Published:Updated:

IPL 2021: ராணா - திரிபாதியின் கொல்கத்தா கொண்டாட்டம்; வார்னர் சொதப்பலில் வீழ்ந்த ஹைதராபாத்! #SRHvKKR

#SRHvKKR | IPL 2021

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 2021 சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். போட்டியின் சுவாரஸ்ய மொமன்ட்டுகள் இங்கே! #SRHvKKR

IPL 2021: ராணா - திரிபாதியின் கொல்கத்தா கொண்டாட்டம்; வார்னர் சொதப்பலில் வீழ்ந்த ஹைதராபாத்! #SRHvKKR

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 2021 சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். போட்டியின் சுவாரஸ்ய மொமன்ட்டுகள் இங்கே! #SRHvKKR

Published:Updated:
#SRHvKKR | IPL 2021

* சென்னை சேப்பாக்கம் மைதானம் மெதுவாகவும் ஸ்பின்னுக்கு சாதகமான தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்பதால், வார்னர் மற்றும் இயான் மோர்கன் இருவருமே அணித்தேர்வில் ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். கேன் வில்லியம்சனை பென்ச்சில் உட்கார வைத்துவிட்டு ஆஃப் ஸ்பின்னரான நபியை ரஷித் கானோடு ப்ளேயிங் லெவனில் சேர்த்திருந்தார் வார்னர். ஹர்பஜன் சிங், ஷகிப்-அல்-ஹசன், வருண் சக்கரவர்த்தி என மூன்று ஸ்பின்னர்களை தேர்வு செய்திருந்தார் இயான் மோர்கன்.

* டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் பௌலிங்கைத் தேர்வு செய்திருந்தார். போட்டி தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே இந்த முடிவு தவறு என்பதை உணர்ந்துவிட்டார். பிட்ச் பெரிதாக பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. புவனேஷ்வர் குமாரும், சந்தீப் ஷர்மாவும் தொடர்ந்து ஸ்விங் செய்ய பார்த்து ஏமாற்றமே அடைந்தனர். இதை கொல்கத்தா அணியின் ஓப்பனர்களான ஷுப்மன் கில்லும் நிதிஷ் ராணாவும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். பவர்ப்ளேயிலேயே 50 ரன்களை கடந்தது இந்தக் கூட்டணி. சந்தீப் ஷர்மாவின் ஒரே ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்து அசத்தியிருந்தார் நிதிஷ் ராணா.

நிதிஷ் ராணா, ஷுப்மன் கில் | #SRHvKKR | IPL 2021
நிதிஷ் ராணா, ஷுப்மன் கில் | #SRHvKKR | IPL 2021

* பவர்ப்ளே முடிந்தவுடனேயே ஷுப்மன் கில் வெளியேறினாலும் நித்திஷ் ராணா நிலைத்து நின்று அதிரடி காட்டினார். ஓவருக்கு ஒரு பவுண்டரி சிக்ஸர் என அடித்து ஆடிய நிதிஷ் ராணா விஜய் சங்கரின் ஓவரில் ஸ்கொயர் லெகில் ஒரு சிக்ஸரைத் தூக்கிவிட்டு அரைசதத்தை நிறைவு செய்தார். அரைசதத்தை கடந்த பிறகு கியரை மாற்றி இன்னும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். ராணாவின் விக்கெட்டுக்காக வார்னர் என்னென்னவோ முயற்சி செய்து ஒன்றும் பலிக்கவில்லை. 56 பந்துகளில் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நபியின் ஓவரில் லாங் ஆஃபில் பெரிய சிக்ஸருக்கு முயன்று கேட்ச் ஆகி வெளியேறினார் ராணா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* இந்தப் போட்டியில் மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது ராகுல் திரிபாதியின் இன்னிங்ஸே. ஓப்பனிங்கில் கில்லும் ராணாவும் அதிரடியாக ஆடி 50 ரன்களைக் கடந்துவிட்டதால் விக்கெட் விழுந்தால் தொடர்ந்து அதிரடியாக ஆட மோர்கன் அல்லது தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவரே வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நம்பர் 3 இல் எந்த மாற்றமுமின்றி ராகுல் திரிபாதியே இறக்கிவிடப்பட்டார். அவரும் தனது வழக்கமான ஆட்டத்தை விட்டுவிட்டு அதிரடியில் அசத்தினார். சந்தித்த இரண்டாவது பந்தையே சிக்ஸராக்கிய திரிபாதி ராணாவுடன் போட்டிப் போட்டு சன்ரைசர்ஸின் பௌலிங்கை வெளுத்தெடுத்தார். புவனேஷ்வர் குமாரின் ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் சிக்ஸரை அடித்து அரைசதத்தை கடந்து மிரட்டினார்.

* புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, நபி, நடராஜன் என சன்ரைசர்ஸின் அத்தனை பௌலர்களும் அடிவாங்க ரஷித் கான் மட்டுமே ஒற்றை ஆளாக நின்று கொல்கத்தா பேட்ஸ்மேன்களை பயமுறுத்தினார். பவர்ப்ளேயிலேயே அரைசதம் கடந்து அசத்திய கில் மற்றும் ராணா கூட்டணியை ரஷீத் கானே உடைத்தார். ஒரு சரியான கூக்ளியில் ஷுப்மன் கில்லை ஏமாற்றி ஸ்டம்புகளை சிதறடித்தார். ரன்ரேட் சிறப்பாக இருந்த நிலையில் ரஸல் க்ரீஸுக்குள் வந்திருந்தார். அவர் அதிரடி காட்டினால் கொல்கத்தாவின் ஸ்கோர் 200ஐ தாண்டிவிடும் என்றிருந்த நிலையில், மூன்றே பந்தில் அவரையும் காலி செய்து பெவிலியனுக்கு அனுப்பினார் ரஷீத் கான். 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 மிக முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தார் ரஷீத் கான்.

ரஷித் கான் | #SRHvKKR | IPL 2021
ரஷித் கான் | #SRHvKKR | IPL 2021

* 188 ரன்களை சன்ரைசர்ஸ் அணிக்கு டார்கெட்டாக கொடுத்திருந்த கொல்கத்தா அணி பந்துவீச்சை சிறப்பாகத் தொடங்கியது. பவர்ப்ளேக்குள்ளாகவே சன்ரைஸர்ஸின் ஓப்பனர்களான வார்னர் மற்றும் விருத்திமான் சஹாவின் விக்கெட்டை வீழ்த்தியது கொல்கத்தா அணி. ப்ரசித் கிருஷ்ணாவின் ஷார்ட் பாலில் வார்னர் எட்ஜ்ஜாகி அவுட் ஆனார். இரண்டு சீசன்களுக்கு பிறகு ஐபிஎல்-லுக்கு கம்பேக் கொடுத்துள்ள ஷகிப்-அல்-ஹசன் தான் வீசிய முதல் பந்திலேயே விருத்திமான் சஹாவின் விக்கெட்டை காலி செய்தார்.

* சன்ரைசர்ஸ் அணியின் மொத்த ரன்களில் 27.6 சதவிகித ரன்கள் வார்னர் அடித்தது. அந்தளவுக்கு வார்னரை மட்டுமே பெரியளவில் நம்பியிருந்த சன்ரைசர்ஸ் அணி வார்னர் சீக்கிரம் அவுட் ஆகிவிட்டதால் திணறிவிடும் என்று நினைக்கையில், மனீஷ் பாண்டேவுடன் கூட்டணி போட்டு பேர்ஸ்ட்டோ மிரட்டினார். ரஸல் ஷார்ட் பிட்ச்சாகத் தொடர்ந்து வீச அவரின் ஓவரை வெளுத்தெடுத்துவிட்டார் பேர்ஸ்ட்டோ. கம்மின்ஸ், ப்ரசித் கிருஷ்ணா என அத்தனை பேரையுமே அடித்து துவம்சம் செய்தார். பவர்ப்ளே முடிவில் 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சன்ரைசர்ஸ் அணி பேர்ஸ்ட்டோவின் அதிரடியால் 12-வது ஓவரிலேயே 100 ரன்களை கடந்துவிட்டது. பேர்ஸ்ட்டோ நின்றால் வெற்றி உறுதி என்றிருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் வீசிய ஒரு ஷார்ட் பாலில் பெரிய ஷாட்டுக்கு முயன்று 55 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார் பேர்ஸ்ட்டோ.

பேர்ஸ்ட்டோ | #SRHvKKR | IPL 2021
பேர்ஸ்ட்டோ | #SRHvKKR | IPL 2021

* ஏறக்குறைய கொல்கத்தாவின் வெற்றி உறுதியாகியிருந்த நிலையில், சன்ரைசர்ஸின் இளம் வீரரான அப்துல் சமத் ஒரு கேமியோ ஆடி கொல்கத்தாவை பயமுறுத்துவிட்டார். 19-வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீச, தான் சந்தித்த முதல் பந்தையே மிட்விக்கெட் மேல் சிக்ஸராக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அதே ஓவரின் நான்காவது பந்தை பேட் கம்மின்ஸ் யார்க்கராக வீச தோனி மாதிரி ஸ்ட்ரெயிட் சிக்ஸராக்கி உறைய வைத்தார். சமத்தால் சன் ரைசர்ஸ் அணியை வெற்றி பெற வைக்க முடியாவிட்டாலும் கொல்கத்தாவுக்கு ஒரு பயத்தைக் காட்ட முடிந்தது.

* ரஸல் வீசிய முதல் ஓவரை பேர்ஸ்ட்டோ கிழித்தெடுத்திருந்தாலும் கடைசி கட்டத்தில் அவர் வீசிய இரண்டு ஓவர்களையும் ரொம்பவே பொறுப்பாக வீசியிருந்தார். 18 ஓவரில் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். அந்த ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து விஜய் சங்கரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். பேட் கம்மின்ஸையே பறக்கவிட்ட சமத் க்ரீஸில் இருக்கும் போதும் கடைசி ஓவரை மிகச்சிறப்பாக வீசி முடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்தார்.

மணிஷ் பாண்டே | #SRHvKKR | IPL 2021
மணிஷ் பாண்டே | #SRHvKKR | IPL 2021

* சன்ரைசர்ஸ் அணியின் தோல்விக்கு வார்னர் சொதப்பியது மிக முக்கிய காரணம். அதேநேரத்தில், வார்னரின் விக்கெட்டுக்கு பிறகும் கூட பேர்ஸ்ட்டோவின் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணியின் ரன்ரேட் சிறப்பாகவே இருந்தது. அப்படியிருந்தும் ஸ்கோரை சேஸ் முடியாததற்கு மணிஷ் பாண்டே முக்கிய காரணமாக அமைந்தார். பேர்ஸ்ட்டோவுக்கு சப்போர்ட்டாக ரிஸ்க் எடுக்காமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஆடிக்கொண்டுந்த மணிஷ் பாண்டே, பேர்ஸ்ட்டோ அவுட் ஆன பிறகும் அப்படியே ஆடிக்கொண்டிருந்தது பின்னடைவாக அமைந்தது. 44 பந்துகளில் 61 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார் மணிஷ். நல்ல செட்டில் ஆகியிருந்த அவர் கொஞ்சம் பேட்டை விளாசியிருந்தால் வெறும் 10 ரன்கள் வித்தியாசத்தில் ஏற்பட்ட இந்தத் தோல்வியை சன்ரைசர்ஸ் அணி தவிர்த்திருக்க முடியும்.