Published:Updated:

CSK, MI, RCB இல்லாவிட்டால் IPL என்ன ஆகும்? மூன்று அணிகளை மட்டுமே நம்பியிருக்கிறதா இந்தத் தொடர்?

CSK, மும்பை இந்தியன்ஸ், RCB - இந்த மூன்று அணிகளும் இல்லாவிட்டால் IPL தொடரின் நிலை என்னவாகும்? மிகப்பெரிய தொடர்தான். ஆனால், இன்னும் இந்த 3 அணிகளைத்தான் நம்பியிருக்கிறது IPL. என்ன காரணம்? முழுமையான அலசல் இந்த வீடியோவில்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

IPL 2021 தொடரின் இரண்டாவது பாதி தொடங்கிவிட்டது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிவிட்டது சூப்பர் கிங்ஸ். போட்டியின் முடிவையெல்லாம் விட்டுவிட்டு யோசித்தால், இந்த சீசனின் 27-வது போட்டி CSK vs MI. முப்பதாவது போட்டியும் அதே CSK vs MI. தடை செய்யப்படுவதற்கு முன் அறிவிக்கப்பட்ட அட்டவணையில் 47-வது போட்டியாக இருந்த இந்த மோதல், ஏன் மாற்றப்பட்டது? அட்டவணையை அப்படியே தொடர்வதில் என்ன சிக்கல்?

MI | CSK
MI | CSK

இருக்கிறது. இன்னும் ஆழமாக யோசித்துப் பார்த்தீர்களென்றால், கடந்த ஆறேழு ஆண்டுகளாக ஒவ்வொரு IPL தொடரின் முதல் போட்டியிலும் CSK, MI, RCB இந்த மூன்று அணிகளில் ஏதேனும் இரண்டு அணிகள் விளையாடிவிடும். CSK vs MI, CSK vs RCB அல்லது MI vs RCB. ஏன்? இந்த மூன்று அணிகளை வைத்து தொடர் தொடங்கினால்தான், இந்தத் தொடருக்கும் சரி ஒளிபரப்பாளர்களுக்கும் சரி, போதுமான அளவு கவனம் கிடைக்கிறது. அப்படியெனில், மற்ற அணிகள் முதல் போட்டியில் விளையாடினால் கவனம் ஈர்ப்பதில்லையா? ஆம்!

KKR இரண்டு கோப்பைகள் வென்றிருக்கிறது. RCB கோப்பை வென்றதே இல்லை. ஆனாலும், அவர்களுக்கு இருக்கும் மவுசு ஷாரூக் கானின் அணிக்கு இருப்பதில்லை. பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற அணிகள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் எந்தத் தாக்கமும் ஏற்படுத்தவேயில்லை. கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த லீக் என்று போற்றப்பட்டாலும், 13 ஆண்டுகளாக நடந்துவந்தாலும், இன்னும் மூன்று அணிகளையே பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறது IPL. எந்த இடத்தில் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது?

ஆனால், அந்த டாப் 3 பொசிஷனைத் தக்கவைத்துக்கொள்வதில் சூப்பர் கிங்ஸுக்கு விரைவில் சவால் வரலாம். அதேபோல், டெல்லி கேபிடல்ஸ் கூடிய விரைவில் அந்த எலைட் நிலையை அடையலாம்.

இத்தனை ஆண்டுகளாக இந்த அணிகள் இயங்கிய முறை, அவர்களின் திட்டம் உள்ளிட்டவையை வைத்து IPL பற்றிப் பேசியிருக்கிறோம். CSK, மும்பை இந்தியன்ஸ் அணிகளின் சக்ஸஸ் ஃபார்முலா, மற்ற அணிகள் செய்யத் தவறிய விஷயங்களைப் பேசியிருக்கிறோம். முழு வீடியோவையும் மேலே பார்க்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு