Published:Updated:

CSK v RR: தோனியின் கேப்டன்சி மாஸ்டர்கிளாஸ்! | IPL 2021

தோனி
தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 200-வது முறையாக வழிநடத்திய கேப்டன் தோனி, தன் அட்டகாசமான முடிவுகளால் போட்டியின் முடிவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தினார். அவர் முடிவுகள் பற்றிய அலசல் இந்த வீடியோவில்...

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். 200-வது முறையாக அணியை வழிநடத்திய கேப்டன் எம்.எஸ்.தோனி வழக்கம்போல் தன் சிறப்பான முடிவுகளால் ஆட்டத்தின் முடிவில் தாக்கம் ஏற்படுத்தினார். அவர் எடுத்த எந்த முடிவுகள் போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தின, விரிவான அலசல் இந்த வீடியோவில்...

ஜடேஜாவை பந்துவீச்சிலும், ஃபீல்டிங்கிலும் தோனி பயன்படுத்திய விதம் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது. சேஸிங்கின் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லர், ஜடேஜாவின் பந்துவீச்சை மிகவும் எளிமையாக எதிர்கொண்டார். ஜடேஜா வீசிய முதல் ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் பௌண்டரிகள் அடித்த பட்லர், அடுத்த ஓவரில் சிக்ஸர் விளாசினார். அதன்பிறகு ஈரமில்லாத புதிய பந்து கிடைக்க, தான் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே பட்லரை வெளியேற்றினார் ஜட்டு. அவரை தோனி மீண்டும் பந்துவீச வைத்ததன் காரணம் என்ன?

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் 8-வது ஓவரிலேயே பந்துவீசிய மொயின் அலி, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 11-வது ஓவரில் பந்துவீசினார். ஆனால், இந்தப் போட்டியில் 13-வது ஓவரில்தான் பந்துவீசினார். ஆரம்பத்தில் பந்தில் ஈரம் இருந்ததால், அதுவரை அவரை தோனி பயன்படுத்தாமல் இருந்தார். பட்லர் வெளியேறியதும், அடுத்த ஓவரிலேயே மொயீன் அலி கையில் பந்தைக் கொடுத்தார் தோனி. மில்லர் அவுட். அதுமட்டுமல்லாமல், 3 ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஃபீல்டிங்கில் தோனி ஏற்படுத்திய தாக்கம் என்ன? முழு அலசல் மேலே இருக்கும் வீடியோவில்..!

அடுத்த கட்டுரைக்கு