Published:Updated:

SRH v RCB: 5 ஓவர்களில் 7 விக்கெட்... சன்ரைசர்ஸ் போல் சொதப்ப முடியுமா?!

SRH v RCB
SRH v RCB

24 பந்துகளில் 35 ரன்கள் தேவை. கையில் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன. இவையெல்லாம் போக, எதிரணி ராயல் சேலஞ்சர்ஸ்! இதைவிட ஜெயிப்பதற்கு என்னவேண்டும்? ஆனால், இந்தப் போட்டியையும் கூட தோற்றிருக்கிறது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

சன்ரைசர்ஸ், கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? வெற்றியைப் புறந்தள்ளி தோல்வியைத் தேடிக்கொண்டிருக்கின்றன இந்த இரு அணிகளும். முதலில் நைட்ரைடர்ஸ் மும்பைக்கு எதிராக சொதப்ப, அடுத்த நாளே, பெங்களூருக்கு 2 புள்ளிகளைத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறது சன்ரைசர்ஸ் ஐதராபாத். இந்தப் போட்டியைப் பற்றி இந்த வீடியோவில்...

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 149 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் தடுமாறினாலும், கடைசிவரை களத்திலிருந்து, அந்த அணி ஓரளவு சுமாரான ஸ்கோரை அடிக்க உதவினார் மேக்ஸ்வெல். அரைசதமும் அடித்து அசத்தினார். ரஷீத் கான், ஷபாஸ் நதீப் சிறப்பாகப் பந்துவீசியதால், பெங்களூரு அணி மிடில் ஓவர்களில் தடுமாறியது.

வார்னர், மனீஷ் பாண்டே கூட்டணி நன்றாக ரன் சேர்த்ததால், சன்ரைசர்ஸ் அணி எளிதாக வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 24 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. கையில் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன. இவையெல்லாம் போக, எதிரணி ராயல் சேலஞ்சர்ஸ்! இதைவிட ஜெயிப்பதற்கு என்னவேண்டும்? ஆனால், இந்தப் போட்டியையும் கூட தோற்றிருக்கிறது சன்ரைசர்ஸ் ஐதராபாத். இடது கை ஸ்பின்னர் ஷபாஸ் அஹமது ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி போட்டியை மாற்றிவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு