Published:Updated:

SRH v DC: வீணான வில்லியம்சன் போராட்டம்... சூப்பர் ஓவர்வரை போய் வென்ற டெல்லி!

Williamson ( IPL )

வில்லியம்சன் இன்று ஆடிய எல்லா ஷாட்டும் கலக்கல். ஸ்கொயர் லெக் திசையில் அடித்த ஸ்வீப் ஷாட், ஷார்ட் தேர்ட் மேன் திசையில் அடித்த ரிவர்ஸ் ஷாட் என எல்லாமே வாவ் ரகம்!

SRH v DC: வீணான வில்லியம்சன் போராட்டம்... சூப்பர் ஓவர்வரை போய் வென்ற டெல்லி!

வில்லியம்சன் இன்று ஆடிய எல்லா ஷாட்டும் கலக்கல். ஸ்கொயர் லெக் திசையில் அடித்த ஸ்வீப் ஷாட், ஷார்ட் தேர்ட் மேன் திசையில் அடித்த ரிவர்ஸ் ஷாட் என எல்லாமே வாவ் ரகம்!

Published:Updated:
Williamson ( IPL )
சென்னையில் ஐந்தாவது போட்டி சன் ரைசர்ஸ் அணிக்கு. ஆனாலும், அப்படியும் முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோற்றது. நான்காவது போட்டியில்தான் பிளேயிங் லெவனில் வில்லியம்சனை சேர்த்தார்கள். அந்தப் போட்டியில் மட்டும் இமாலய வெற்றி. வில்லியம்சன் விளையாடிய போட்டிகளில் 62% ஐதராபாத் வென்றிருக்கிறது. வில்லியம்சன் விளையாடாத 7 போட்டிகளில், ஒரு போட்டியில் மட்டுமே ஐதராபாத் வென்றிருக்கிறது.

ஆனாலும், பிளேயிங் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்கள்தான் என்பதால், அதிக குழப்பத்திலேயே அணியைத் தேர்வு செய்கிறார் வார்னர். நான்கில் மூன்று போட்டிகளில் வென்ற டெல்லி, லலித்துக்குப் பதில் அக்ஸர் பட்டேலை அணியில் சேர்த்து, டாஸ் வென்று பேட்டிங் என்றது. மூன்று முறை வெற்றிகரமாக சேஸ் செய்த டெல்லி, இந்தப் போட்டியில் பேட்டிங் ஃபர்ஸ்ட்தான் எடுத்தது. சேஸிங்கில் சொதப்பும் சன் ரைஸர்ஸின் மீது அவ்வளவு நம்பிக்கை டெல்லியின் ரிஷப் பண்ட்டுக்கு.

SRH v DC
SRH v DC

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலீல் அஹமது வீசிய முதல் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து 'ஓம் லாபம்' சொன்னார் பிருத்வி ஷா. அடுத்த ஓவர் அபிஷேக் ஷர்மா, அதிலும் பிருத்வி இரண்டு பவுண்டரி. முதல் ஐந்து ஓவரிலேயே 48 ரன்களைத் தொட்டது டெல்லி. புவிக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஜெகதீசா சுசித் ஓவரில் மட்டும்தான் ரன்கள் பெரிதாக போகவில்லை. வெறும் மூன்று ரன்கள். 35 பந்துகளில் அரைசதம் கடந்தார் பிருத்வி. அரைசதமோ, சதமோ கடந்துவிட்டால், பொறுப்பில்லாமல் பெரும்பாலும் அவுட் ஆகிவிடுவார் தவான். ஆனால், இந்த முறை பிருத்வி அரைசதம் கடந்ததும், ரஷீத் பந்தில் அவுட் ஆனார் தவான். அடுத்து ஜெகதீசா ஓவரில் பிருத்வி ரன் அவுட். ஸ்மித்தும், பண்ட்டும் சிறப்பான பார்ட்னர்ஷிப் நோக்கி ஸ்கோரை நகர்த்தினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடைசி இரண்டு ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், சித்தார்த் கவுல் பந்தில் ஜெகதீசாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் பண்ட். அதே ஓவரில் ஹிட்மெயரும், வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட். 19வது ஓவரில் வெறும் 3 ரன்கள். கடைசி ஓவரில் ஸ்மித் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து 160 ரன்களை ஐதராபாத்துக்கு டார்க்கெட்டாக ஃபிக்ஸ் செய்தார்.

SRH v DC
SRH v DC

இந்த சீசனில் 150, 149 ரன்களையே சேஸ் செய்ய இயலாத ஐதராபாத்துக்கு 160 டார்கெட். ஓவருக்கு எட்டு ரன்கள் அடிக்க வேண்டும். பேர்ஸ்டோ அதை உணர்ந்து அதிரடியாய் அடித்துக்கொண்டிருந்தார். ஆனால், ரன்னுக்கு வாய்ப்பில்லாத இடத்தில் வார்னரை ரன்னுக்கு அழைத்து, வார்னரை ரன் அவுட்டாக்கிவிட்டார். பவர்பிளேயின் கடைசி ஓவரை வீச வந்தார் அவேஷ் கான். முதல் பந்தில் வில்லியம்சன் பவுண்டரி. அடுத்த பந்தில் சிங்கிள், கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தாலும், வில்லியம்சன்னும் ரன் அவுட் ஆகியிருப்பார். அடுத்த பந்தில் பேர்ஸ்டோ லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸ். அடுத்த பந்தை கொஞ்சம் வேரியேஷனை மாற்றி ஃபுல்லாக வீசினார் அவேஷ் கான். மிட் ஆனில் இருந்த தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் பேர்ஸ்டோ. வார்னர், பேர்ஸ்டோ அவுட். வாயிற்கதவை உடைத்துவிட்டால், ஐதராபாத் மாளிகையில் அடுத்து தடுப்பு சுவர்கூட கிடையாது என்பது எல்லா அணிகளுக்கும் தெரியும்.

அது இன்றும் அப்பட்டமாய்த் தெரிந்தது. விராத் சிங் 14 பந்துகளில் 4 ரன்கள். சென்னை ரசிகர்களின் ஆதர்ஷ நாயகனான கேதார் ஜாதவ் 9 பந்துகளில் 9 ரன்கள் அடித்து ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார். அடுத்து வந்த அபிஷேக் ஷர்மா, அக்‌ஷர் பந்தில் எல்பிடபிள்யூ. 'ஐய்யய்யோ அடுத்து விஜய் ஷங்கர் வந்துவிடுவாரோ' எனப் பயந்தால், வந்து நின்றார் ரஷீத் கான். சரி, எதுனா ரன் வரும் என காத்திருந்தால், கோல்டன் டக். மீண்டும் ஒரு எல்பிடபிள்யூ. விஜய் ஷங்கரும் சிங்கிள் டிஜிட்டில் அவுட். அடுத்து என்ன அவ்ளோதான் என நினைக்கையில் உள்ளே வந்தார் ஜெகதீசா. அவேஷ் கான் பந்தில் இரண்டு பவுண்டரி. கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை. முதல் பந்தில் வில்லியம்சன் பவுண்டரி. சஞ்சு சாம்சன் போன்றோ, மோரிஸ் போன்றோ சிங்கிள் தருவதற்கு எல்லாம் யோசிக்கவில்லை வில்லியம்சன். அனைத்து பந்திலும் சிங்கிளைத் தேடினார். ஜெகதீசா மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ். அடுத்து மூன்று பந்துகளில் நான்கு ரன்கள்தான் தேவைப்பட்டன. ஆனாலும் போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது. ரிஷப் பண்ட்டால் இரண்டு முறை கடைசி ஓவரில் ஸ்டம்ப்பை நோக்கி சரியாக பந்தை வீச முடியவில்லை என்பது தனிக்கதை.

SRH v DC
SRH v DC

வில்லியம்சன்னும், வார்னரும் இறங்கினார். வார்னர் பெரிதாக கனெக்ட் செய்ய முடியவில்லை. வில்லியம்சன் மட்டும் ஒரு பவுண்டரி அடித்தார். மொத்தம் 8 ரன்கள் சேர்த்தனர். அதையும் அம்பயர் சரி பார்த்து, வார்னர் கடைசி ரன் சரியாக ஓடவில்லை என ஒரு ரன்னைக் கழித்துவிட்டார். ஆக, டார்கெட் 8.

தவானும், பண்ட்டும் களமிறங்கினர். வேறு யாரு இருக்கா என்பது போல், ரஷீத் கான் பந்து வீச வந்தார். ஷார்ட் தேர்ட் மேன் திசையில், ரிவர்ஸ் ஷாட்டில் ஒரு பவுண்டரி அடித்தார் பண்ட். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை. ஸ்வீப்பை மிஸ் செய்தாலும், ஓடி அந்த ரன்னை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார் தவான்.

Pant | SRH v DC
Pant | SRH v DC

வில்லியம்சன்னைப் பார்க்கத்தான் பாவமாய் இருந்தது. அவர் இன்று ஆடிய எல்லா பாலும் கலக்கல். ஸ்குயர் லெக் திசையில் அடித்த ஸ்வீப் ஷாட், ஷார்ட் தேர்ட் மேன் திசையில் அடித்த ரிவர்ஸ் ஷாட் என எல்லாமே வாவ் கலக்கல் ரகம்.

அணியின் பிளேயின் லெவன், செலக்டர்ஸ் முடிவு செய்வது. மணிஷ் பாண்டேவை அணியில் சேர்க்காதது தவறு என ஓப்பனாகவே தன் அதிருப்தியைப் பதிவு செய்தார் வார்னர்.

பிருத்வி ஷா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஐந்து போட்டிகளில் நான்கில் வென்று, நல்ல ரன் ரேட்டுடன் இருப்பதால், இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்.