Published:Updated:

மும்பை இந்தியன்ஸின் ஃபேன்ஸ் சச்சின் ரசிகர்கள் மட்டுமா? இது ரோஹித் ஷர்மா உருவாக்கிய சாம்ராஜ்ஜியம்!

Rohit Sharma

சச்சின் விடைபெற்றதால் 'இனி கிரிக்கெட்டே பார்க்க மாட்டேன்' என்று பலரும் முடிவெடுத்திருக்க பலரும் மற்ற ரசிகர்களாக மாறியிருந்தனர். ஆனால் அப்படிக் கூறிய மும்பை அணி ரசிகர்கள் யாருமே கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தவும் இல்லை மற்ற அணிகளுக்குச் சென்று விடவும் இல்லை. காரணம்...

மும்பை இந்தியன்ஸின் ஃபேன்ஸ் சச்சின் ரசிகர்கள் மட்டுமா? இது ரோஹித் ஷர்மா உருவாக்கிய சாம்ராஜ்ஜியம்!

சச்சின் விடைபெற்றதால் 'இனி கிரிக்கெட்டே பார்க்க மாட்டேன்' என்று பலரும் முடிவெடுத்திருக்க பலரும் மற்ற ரசிகர்களாக மாறியிருந்தனர். ஆனால் அப்படிக் கூறிய மும்பை அணி ரசிகர்கள் யாருமே கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தவும் இல்லை மற்ற அணிகளுக்குச் சென்று விடவும் இல்லை. காரணம்...

Published:Updated:
Rohit Sharma
2007-ம் ஆண்டு, டி20 உலகக்கோப்பை முடிந்து களைகட்ட தொடங்குகிறது ஐபிஎல் தொடரின் முதல் சீஸன். எதிர்பார்த்த விதமாகவே மும்பை அணியின் கேப்டன் ஆகிறார் சச்சின். ஆனால், அந்த ஒன்றைத் தவிர மும்பை ரசிகனின் வேறு எந்த எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. அப்படியொரு சொதப்பல் சீஸனோடு தன் ஐபிஎல் வரலாற்றைத் தொடங்கியது மும்பை அணி. 2008-ம் ஆண்டில் ஐந்தாவது இடம், அதற்கடுத்த வருடம் ஏழாவது இடம், 2010-ல் இரண்டாம் இடம், 2011, 2012 ஆகிய இரண்டு வருடங்களில் ப்ளே ஆப்ஸிற்கு தகுதி என மும்பை அணியின் கோப்பைக் கனவு மட்டும் கைகூடாமலேயே இருந்தது.

அப்போதுவரை சச்சின் என்ற பெயர் மட்டுமே ஒவ்வொரு ரசிகனுக்கும் அணியுடன் இணைத்துக்கொள்ள கூடிய பந்தமாக இருந்தது. நான்கே ஆண்டுகளில் கேப்டன் பதவியை விட்டுக் கொடுக்கும் சச்சின் பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக ஆடுகிறார். 2012-ல் ஹர்பஜன், 2013-ல் ரிக்கி பாண்டிங் என தொடர்ந்து மாறிக்கொண்டிருந்த கேப்டன் பதவி 2013-ம் ஆண்டு தொடரின் பாதியில் ரோஹித் சர்மா எனும் இளைஞனின் கைகளுக்கு வருகிறது. அதே ஆண்டு சச்சினுக்கு கடைசி ஐபிஎல் ஆகவும் அமைகிறது.

Rohit-Sachin
Rohit-Sachin

கோப்பையே இல்லாமல் சச்சின் தன் ஓய்வை அறிவிக்க அந்தாண்டு தொடரை வென்று அவருக்குக் கோப்பையுடன் விடை கொடுக்கிறது ரோஹித் தலைமைதாங்கிய படை. சச்சின் இல்லாத எதிர்கால மும்பை அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது அவ்வெற்றி. சச்சின் விடைபெற்றதால் 'இனி கிரிக்கெட்டே பார்க்க மாட்டேன்' என்று பலரும் முடிவெடுத்திருக்க பலரும் மற்ற ரசிகர்களாக மாறியிருந்தனர். ஆனால் அப்படிக் கூறிய மும்பை அணி ரசிகர்கள் யாருமே கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தவும் இல்லை மற்ற அணிகளுக்கு சென்றுவிடவும் இல்லை. காரணம், ரோகித் சர்மா தலைமையில் வென்றிருந்த கோப்பை அனைவரையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

கோப்பை வென்ற தருணம் எப்படியும் நீண்டநாள் நீடிக்காது என்பது என்னவோ உண்மைதான். 2014-ல் கோப்பை இல்லை என்றாலும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஆதித்ய தாரே அடித்த சிக்ஸர் இன்றும் ஒவ்வொரு மும்பை ரசிகனின் கண் முன்னே நிற்கும். அதற்கடுத்த அனைத்து ஒற்றை இலக்கு ஆண்டுகளிலும் (2021 தவிர) கோப்பையை தவறவிடவே இல்லை அந்த அணி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சச்சினுக்காக மும்பை அணியின் ரசிகர்களான அனைவரும் அவரது ஓய்விற்கு பின் இன்னும் தீவிர மும்பை ரசிகர்கள் ஆகிறார்கள். 2008-ம் ஆண்டின் மோசமான தொடருக்குப் பிறகு ஐபிஎல் வரலாற்றின் அதிக கோப்பைகள் வைத்திருக்கும் அணியாக மும்பை மாறக்கூடும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்ய குமார், இஷான், அம்பத்தி ராயுடு என இன்னும் பல திறமைகளை வளர்த்தெடுக்கும் பட்டறையாகவும் விளங்கியது மும்பை அணி.

Rohit Sharma
Rohit Sharma
இன்றும் சென்னைக்குச் சமமாக பேசப்படும் ஒரு அணி அது மும்பைதான். ஐபிஎல் தொடரின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் நேருக்கு நேர் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற ஒரே அணியும் மும்பைதான். புள்ளி விவரங்களை எல்லாம் தாண்டி மும்பை அணி கை ஓங்கும் இடம் ஒன்று சென்னை உடனான ரைவெல்ரி!

ஐபிஎல் தொடங்கிய காலம் முதலே சென்னை ஒரு முதல் தரம் வாய்ந்த அணி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. களத்திற்கு வெளியேயும் சென்னை எனும் பிராண்டுக்கு நெருக்கமாக ஒரு அணியும் இருந்திருக்கவில்லை. மும்பைக்கு அதிக ரசிகர்கள் இருந்தாலும் 2012 வரை சொல்லிக் கொள்ளும் படியாக எதுவுமில்லை. 2013-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சென்னை அணியை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய மும்பை அதை இன்றுவரை தொடர்ந்து வருகிறது. சென்னைக்கு எதிராக அதிக வெற்றிகளை வைத்திருக்கும் ஒரே அணி. ப்ளே ஆப்ஸ்களிலும் சென்னையை அதிக முறை தோற்கடித்த அணி மும்பைதான். இப்போது சென்னையைவிட ஒரு கோப்பை அதிகமாக வைத்திருக்கிறது மும்பை. இந்தப் புள்ளியில்தான் சென்னை என்ற பிராண்டிற்கு இணையாக மற்றொரு பிராண்ட் உருவாகிறது. இவ்விடத்தில் கே.ஜி.எப் வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

"எதோ ஒரு கோப்பையை அடிச்சு உருவான பிராண்ட் இல்லை மும்பை இந்தியன்ஸ். பல கோப்பைகளை வென்று இன்னொரு மாபெரும் பிராண்டையும் மீறி உருவானதுதான் மும்பை இந்தியன்ஸ்."
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

சச்சின் ஓய்வு பெற்றபின் அணியைக் கட்டமைத்து ரசிகர்களைக் கட்டிப் போட்டது மும்பை அணியின் மாபெரும் எழுச்சிக்கான காரணம். அணியை மோசமான நிலைகளில் பார்த்தது போய் இன்று புகழின் உச்சத்தில் பார்க்கும் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியுமா என்ன?! மும்பை ரசிகன் ஒவ்வொருவனுக்குள்ளும் அந்த உணர்வு உள்ளது.

சச்சின் ஓய்வுப் பெற்ற பிறகு "ரோஹித் ரசிகர் என்றால் முன்னாள் சச்சின் ரசிகரா?" என்ற கேள்விதான் பிரபலம். அந்தக் கேள்வியை உருவாக்கியவர் சச்சின் மட்டும் அல்ல, ஐந்து கோப்பைக்கு சொந்தக்காரரான ரோகித்தும்தான்.