Ipl-2021 banner
Published:Updated:

IPL 2021 : மேக்ஸ்வெல் Is Back... இனி சிக்ஸர்கள் சிதறும்... பவுண்டரி லைன் கதறும்! #GlennMaxwell

Glenn Maxwell
Glenn Maxwell

2014-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் சிறப்பாக சீசனைத் தொடங்கியிருக்கிறார் மேக்ஸ்வெல். 2020-ல் வெறும் 108 ரன்கள் மட்டுமெ எடுத்தவர், அதற்கு முன் 2018-ல் 169 ரன்களே எடுத்தார். ஆனால், இப்போது 3 போட்டிகளிலேயே அதைவிட அதிக ரன்கள் எடுத்திருக்கிறார்.

கிளென் மேக்ஸ்வெல், ஒவ்வொரு ஐபிஎல் தொடரின்போதும் கேளிக்கைகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகிக்கொண்டே இருந்தவர். சர்வதேச அரங்கில் என்ன ஃபார்மில் இருந்தாலும், இங்கு வந்தால் சொதப்பிவிடுவார். அதனால், கடந்த ஆறேழு ஆண்டுகளாக இந்த விமர்சனங்கள் தொடர்ந்துகொண்டிருந்தன. இந்த சீசன், அவரை விட அதிகம் விமர்சிக்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் அவரை வாங்க, "நல்ல பொருத்தம்" என்று பலரும் சிரித்தார்கள். ஆனால், பெங்களூரு அணியும் சரி, மேக்ஸ்வெல்லும் சரி அவர்களுக்கு நல்ல பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மேக்ஸ்வெல் என்ன செய்தார், எப்படி செய்தார், கீழே இருக்கும் வீடியோவைப் பார்க்கவும்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 49 பந்துகளில் 78 ரன்கள் அடித்து அசத்தினார் மேக்ஸ்வெல். இந்த இன்னிங்ஸில் 9 பௌண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடக்கம். தன் டிரேட் மார்க் ரிவர்ஸ் ஸ்வீப்கள் மூலமும் சில பவுண்டரிகளைப் பறக்கவிட்டார்.

வருண் சக்ரவர்த்தி வீசிய இரண்டாவது ஓவரிலேயே பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. முக்கியமாக கேப்டன் கோலியும் பெவிலியன் திரும்பியிருந்தார். ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைக்கவேண்டிய கட்டாயத்தில், படிக்கலோடு சேர்ந்த அந்த தேவையை நிவர்த்தி செய்தார் மேக்ஸி! விக்கெட் விழாத வகையில் நிதானமாக ஆடினாலும், ரன் ரேட் வீழாமலும் பார்த்துக்கொண்டார். சரியான தருணங்களில், சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து பவுண்டரிகளுக்கு அனுப்பினார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான இந்த சீசனின் முதல் போட்டியில் ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி தடுமாறியபோது, நிதானமாக ஆடி அவர்களை இலக்குக்கு அருகே அழைத்துச் சென்றார். அந்தப் போட்டியில் 39 ரன்கள்தான் அடித்திருந்தார். இருந்தாலும், அவரது ஆட்ட முறையில் நல்ல மாற்றம் தெரிந்திருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறினார்கள்.

சன்ரைசர்ஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அரைசதம் கடந்து, ஒரு நல்ல ஸ்கோர் எடுப்பதற்குக் காரணமாக அமைந்தார். வழக்கமாக திடீரென மோசமான ஷாட் ஆடி அவுட் ஆகும் மேக்ஸ்வெல், இந்த முறை அந்த அதையும் சரிசெய்துவிட்டார். ஃபீல்ட் ப்ளேஸ்மென்ட் வரை அனைத்தையும் சரியாகக் கணித்தே தன் ஷாட்களைத் தேர்வு செய்தார்.

2014-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் சிறப்பாக சீசனைத் தொடங்கியிருக்கிறார் மேக்ஸ்வெல். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக அவர் செயல்பாடு படுமோசம். 2020-ல் வெறும் 108 ரன்கள் மட்டுமெ எடுத்தவர், அதற்கு முன் 2018-ல் 169 ரன்களே எடுத்தார். ஆனால், இப்பொது 3 போட்டிகளிலேயே அதைவிட அதிக ரன்கள் எடுத்திருக்கிறார்.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு