Published:Updated:

Kuldeep Yadav: காயம், புறக்கணிப்பு, ஏமாற்றம் - அத்தனைக்கும் பதிலடியாக ஒரு கம்பேக்! சாதித்தது எப்படி?

Kuldeep Yadav | குல்தீப் யாதவ்

கடந்த இரண்டு ஆண்டுகளுமே புறக்கணிப்புகள் நிரம்பிய வேதனைமிக்க நாள்களாகவே குல்தீப்பிற்கு இருந்தன. இந்நிலையில்தான் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் குல்தீப் யாதவை 2 கோடி கொடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது.

Kuldeep Yadav: காயம், புறக்கணிப்பு, ஏமாற்றம் - அத்தனைக்கும் பதிலடியாக ஒரு கம்பேக்! சாதித்தது எப்படி?

கடந்த இரண்டு ஆண்டுகளுமே புறக்கணிப்புகள் நிரம்பிய வேதனைமிக்க நாள்களாகவே குல்தீப்பிற்கு இருந்தன. இந்நிலையில்தான் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் குல்தீப் யாதவை 2 கோடி கொடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது.

Published:Updated:
Kuldeep Yadav | குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ், இந்த சீசனில் கம்பேக் கொடுத்திருக்கும் வீரர்களில் மிக முக்கியமானவர். 8 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். டெல்லி அணி வென்றிருக்கும் 4 போட்டிகளிலுமே குல்தீப் யாதவ்தான் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். குல்தீப் கட்டுக்கோப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தால் டெல்லி வெல்லும். குல்தீப் தவறும்பட்சத்தில் டெல்லியும் தவறிப்போகும். இதுதான் தற்போதைய நிலையாக இருக்கிறது. இதுபோக பர்ப்பிள் தொப்பிக்கான ரேஸிலும் சஹாலுடன் விறுவிறுப்பாக மோதிக் கொண்டிருக்கிறார் குல்தீப்.

குல்தீப் யாதவ் இளம் வீரராக இருந்தாலும் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே வயதுக்கு மீறிய அனுபவத்தை பெற்றவர் எனக் கூறலாம். முற்றிலுமாக நம்பிக்கையளிக்கப்பட்டு 'இனி நீங்கள்தான் எல்லாமே' என குல்தீபை பார்த்து கூறிவர்கள் எல்லாருமே அவரை கைவிட்டிருக்கிறார்கள். கொல்கத்தா அணியில் மெயின் ஸ்பின்னராக இருந்தார். 2020 சீசனுக்கு முன்பு வரை கொல்கத்தா ஆடும் பெரும்பாலான போட்டிகளில் ஆடி வந்தார். நன்றாக பெர்ஃபார்மும் செய்தார். 2019 சீசனில் மட்டும் கொஞ்சம் சுமாராக வீசியிருந்தார். இந்நிலையில்தான் 2020 சீசனில் கொல்கத்தா அணிக்குள் வருண் சக்கரவர்த்தி வருகிறார். மிஸ்ட்ரி ஸ்பின்னர் என்கிற அடையாளத்துடன் அணிக்குள் வந்த ஒன்றிரண்டு போட்டிகளிலேயே மிகச்சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார். அணியின் முதல் ஆப்சனாக வருண் மாறினார். குல்தீப் இரண்டாம்பட்சமானார். பென்ச்சிலேயே தொடர்ந்து உட்கார வைக்கப்பட்டார்.

Kuldeep Yadav | குல்தீப் யாதவ்
Kuldeep Yadav | குல்தீப் யாதவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த 2020 சீசனில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். அடுத்து 2021 சீசன் தொடங்குகிறது. இந்த சீசனில் நிலைமை இன்னும் மோசமானது.

முதல் பாதி ஐ.பி.எல்-ல் ஒரு போட்டியில் கூட குல்தீப்பிற்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாம் பாதி தொடங்குவதற்கு முன் கால் முட்டியில் காயம் ஏற்பட்டதால் அந்த சீசனிலிருந்தே குல்தீப் ஒதுங்கினார்.

ஒரு பக்கம் ஐ.பி.எல் இப்படி ஏமாற்றம் கொடுக்க, இன்னொரு பக்கம் இந்திய அணியிலும் குல்தீப் யாதவ் சரிவை சந்திக்கத் தொடங்கினார். அத்தனை ஊடகவியலாளர்களும் கூடியிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில்,

இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ஒரு ஸ்பின்னருக்கு மட்டும்தான் இடம் உண்டெனில், அந்த ஒரு ஸ்பின்னர் குல்தீப் யாதவாகத்தான் இருப்பார்.
ரவி சாஸ்திரி

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, அஷ்வின் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு குல்தீப் பற்றி இப்படிப் பெருமிதம் பொங்கப் பேசியிருப்பார். 400 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியிருந்த ஒரு சீனியர் ஸ்பின்னருக்கு மேலாக குல்தீப் யாதவ் மதிப்பிடப்பட்டார். ஆனால், அந்த நம்பிக்கைக்கான பலனை குல்தீப் யாதவ் முழுமையாக அனுபவிக்கவே இல்லை. ரவிசாஸ்திரி இப்படி பேசியதற்கு பிறகு விரல்விட்டு எண்ணும் வகையிலான போட்டிகளில் மட்டுமே குல்தீப் ஆடியிருந்தார். அனைத்து ஃபார்மெட்களிலும் அஷ்வின் கம்பேக் கொடுத்தார். வருண் சக்கரவர்த்தி, ராகுல் சஹார், வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களுக்கு பிரதானமான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. குல்தீப் யாதவ் ஓரங்கட்டப்பட்டார்.

Kuldeep Yadav | குல்தீப் யாதவ்
Kuldeep Yadav | குல்தீப் யாதவ்
DC

கடந்த இரண்டு ஆண்டுகளுமே இப்படிப் புறக்கணிப்புகள் நிரம்பிய வேதனைமிக்க நாள்களாகவே குல்தீப்பிற்கு இருந்தன. இந்நிலையில்தான் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் குல்தீப் யாதவை 2 கோடி கொடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது.

கொல்கத்தா அணி குல்தீப் யாதவை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என நினைக்கிறோம். நாங்கள் அந்தக் குறையை போக்குவோம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம்

எனக் கூறியே குல்தீப்பை டெல்லி வாங்கியது. சொன்னதை போலவே மிகச்சரியாக குல்தீப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அத்தனை போட்டியிலும் நீ ஆடப்போகிறாய் எனும் உறுதியை குல்தீப்பிற்கு ரிக்கி பாண்டிங் கொடுத்தார். மும்பைக்கு எதிரான முதல் போட்டியிலேயே 4 ஓவர்களை வீசி வெறும் 18 ரன்களை மட்டுமே கொடுத்து ரோஹித் சர்மா, பொல்லார்ட், அன்மோல்ப்ரீத் என முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். அந்தப் போட்டியிலேயே குல்தீப்பிற்குத்தான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. அங்கிருந்து டெல்லி வென்ற அத்தனை போட்டிகளிலுமே குல்தீப்தான் ஆட்டநாயகன். கொல்கத்தாவிற்கு எதிராக டெல்லி இரண்டு போட்டிகளில் ஆடி முடித்திருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் மட்டும் குல்தீப் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை இரண்டு போட்டியிலுமே முக்கியமான கட்டத்தில் வீழ்த்தி ஆட்டத்தையே மாற்றிக் கொடுத்திருந்தார்.

Kuldeep Yadav | குல்தீப் யாதவ்
Kuldeep Yadav | குல்தீப் யாதவ்
DC
கொல்கத்தாவிற்கு எதிராகக் கடைசியாக ஆடிய போட்டியில் 3 ஓவர்களை மட்டுமே வீசி 14 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். இன்னும் ஒரு ஓவரை வீசியிருந்தால் இந்த சீசனில் மிகச்சிறந்த ஸ்பெல்லை வீசிய பெருமையும் கூட குல்தீப்பிற்குக் கிடைத்திருக்கக்கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குல்தீப் திடீரென இப்படி விஸ்வரூபம் எடுத்தது எப்படி?

இதற்கான விடையை குல்தீப்பின் இளமைகால பயிற்சியாளரே கூறியிருக்கிறார். கடந்த ஐ.பி.எல் சீசனில் ஆட முடியாமல் காயம் காரணமாக குல்தீப் ஒதுங்கிய சமயத்தில் கான்பூருக்கு சென்றிருக்கிறார். அங்கே தன்னுடைய பயிற்சியாளரோடு தனது பந்துவீச்சின் பலவீனங்களையும் கண்டறியும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதில் ஒரு விஷயம் புலப்படுகிறது. குல்தீப் கொஞ்சம் மெதுவாக வீசுவதுதான் பிரச்னை என்பதைக் கண்டடைகின்றனர். வழக்கத்தை விட 5 கி.மீ வேகத்தை கூட்டுவதற்கான பயிற்சியில் குல்தீப் இறங்கினார். இந்த வேகமாற்றம் கைக்குள் சிக்கியவுடன் இதே வேகத்தோடு குட்லெந்தில் சீராக பிட்ச் செய்யும் பயிற்சியில் இறங்கினார். இதுபோக இன்னும் சில நுணுக்கமான டெக்னிக்கல் மாற்றங்களை தனது பந்துவீச்சில் ஏற்படுத்திக் கொண்டார். இந்த மாற்றங்களோடு உள்ளூருக்குள் நடக்கும் போட்டிகளில் ஆடி பழக்கப்பட்டுக் கொண்டார். ஐ.பி.எல் வந்தது. டெல்லி குல்தீப்பை டிக் அடித்தது. அதன்பிறகு, நடந்ததையெல்லாம் எல்லாரும் பார்த்துவிட்டோம்.

குல்தீப் மனதளவில் ரொம்பவே சென்சிட்டிவ் ஆனவர். ஒருமுறை மொயீன் அலி குல்தீப்பின் ஓவரில் அடித்த அடியில் மைதானத்திலேயே அமர்ந்து குழந்தை போல கண்ணீர் சிந்தியிருப்பார். ஆனால், இப்போது அவர் அப்படியில்லை. தொடர்ச்சியான ஏமாற்றங்கள் அவரை பக்குவப்படுத்தியிருக்கின்றன.
Kuldeep Yadav | குல்தீப் யாதவ்
Kuldeep Yadav | குல்தீப் யாதவ்
DC
இப்போது அவர் பந்தில் சிக்ஸர் போனால், சிக்ஸரான அந்த பந்தை நினைத்து நொடிந்து போகாமல் அடுத்த பந்தில் விக்கெட் எடுக்க என்ன செய்ய வேண்டும் எனச் சிந்திக்கிறார். அதுதான் குல்தீப்பின் சக்சஸ் சீக்ரெட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism