Published:Updated:

IPL 2021: ஓப்பனிங் மேட்ச்னா அப்படித்தான்... ஒதுங்கிய மும்பை; கணக்கைத் துவக்கிய கோலி & கோ! #MIvRCB

#MIvRCB | IPL 2021

கோலி 33, மேக்ஸி 39 எனப் பெங்களூருவை வெற்றியை நோக்கி நெருக்கி அழைத்து வந்தனர். அதிலும், மேக்ஸ்வெல் ஸ்விட்ச் ஹிட் எல்லாம் அடித்து, "வாள் தூக்கி நின்னான் பாரு" எனக் கிளாப் தட்ட வைத்தார்.

IPL 2021: ஓப்பனிங் மேட்ச்னா அப்படித்தான்... ஒதுங்கிய மும்பை; கணக்கைத் துவக்கிய கோலி & கோ! #MIvRCB

கோலி 33, மேக்ஸி 39 எனப் பெங்களூருவை வெற்றியை நோக்கி நெருக்கி அழைத்து வந்தனர். அதிலும், மேக்ஸ்வெல் ஸ்விட்ச் ஹிட் எல்லாம் அடித்து, "வாள் தூக்கி நின்னான் பாரு" எனக் கிளாப் தட்ட வைத்தார்.

Published:Updated:
#MIvRCB | IPL 2021

ஆறு மாத இடைவெளியில், அடுத்த ஐபிஎல். கொரோனா புண்ணியத்தில் இந்த முறை இந்தியாவில் நடந்தாலும், பார்வையாளர்களுக்கு NO WAY போர்டு மாட்டிவிட்டது பிசிசிஐ. முதல் போட்டியே பேதி பேபி என்பது போல், மும்பை வெர்சஸ் பெங்களூரு. HOME GROUND ADVANTAGEக்கு தடை என்பதால், போட்டி சென்னையில். சரி, STATS பார்த்து மனதைத் தேற்றுவோம், என அந்தப் பக்கம் போய் பார்த்தாலும், மும்பை தொடர்ச்சியாக ஐந்து போட்டிகள் வென்றும், பெங்களூரு தொடர்ச்சியாக ஐந்து போட்டி (வேறென்ன) தோல்விதான். அதே சமயம் மும்பை தன் கடைசி 9 சீசன்களிலும் முதல் மேட்சை வென்றதே இல்லை என்ற கறுப்பு சரித்தரம் சிவப்பு சட்டை ஃபேன்ஸை பாப்கார்ன் தேட வைத்தது. உடம்பை இரும்பாக்கிகட கிரிகால என ஆரம்பமானது இந்த சீசனின் முதல் போட்டி.

#MIvRCB | IPL 2021
#MIvRCB | IPL 2021

ஸ்வீட் சர்ப்பரைஸாக டாஸ் வென்றார் கோலி. மேக்ஸி, ஏழு அடி கைல் ஜேமிசன், உலகம் முழுக்க கலக்கிக்கொண்டிருக்கும் டேனியல் கிறிஸ்டன் மூவரையும் ஓவர்சீஸ் என்ட்ரி ஆகினார் கோலி. கொரோனாவிலிருந்து மீண்டு வந்தாலும், படிக்கல்லுக்கு ரெஸ்ட் கொடுத்து ரஜத் படித்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மும்பை சார்பாக லின்னும், 7 அடி மார்கோ ஜேன்சனும் களம் கண்டனர்.

ரோஹித்தும், லின்னும் பவர்ப்ளேவில் ஸ்டிரைக் ரொட்டேட் மட்டும் செய்து கொண்டிருக்க, ஆட்டத்துல வேலு இல்லாததால் ஒரே போரிங் கணக்காக, சஹால் எண்ட்ரி. லின் ஒரு பவுண்டரி, ரோஹித் ஒரு சிக்ஸ் என டாப் கியர் போட்டுத் தூக்க, ரோஹித் சிங்கிளுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்த சஹால் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்த ஓவர் யார் வீசுவார்கள் என எப்போதும் பேட்ஸ்மேனுக்கு ஒரு பதற்றம் இருக்கும். பார்வையாளர்களுக்குக்கூட அவ்வப்போது அந்த பதற்றம் வரும். ஆனால், கோலி அணியில் மட்டும் பௌலர்களே பதற்றம் அடைவார்கள். சுந்தரை டீமில் எடுப்பார். ஒரே ஒவர்தான் தருவார். பேட்டிங்கின் போது ஓப்பனராக இறக்கிவிடுவார். லின்னும் ஒன்டவுனில் வந்த சூர்யகுமாரும் அடித்து ஆட ஆரம்பித்தனர்.

இன்னும் பந்துவீசாமல் இருப்பது, கோலி, மேக்ஸி, வில்லிதான். சரி, சுந்தரை அனுப்புவோம் என முடிவு எடுத்தார் கோலி. கிடைத்த வாய்ப்பை ஃபீல்டருக்காகக் காத்திராமல் C&B முறையில் லின்னைக் காலி செய்தார். மும்பை பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை என்றாலும், பெங்களூரு அணியின் ஃபீல்டிங் மகா சொதப்பல். கோலி மேற்கொண்டு சுலபமான கேட்சைவிட்டார்.

#MIvRCB | IPL 2021
#MIvRCB | IPL 2021

கடைசி நான்கு ஓவர்களில் மும்பையால் 24 ரன்கள்தான் அடிக்க முடிந்தது. அதிலும் ஹர்சல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் நான்கு டிஸ்மிசல் உட்பட 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இஷான் கிஷன், பாண்டியா பிரதர்ஸ், பொல்லார்டு, ஜென்சன் என ஹர்ஷல் முதல் முறையாக ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

160 ரன்கள் என்னும் எளிய இலக்கை சேஸ் செய்ய கோலியுடன் களமிறங்கினார் வஷி. திடீர் ஐடியாவா என தெரியவில்லை. 16 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து அவுட்டானார். படிக்கல் மாற்றாக வந்த படித்தரும் சிங்கிள் டிஜிட். அடுத்தது மேக்ஸி. மௌக்கா மௌக்கா என கோரஸாக பழைய பல்லவியைப் பாடத் தயாராகினர் பெங்களூரு ரசிகர்கள். ஆனால், I had other ideas என பழைய ஃபார்ம் நோக்கி நகர்ந்தார் மேக்ஸ்வெல். கோலி 33, மேக்ஸி 39 எனப் பெங்களூருவை வெற்றியை நோக்கி நெருக்கி அழைத்து வந்தனர். அதிலும், மேக்ஸ்வெல் ஸ்விட்ச் ஹிட் எல்லாம் அடித்து, "வாள் தூக்கி நின்னான் பாரு" எனக் கிளாப் தட்ட வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிறிஸ்டியன், டி வில்லியர்ஸ் இருவரை மட்டுமே நம்பவேண்டிய நிர்ப்பந்தம். உலகம் முழுக்க நடக்கும் எல்லா ப்ரிமியர் லீக் போட்டிகளிலும் அடித்து நொறுக்கும் கிறிஸ்டியன், பெங்களுரூவுக்கு மட்டும் ஒழுங்காக விளையாட மாட்டார் என்பதுதான் வரலாறு. அந்த வரலாற்றை இந்தப் போட்டியிலும் தொடர்ந்து 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். வழக்கம் போல ஒட்டு மொத்த அணியும் வில்லியைப் பார்க்க, அடித்து ஆரம்பித்தார் வில்லி.

#MIvRCB | IPL 2021
#MIvRCB | IPL 2021

18 பந்துகளில் 34 ரன்கள் தேவை. எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டி. ஆனால், தற்போது எல்லாம் முடிந்தது என்ற நிலை. அப்போதுதான் நான் இருக்கிறேனடா ஷெல்வமே, என போல்ட் வீசிய முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார் ஏபிடி. போல்ட் ஓவரில் 15 ரன்கள் அடித்து, போட்டியை பெங்களூரு பக்கம் திருப்பினார். இருங்கடா அடுத்து பும்ரா ஓவர் என மும்பை பாய்ஸ் கெத்துக்காட்ட, நான் அடிக்க போறதே அந்த ஓவர்தான் என இரண்டு பவுண்டரிகள் அடித்து அசத்தினார். பெங்களூரு ஜெயிச்சுடுமோ என்கிற நிலையில் ஜெய்மிசன் இந்தா வச்சுக்கோ என ரன் அவுட்டானார்.

#MIvRCB | IPL 2021
#MIvRCB | IPL 2021

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை. முதல் இன்னிங்ஸில் ஹர்சல் படேல் போட்டது ஒரு ஓவர் வேண்டும். நான்காவது பந்தில் இரண்டாவது ரன் எடுக்க ஆசைப்பட்டு, ரன் அவுட்டானார் ஏபிடி. க்ரூணால் பாண்டியா எறிந்த பந்து கிஷன் உதவியால் ஸ்டம்பை பதம் பார்த்தது. கடைசி பந்தில் ஒரு ரன், யார்க்கரைத் தட்டிவிட்டு, பெங்களூருவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார் ஹர்ஷல் பட்டேல்.

டெல்லியிலிருந்து டிரேட் ஆஃப் முறையில் பெங்களூரு விலைக்கு வாங்கிய இந்த ஹர்ஷல்தான் இன்றைய ஹீரோ. ஃபைபர்னா சும்மாவா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism