Ipl-2021 banner
Published:Updated:

IPL 2021: தொட்டதெல்லாம் பிரச்னை... கரையேறுமா கொல்கத்தா?!

KKR
KKR

மோர்கனின் பேட்டிங், முடிவுகள், ரஸலைப் பயன்படுத்தும் விதம், பந்துவீச்சில் உள்ள பிரச்னைகள் எனப் பல விஷயங்களை இந்த வீடியோவில் அலசியிருக்கிறோம்.

டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். முதலில் பேட்டிங் செய்த நைட்ரைடர்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதை 17-வது ஓவரில் சேஸ் செய்து புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது கேபிடல்ஸ். கடைசி 6 போட்டிகளில் ஐந்து தோல்விகளைச் சந்தித்திருக்கும் கொல்கத்தா அணியில் என்னதான் பிரச்னை? விரிவான அலசல் இந்த வீடியோவில்...

கொல்கத்தாவைப் பொறுத்தவரை பேட்டிங், பௌலிங் இரண்டு ஏரியாவிலும் தடுமாற்றம் நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் அணியின் முடிவுகளுமே அவர்களுக்குப் பாதகமாகத்தான் அமைந்துகொண்டிருக்கிறது. ஆக, அவர்களுக்குப் பிரச்னை என்பது இல்லாத இடமே இல்லை. ஒவ்வொரு பேட்டிங் ஆர்டருக்குமே தொடக்கம் என்பது மிகவும் முக்கியம். ஆனால், அது இவர்களுக்கு சரியாகக் கிடைக்கவில்லை. முதல் போட்டியிலேயே 80 ரன்கள் குவித்த நிதிஷ் ராணா, அதன்பிறகு தடுமாறத் தொடங்கிவிட்டார். இன்னொரு ஓப்பனர் சுப்மன் கில், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தைத் தவிர்த்து மற்ற அத்தனை ஆட்டங்களிலும் சொதப்பினார். இவர்கள் இருவரும் இன்னும் பொறுப்பாக ஆடினால் மட்டும்தான் பவர்பிளேவில் நல்ல ரன்ரேட் வரும்.

இதைவிடவுமே பெரிய பிரச்னை அவர்களின் மிடில் ஆர்டர். மோர்கன், ரஸல், தினேஷ் கார்த்திக் என பேப்பரில் பலமான, பயமுறுத்தும் மிடில் ஆர்டர். ஆனால், களத்தில் இன்னும் இவர்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. ரஸல் மட்டும் ஒரேயொரு அரைசதம் அடித்திருக்கிறார்.

இவை தவிர்த்து, மோர்கனின் பேட்டிங், முடிவுகள், ரஸலைப் பயன்படுத்தும் விதம், பந்துவீச்சில் உள்ள பிரச்னைகள் எனப் பல விஷயங்களை இந்த வீடியோவில் அலசியிருக்கிறோம்.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு