Ipl-2021 banner
Published:Updated:

CSK v RCB: ஒரே ஆளு, மொத்த டீமும் குளோஸ்! ஜடேஜா பெங்களூரை காலி செய்தது எப்படி?

Ravindra Jadeja
Ravindra Jadeja

மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் இரண்டு அட்டகாச பேட்ஸ்மேன்களை எப்படி வெளியேற்றினார் ஜடேஜா. எப்படி அவரால் ஒரு அசத்தலான பௌலிங் பெர்ஃபாமன்ஸ் கொடுக்க முடிந்தது?

ஒற்றை ஆளாக ஒரு டீமை காலி செய்திருக்கிறார் ஜடேஜா. டேபிள் டாப்பராக வலம் வந்துகொண்டிருந்த ராயல் சேலஞ்சர்ஸை பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என ஒவ்வொரு ஏரியாவிலும் அடித்து துவைத்து மொத்தமாக துவம்சம் செய்திருக்கிறார். டி-20 வரலாற்றில் மிகச் சிறந்த தனி நபர் பெர்ஃபாமன்ஸ்களுள் ஒன்றை எப்படி அரங்கேற்றினார் ஜட்டு... இந்த வீடியோவில் காணுங்கள்.

28 பந்துகளில் 62 ரன்கள் அடித்து அசத்தினார் ஜடேஜா. அதிலும் ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 37 ரன்கள். 5 சிக்ஸர், 1 பவுண்டரி என ரன்மழை பொழிந்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்தார் அவர். இந்தத் தொடரில் 5 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கும் ஹர்ஷல் படேலின் பந்துவீச்சையே ஜஸ்ட் லைக் தட் துவைத்தெடுத்தார். ஹர்ஷல் படேல் சரியாகப் போடவில்லை என்று கூறலாம். ஆனால், அவர் சிறப்பாகப் போட்ட சில பந்துகளையும் மிகத் தெளிவாக விளையாடினார். அந்தக் கடைசி ஓவரில் அப்படி என்ன செய்தார் ஜட்டு?

4 ஓவர் பந்துவீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் பௌலர் ஜடேஜா. வாஷிங்டன் சுந்தர், மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் என ஒவ்வொரு ஓவரிலும் ஒருவரை காலி செய்தார். மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் இரண்டு அட்டகாச பேட்ஸ்மேன்களை எப்படி வெளியேற்றினார் ஜடேஜா. எப்படி அவரால் ஒரு அசத்தலான பௌலிங் பெர்ஃபாமன்ஸ் கொடுக்க முடிந்தது? இந்த வீடியோவில் காணுங்கள்.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு