Published:Updated:

வார்னர், சாஹா அதிரடி; சூறாவளியாய் சுழன்ற ரஷீத்... பிளேஆஃப்புக்கு மல்லுக்கட்டும் ஐதராபாத்! #SRHvDC

கார்த்தி
#SRHvDC
#SRHvDC

சென்னை அணியைத் தவிர எல்லா அணிகளுமே இந்த சீசனில் பிளே ஆஃபுக்குள் சென்றுவிட மாட்டோமா என குதிகாலில் வெந்நீரை ஊற்றி காத்துக்கொண்டிருக்கிறார்கள். #SRHvDC

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

8 போட்டிகள் வென்றால் பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றுவிடலாம் என்னும் போது, அதை நடக்க விடாமல் காய்களை ஐபிஎல்-லில் நகர்த்திவருகிறார்கள்.

கொல்கத்தா வெர்சஸ் டெல்லி கேப்பிடல்ஸ் போட்டியில் கொல்கத்தா வென்றது. சென்னை பெங்களூரு போட்டியில் சென்னை வென்றது. ராஜஸ்தான் மும்பை போட்டியில் ராஜஸ்தான் வென்றது. அதன் தொடர்ச்சியாக இன்றைய ஐதராபாத் டெல்லி போட்டியில் ஐதராபாத் வென்றுள்ளது. ஆக, சென்னை அணியைத் தவிர எல்லா அணிகளுமே இந்த சீசனில் பிளே ஆஃபுக்குள் சென்றுவிட மாட்டோமா என குதிகாலில் வெந்நீரை ஊற்றி காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

#SRHvDC
#SRHvDC

டாஸ் வென்ற டெல்லி ஃபீல்டிங் தேர்வு செய்தது. "நாங்களே பேட்டிங் பண்ணலாம்னுதான் இருந்தோம். தாங்ஸ்பா!" என்றார் ஐதராபாத்தின் வார்னர். இந்த சீசனின் அதிரடி பௌலரான ரபாடாவை அடித்து நொறுக்கினார் வார்னர். பஞ்சாபுடன் தோற்ற போட்டியை வார்னர் என்றைக்கும் மறக்க மாட்டார். பவர்பிளேயின் கடைசி ஓவரை ரபாடா வீச, அதில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 25 பந்தில் அரைசதம் கடந்தார். யார் ரிஸ்க் தந்தாலும், அவர்களை வீழ்த்த வருவார் அஷ்வின். அதே போல் வார்னரை அவுட்டாக்கினார். ஆனாலும், பீஸ்ட் மோடுக்கு மாறியிருந்தார் சாஹா. 87 ரன்களுக்கு சாஹா அவுட். மனிஷ் பாண்டே தன் பங்குக்கு 44 ரன்களை நடித்திருந்தார். 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது.

இரண்டு போட்டிகளில் சதம் அடித்த தவான், 'மறுபடியும் என்னைய வேலை வாங்கறீங்களா?' என்பது போல் வந்த வேகத்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். ஒன் டவுன் வந்த ஸ்டாய்ன்ஸ் நதீம் பந்தில் அவுட்டானார். அதே வார்னர்தான் கேட்ச். உலகின் எந்த மூலையிலும் ஒரு மலையாளி இருப்பார் என்ற பழமொழியில் உண்மையில்லை என்றாலும், ஐதராபாத் ஃபீல்டிங் செய்யும்போது எல்லா பக்கமும் வார்னர்தான் இருக்கிறார். ரஷீத் முதல் ஓவரிலேயே ஹெத்மெய்ர், ரஹானேவை வீழ்த்த 7 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி.

#SRHvDC
#SRHvDC

வழக்கம் போலவே ரஷீதின் ஓவரில் யாருமே எதுவும் அடிக்கவில்லை. ஓர் அணியின் அட்டாக்கிங் பௌலரை டார்கெட் செய்யும் போதுதான், மற்ற பௌலர்கள் மொத்தமாய் திணறுவார்கள். திவேதியா அப்படித்தான் அன்று ஆடினார். ஆனால், இங்கு ரஷீதின் முதல் ஓவரில் ஒரு ரன். இரண்டாவது ஓவரில் இரண்டு ரன். மூன்றாவது ஓவரில் மூன்று ரன் என ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி பாடிக்கொண்டு இருந்தார்கள். நான்காவது ஓவரில் மீண்டும் ஒரேயொரு ரன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொல்கத்தா கண்ணீர்... ஆனா, பஞ்சாப் செம ஹேப்பி அண்ணாச்சி! #KKRvKXIP

இந்த சீசனில் டெல்லியுடனான இரு ஆட்டங்களிலும் ரஷீத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். எட்டு ஓவர்களில் அவர் கொடுத்த மொத்த ரன்கள் எவ்வளவு தெரியுமா... வெறும் 20. டெல்லி ரஷீதிடமே தோற்றுவிட்டது. மீதி அணிதான் ஐதராபாத்துடன் விளையாடியது.

#SRHvDC
#SRHvDC

ஓவருக்கு பத்து ரன்களுக்கு மேல் தேவைப்பட்டாலும், ரன்களுக்கு பதிலாக விக்கெட்டுகள்தான் விழுந்துகொண்டிருந்தன. 'இதுக்கு மேல தாக்குப்பிடிக்க முடியாது குருநாதா' என்பது போல, 19 ஓவர் முடிவிலேயே 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது டெல்லி. ஆட்டநாயகனாக சாஹா தேர்வு செய்யப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு