Ipl-2021 banner
Published:Updated:

ஏப்ரல் 9 முதல் மே 30 வரை ஐபிஎல் 2021... சென்னையில் போட்டிகள் நடக்குமா?!

ஐபிஎல்
ஐபிஎல்

2021 ஐபிஎல் ஏப்ரல் 9-ம் தேதி, வெள்ளிக்கிழமை மும்பையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப்போட்டி மே-30ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது.

2021 ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை கிட்டத்தட்ட இறுதிசெய்யப்பட்டுவிட்டது. மார்ச் 8-ம் தேதி அதாவது இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் முடிவடையும் நாளில் ஐபிஎல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் முடிவடைந்துவிட்டது.

இந்தமுறை ஜூன் முதல் வாரம் வரை ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், இப்போது இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருப்பதால் மே இறுதிக்குள் ஐபிஎல் முடிவடையும் வகையில் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2021 ஐபிஎல் ஏப்ரல் 9-ம் தேதி, வெள்ளிக்கிழமை மும்பையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப்போட்டி மே-30ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது.

ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் போட்டிகள் இந்தமுறை மகாராஷ்டிராவில் உள்ள நான்கு மைதானங்கள், குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் என இரண்டு மாநிலங்களில் மட்டுமே நடக்கும் எனத்தெரிகிறது. அதேநேரம் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி ஆகிய நகரங்களையும் இறுதிசெய்துவைத்திருக்கிறது பிசிசிஐ. ஆனால், இறுதிமுடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னையில் இந்தமுறை ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்பதற்கான விடைகிடைக்க இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கவேண்டும்.

மார்ச் 9-ம் தேதி அல்லது அதற்கு முன்னராக ஐபிஎல் 2021 அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு