Published:Updated:

IPL 2020: ஆட்டநாயகன் கெயிக்வாட், அதிரடி நாயகன் ஜட்டு... கொல்கத்தா நீ ரொம்ப பாவம்ப்பா! #CSKvKKR

#CSKvKKR

கடைசி 2 ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. ஃபெர்குஸன் ஓவரில் 20 ரன்கள். ஓவர் ஹைட் ஃபுல் டாஸுக்கு ஒரு ஃப்ரீ ஹிட் வேறு தண்டம் அழுதார். கிட்டத்தட்ட வெல்ல வேண்டிய போட்டியை, சென்னைக்குத் தாரை வார்த்துக்கொடுத்தார் ஃபெர்குஸன். #CSKvKKR

IPL 2020: ஆட்டநாயகன் கெயிக்வாட், அதிரடி நாயகன் ஜட்டு... கொல்கத்தா நீ ரொம்ப பாவம்ப்பா! #CSKvKKR

கடைசி 2 ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. ஃபெர்குஸன் ஓவரில் 20 ரன்கள். ஓவர் ஹைட் ஃபுல் டாஸுக்கு ஒரு ஃப்ரீ ஹிட் வேறு தண்டம் அழுதார். கிட்டத்தட்ட வெல்ல வேண்டிய போட்டியை, சென்னைக்குத் தாரை வார்த்துக்கொடுத்தார் ஃபெர்குஸன். #CSKvKKR

Published:Updated:
#CSKvKKR
Spoilsport என்றொரு வார்த்தை உண்டு. எப்போதும் பிளே ஆஃபில் சென்னை இருக்கும். எட்டாவதாக இருக்கும் ஏதோவொரு அணி, பிளே ஆஃபுக்குள் செல்ல தத்தளித்துக்கொண்டிருக்கும் அணிகளை spoilsport செய்து காலை வாரிவிடும். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல், இப்போது அந்த செம்பணி சென்னைக்குக் கிடைத்திருக்கிறது.

2020 ஐபிஎல்-லில் சென்னை நான்கு வெற்றிகளுடன் தன் 13வது போட்டியில் கொல்கத்தாவையும், 14வது போட்டியில் பஞ்சாபையும் சந்திக்கிறது. இரு அணிகளுமே சென்னையை வென்றால், சென்னையின் மிகமோசமான சீசனாக இது மாறிவிடும் (இல்லாவிட்டாலும் இதுதான் சென்னையின் மிக மோசமான சீசன்). அதே சமயம், சென்னை வென்றால், இரு அணிகளின் பிளே ஆஃப் கனவிலும் மண்ணைப் போட்ட திருப்தியில் வீடு திரும்பலாம். பாட்ஷா படத்தில் ரஜினி தீபம் ஏற்றுவது போல, கொல்கத்தாவுக்கு தற்போது பாயாசம் போட்டிருக்கிறது சென்னை.

#CSKvKKR
#CSKvKKR

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாஸ் வென்றதும் பௌலிங் என்றார் தோனி. டியூவில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை என்பது அவர் எண்ணம். டூ பிளெஸ்ஸி, தாஹீர், மோனுவுக்குப் பதில் வாட்டோ, லுங்கி, கரண் ஷர்மா மீண்டும் வாய்ப்பு பெற்றனர். கொல்கத்தாவில் பிரசீத் கிருஷ்ணாவுக்குப் பதிலாக ரிது சிங் பந்துவீச வாய்ப்புப் பெற்றார்.

முதல் ஓவர் சென்னையின் ஆஸ்தான தீபக் சஹார். மூன்று பவுண்டரிகளுடன் 13 ரன்கள். அடுத்த நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து கட்டுப்படுத்தி வைக்க, சாண்ட்னர் ஓவரில் 1 ரன் எடுத்து, பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் சேர்த்தனர் ரானாவும் கில்லும். கரண் பந்தில் கில் போல்டாக, வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்தார் நரைன். பிறகு என்ன அதே வந்த வேகத்தில், அடுத்த ஓவரில் சாண்ட்னர் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் நரைன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டூ டவுன் வந்த ரிங்கு சிங்கும் பெரிதாக சென்னைக்கு கஷ்டம் கொடுக்கவில்லை. முதல் ஓவரிலிருந்த அடித்து ஆடிய நிதிஷ் ரானா, கரணின் அடுத்த ஓவரில் ஸ்கெட்ச் போட்டிருந்தார். தொடர்ந்து மூன்று சிக்ஸ். அதிலும் இந்தப் பந்தை இப்படித்தான் அடிப்பேன் என்பது போல், வெளியே வந்து நிதானித்து ஓங்கி ஒரு அடி. 50 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்தவர், சட்டென 55 பந்துகளில் 77 ரன்களுக்குச் சென்றுவிட்டார். பின்பு சஹார் பந்தில் இரண்டு பவுண்டரி அடித்து சதம் நோக்கி செல்லும் வேகத்தில், லாங் ஆனில் நின்றுகொண்டிருந்த சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ̀வானம் தொட்டுப் போனா' என்பது போல மேலே சென்ற பந்து கிரவுண்டைத் தாண்டாமல், கிழே இறங்கியது. இருடா பொசிஷனுக்கு வந்துக்கறேன் என்பது போல், செட் ஆகி, அதை சுலபமாக பிடித்து அசத்தினார் சுட்டி கரண்.

#CSKvKKR
#CSKvKKR

இறுதிக்கட்டத்தில் டிகேயின் அதிரடி பவுண்டரிகளால் 172 ரன்களை எட்டியது கொல்கத்தா. துபாய் மைதானத்துக்கு ஓரளவு டீசண்டான டோட்டல்தான்.

வாட்டோவும் கெய்க்வாட்டும் ஓப்பனிங் இறங்கினார்கள். கம்மின்ஸ் வீசிய ஓவரில் பெரிய சேதாரம் இல்லை. நாகர்கொட்டி வீசிய ஓவரில் சிக்ஸ் அடித்தார் வாட்டோ. 'ஓ இன்னிக்கு தர்ஸ்டே இல்லை வாட்சன் டே என நினைத்தால்' இல்லை, 'இது நாகர்கொட்டி டே' எனப் பின்னால்தான் புரிந்தது.

ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வான வருணின் பந்துவீச்சில் இன்றும் அதே துல்லியம். வாட்டோ அவுட். நித்திஷ் ராணா பந்துவீச, ஒன் டவுன் வந்த அம்பதி ஹாட்ரிக் பவுண்டரி அடித்து 16 ரன்களை அணியின் ஸ்கோரில் சேர்த்தார். ஃபெர்குஸன் ஓவரில் பவுண்டரி, சிக்ஸ் என அடுத்த 50க்கு தயாரானார் கெய்க்வாட். கம்மின்ஸ் ஓவரில் மீண்டும் ஒரு ஹாட்ரிக் பவுண்டரி அடிக்கலாம் என ஜாலியான அம்பதியை மிட் ஆஃபில் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் நரைன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டூ டவுன் தோனி. தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் மீண்டும் போல்ட். ஆம், இந்த இரு அணிகள் சந்தித்த முதல் போட்டியிலும் வருணிடம் போல்ட் ஆனார் தோனி. என்னடா இதி, தோனிக்கி வந்த சோதனை. கம்மின்ஸ் பந்தில் 72 ரன்கள் எடுத்த கெய்க்வாட்டும் போல்டாக, கடைசி 2 ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. ஃபெர்குஸன் ஓவரில் 20 ரன்கள். ஓவர் ஹைட் ஃபுல் டாஸுக்கு ஒரு ஃப்ரீ ஹிட் வேறு தண்டம் அழுதார். கிட்டத்தட்ட வெல்ல வேண்டிய போட்டியை, சென்னைக்குத் தாரை வார்த்துக்கொடுத்தார் ஃபெர்குஸன்.

#CSKvKKR
#CSKvKKR

கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை. முதல் 3 பந்துகளில் சாம் 3 ரன்கள் மட்டுமே அடித்து, நாலாவது பந்தில் ஜடேஜா ரன் ஏதும் அடிக்காமல் பிரெஷர் ஏற்றி, ஐந்தாவது பந்தில் சிக்ஸ் அடித்து, ஆறாவது பந்தில் ஒரு ரன் தேவைப்பட, அதிலும் சிக்ஸ் அடித்து, விண்டேஜ் சிஎஸ்கேவாக, போட்டியை முடித்தார் ஜடேஜா. இப்படியாக சென்னை வெல்லும் போட்டிகளில் எல்லாம் பட்டாசு பறக்கும். ஆனால், இந்த முறை... சரி. அதை மறப்போம். மார்ச்சில் சந்திப்போம்.

ஆட்டநாயகனாக கெய்க்வாட் தேர்வானார்.

கொல்கத்தாவின் பௌலிங்கில் எக்ஸ்டிராஸ் எக்கச்சக்கம். ஓவர் ஹைட் நோபால், அதனால் ஏற்பட்ட ஃப்ரீ ஹிட்... அதன் மூலம் வந்த சிக்ஸர். ஒய்டிலேயே பவுண்டரிக்குச் சென்ற பந்து என சென்னையின் 12வது வீரராய் செயல்பட்டனர் கொல்கத்தா பௌலர்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism