என்ற இலக்கோடு வேகமெடுத்த கே.எல்.ராகுலையும் ஷர்துல் தாகூரே 77 ரன்களில் வெளியேற்றினார். லக்னோ அணி 20 ஓவர்களில் 195 ரன்களை எடுத்தது. டெல்லிக்கு டார்கெட் 196. டெல்லி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை விட்டுக்கொண்டே இருந்தது. முதல் 6 ஓவர் பவர் ப்ளேவுக்காக டேவிட் வார்னரும் பிரித்திவி ஷாவும் அவுட் ஆகியிருந்தனர். 5 ரன்களில் பிரித்திவி ஷா அவுட் ஆனார். சமீராவின் பந்தில் க்ரீஸில் நின்றபடியே அவரின் தலைக்கு மேலேயே பவுண்டரியை அடித்த பிரித்திவி ஷா, ஷார்ட்டாக வீசப்பட்ட அடுத்த பந்திலேயே சொதப்பலாக புல் ஷாட்டை அடித்துக் கேட்ச் ஆகியிருந்தார். மோஷின் கான் வீசிய மூன்றாவது ஓவரிலேயே வார்னரும் அவுட் ஆகியிருந்தார். இதன்பிறகு, மிட்செல் மார்ஸும் ரிஷப் பண்ட்டும் கூட்டணி சேர்ந்திருந்தனர். இருவருமே நன்றாக அட்டாக் செய்து ஆடினார். ரிஷப் பண்ட் க்ரீஸுக்குள் வந்தவுடனே இடது கை ஸ்பின்னரான க்ரூணால் பாண்ட்யாவை ராகுல் அழைத்து வந்திருப்பார். 'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா' என குஷியான ரிஷப் பண்ட் அந்த ஓவரில் 5 பந்துகளில் 18 ரன்களை அடித்தார்.

பண்ட் க்ரூணால் பாண்ட்யாவை அடிக்க, மிட்செல் மார்ஸ் ஹோல்டர் மற்றும் சமீரா போன்ற வேகங்களை அட்டாக் செய்து சிக்சரும் பவுண்டரியுமாக அடித்திருந்தார்.
Marsh + Pant
Marsh + Pant
IPL

இவர்களின் அதிரடியான ஆட்டத்தினால் பவர்ப்ளேயில் மட்டும் டெல்லி அணி 66 ரன்களை அடித்திருந்தது. இந்த கூட்டணி நின்றால் ஆட்டம் மொத்தமாக மாறிவிடும் என்ற சூழலில் மிட்செல் மார்ஸ் சர்ச்சையான முறையில் அவுட் ஆகினார். கிருஷ்ணப்பா கௌதம் வீசிய முதல் பந்திலேயே மிட்செல் மார்ஸ் பீட்டன் ஆனார். அது எட்ஜ் என அம்பயர் அவுட் கொடுக்க, மிட்செல் மார்ஸும் அதை ஆமோதிக்கும் வகையில் வெளியேறிவிடுவார். உண்மையில் அந்த பந்து மிட்செல் மார்ஸின் பேட்டில் உரசியிருக்கவே இல்லை. இது ரீப்ளேவில்தான் தெரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெல்லியின் வீழ்ச்சி இங்கிருந்தே தொடங்கியது எனலாம். இதன்பிறகு பண்ட், ரோவன் பவல் போன்றோர்கள் அடித்தும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. கடைசியில் அக்சர் படேல் கொஞ்சம் அதிரடி காட்டி ஆட்டத்தை நெருக்கமாகக் கொண்டு வந்தார். ஆனால், கொஞ்சம் பரபரப்பு கூடியதே தவிர வேறொன்றும் நடக்கவில்லை. டெல்லி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

7-15 இந்த மிடில் ஓவர்கள்தான் ஆட்டத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. பேட்டிங்கின் போது லக்னோ 7-15 இந்த 9 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 88 ரன்களை அடித்திருந்தது. ராகுலும் தீபக் ஹூடாவும் இந்த சமயத்தில்தான் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து ஸ்கோரை உயர்த்தியிருந்தனர். அதேநேரத்தில் சேஸிங்கின் போது டெல்லி அணி 7-15 மிடில் ஓவர்களில் 69 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. மிட்செல் மார்ஸ், லலித் யாதவ், ரிஷப் பண்ட் என மூன்று முக்கியமான விக்கெட்டுகளை இந்த சமயத்தில் டெல்லி இழந்திருந்தது. பெரிய பார்ட்னர்ஷிப்கள் இல்லை. பவர்ப்ளேயில் 11 க்கு மேல் சென்று கொண்டிருந்த ரன்ரேட் மிடில் ஓவர்களில் 8 க்கும் கீழ் குறைந்தது. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பண்ட்டும் கொஞ்சம் தட்டுத்தடுமாறியிருந்தார்

Rishabh Pant
Rishabh Pant
IPL
19 பந்துகளில் 42 ரன்களை எடுத்திருந்த பண்ட் அடுத்த 11 பந்துகளில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்து மோஷின் கானின் பந்தில் விக்கெட்டை விட்டிருப்பார்.

ரிஷப் பண்ட் அந்த டெம்போவை இழக்காமல் ஆடுயிருந்தால்கூட, கடைசியில் அக்சர் படேல் இன்னும் நெருக்கமாக ஆட்டத்தை கொண்டு வந்திருக்க முடியும். அடிக்கடி போட்டிகளை நெருங்கி வந்து தோற்கும் டெல்லி இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். இல்லையேல், ப்ளே ஆஃப்ஸ் கனவு நொருங்கியே போகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism