Published:Updated:

சாவ்லா, எங்கிடி... இவ்ளோ நாள் எங்கய்யா இருந்தீங்க? #RRvCSK

#RRvCSK ( twitter.com/IPL )

ஒருபக்கம் டுப்ளெஸ்ஸி மூச்சு முட்ட அடித்துக்கொண்டிருக்க மறுபுறம் கூலாக சிங்கிள் மட்டுமே தட்டிக்கொண்டிருந்தார் தோனி. அவரின் டைமிங் வெகுவாக மிஸ் ஆவதை கண்கூடாக பார்க்கமுடிந்தது.

சாவ்லா, எங்கிடி... இவ்ளோ நாள் எங்கய்யா இருந்தீங்க? #RRvCSK

ஒருபக்கம் டுப்ளெஸ்ஸி மூச்சு முட்ட அடித்துக்கொண்டிருக்க மறுபுறம் கூலாக சிங்கிள் மட்டுமே தட்டிக்கொண்டிருந்தார் தோனி. அவரின் டைமிங் வெகுவாக மிஸ் ஆவதை கண்கூடாக பார்க்கமுடிந்தது.

Published:Updated:
#RRvCSK ( twitter.com/IPL )
ஸ்டோக்ஸ், பட்லர் இல்லாத ராஜஸ்தான் அணி மாலுமிகள் இல்லாத பெரிய சைஸ் கப்பலைப் போல திக்கித் திணறும். மறுபுறம் முதல் ஆட்டத்திலேயே பரம எதிரி மும்பையை வீழ்த்திய கொண்டாட்டத்தோடு களமிறங்கும் சென்னை. ரிசல்ட்டை ஏறக்குறைய முன்னரே கணித்திருந்தார்கள் பெரும்பாலானவர்கள். ஆனால் ஐபிஎல் என்றாலே ட்விஸ்ட்தானே.

மற்ற இரண்டு மைதானங்களைவிட இது பேட்டிங்கிற்கு சாதகமானது என பேச்சு அடிபட்டது. டாஸை வென்ற தோனி வழக்கம்போல சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார். ராயுடுவுக்கு பதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட். ராஜஸ்தான் அணியில் ஸ்மித், ஆர்ச்சரோடு டாம் கரனும் டேவிட் மில்லரும். சென்னை அணியில் தம்பி சாம் கரண். கடைசியாக இப்படி அண்ணன் - தம்பி மோதிக்கொண்டதும் சென்னை - ராஜஸ்தான் அணிகள் ஆடியபோதுதான். யூசுப் பதானும் இர்ஃபான் பதானும்.

#RRvCSK
#RRvCSK
twitter.com/IPL

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெங்களூருவின் தேவ்தத் படிக்கல் தன் அறிமுக ஆட்டத்திலேயே அரைசதம் அடித்திருந்ததால் இந்த ஆட்டத்தில் அறிமுகமாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீதும் ருத்துராஜ் மீதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஓபனிங் இறங்கிய யஷஸ்வி 6 ரன்களில் நடையைக் கட்டினார். பின் ஸ்மித்தோடு ஜோடி சேர்ந்தார் சஞ்சு சாம்சன். லாக்டெளனில் கைகளுக்கு மட்டும் ஸ்பெஷலாக வொர்க் அவுட் செய்திருப்பார் போல சஞ்சு. தொட்ட பந்தெல்லாம் சிக்ஸ் பறந்தது. அதுவும் ஒரு சீனியர் என்றும் பாராமல் பியூஷ் சாவ்லாவை விரட்டி விரட்டி அடித்தார். 'யப்பே... ஆறு கோடிப்பே' என புலம்பியபடி திரிந்தார்கள் சென்னை ரசிகர்கள். சாவ்லாவின் முதல் ஓவரில் மட்டும் நான்கு சிக்ஸ்கள். இரண்டாவது ஓவரில் இரண்டு சிக்ஸ்கள், ஒரு பவுண்டரி. ராஜஸ்தானின் ஸ்கோர் லெவல் கிராஸிங்கே தேவைப்படாத ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போல பறந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒன்பதே ஓவர்களில் 100 ரன்கள். அதில் பாதிக்குப் பாதி சாவ்லா வாரிக் கொடுத்தது. கடைசியாக இங்கிடி வந்துதான் சாம்சனை பெவிலியன் அனுப்பினார். அதற்குள் மழை அடித்து ஓய்ந்த ஒரு எண்ணம் எல்லாருக்கும் வந்திருந்தது. 'ஒரு காலத்துல அவர் பெரிய டா............ன், இப்போ வெறும் டான்' - அடுத்து இறங்கிய மில்லர் இந்தரகம் தான். வந்தவுடன் ரன் அவுட் ஆகிக் கிளம்பினார். மறுபக்கம் மூன்றே ஓவரில் அரைசதம் அடித்தார் பியூஷ் சாவ்லா பெளலிங்கில். சாம்சனுக்குக் கூட ஒரு பந்து எக்ஸ்ட்ரா தேவைப்பட்டது பேட்டிங்கில்.

#RRvCSK
#RRvCSK
twitter.com/IPL

மில்லரின் இந்திய வெர்ஷன்தான் உத்தப்பா என்பதால் அவரும் பெரிதாக வேலை வைக்கவில்லை. இது சரிப்படாது என ஸ்மித்தே களத்தில் இறங்கி மட்டையைச் சுழற்றினார். அவர் 69 ரன்களில் அவுட்டான போது ஸ்கோர் 178தான். 'அடடா... நல்லா பேட் பண்ணாங்க. 200 அடிக்க முடியலன்னா அவங்க விளையாடினதுக்கே மரியாதை இல்லயே' என கிரவுண்டின் ஒரு ஓரத்தில் நின்றிருந்த எங்கிடி நினைத்தார் போல. கடைசி ஓவரில் ராஜஸ்தான் பிளேயராகவே மாறி அவர்களை 200 தாண்ட வைத்தது அவரின் தாயுள்ளம். கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் மட்டும் 27 ரன்கள். அதெப்படி சாத்தியம் என்கிறீர்களா? 'அதெல்லாம் சப்ப மேட்டர்' என நிகழ்த்திக் காட்டினார் எங்கிடி. 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்கள் அடித்திருந்தது ராஜஸ்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் நான்கு ஓவர்கள் வழக்கம்போல நிதானமாகவே ஆடினார்கள் சென்னை ஓப்பனர்கள். அடுத்த 2 ஓவர்களில் 28 ரன்கள். சர்ரென ஸ்கோர் ஏற அடுத்த ஓவரில் திவேதியாவின் பந்தும் ஏற... போல்டானார் வாட்சன். 21 பந்துகளில் 33 ரன்கள். 'ஒண்ணாதான வந்தோம். வா ஒண்ணாவே போவோம்' என அடுத்த ஓவரிலேயே அவரை பின்தொடர்ந்தார் விஜய்.

கடந்த ஆட்டத்தில் பட்டாசாய் வெடித்த சாம் கரன் இப்போதும் அப்படித்தான் தொடங்கினார். இறங்கிவந்து இரண்டு சிக்ஸ். ஆனால் ஓயாமல் க்ரீஸைவிட்டு விலகினால் அப்புறம் கீப்பருக்கு என்னதான் வேலை? சட்டென ஒரு ஸ்டம்பிங். முதல் ஆட்டத்தில் களமிறங்கிய ருத்துராஜ் கொஞ்சம் களத்தில் நின்று ஆடி திறமையைக் காட்டியிருக்கலாம். முதல் பந்திலேயே பேராசைப்பட்டு ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். கேதர் ஜாதவும் ஆபத்பாந்தவான் டுப்ளெஸ்ஸியும் கொஞ்சம் ரன்களை சேர்த்தார்கள். அதன்பின் ஜாதவும் நடையைக் கட்டினார்.

#RRvCSK
#RRvCSK
twitter.com/IPL

இதற்குமேல் அனுப்ப ஆளை சென்னையிலிருந்து ஃப்ளைட் ஏற்றித்தான் அனுப்பவேண்டும் என்பதால் வேறுவழியில்லாமல் களமிறங்கினார் தோனி. ஒருபக்கம் டுப்ளெஸ்ஸி மூச்சு முட்ட அடித்துக்கொண்டிருக்க மறுபுறம் கூலாக சிங்கிள் மட்டுமே தட்டிக்கொண்டிருந்தார் தோனி. அவரின் டைமிங் வெகுவாக மிஸ் ஆவதை கண்கூடாக பார்க்கமுடிந்தது. அவர் பந்தைக் கணித்து ஆட ஆரம்பிப்பதற்குள் 19.3 ஓவர்கள் ஆகிவிட்டது. பார்க்கும் ரசிகர்களுக்கே 'தல 50 ஓவர் மேட்ச்னு நினைச்சுட்டாரோ' என சந்தேகம் தோன்றும்படியான ஆட்டம். கடைசி மூன்று பந்துகளில் சிக்ஸ் அடித்து நெட் ரன்ரேட்டை மட்டும் நெருக்கி எடுத்துவந்தார். ஆனாலும் அவரது கேர்ஃப்ரீ ஆட்டம் சென்னை ரசிகர்களை வெகுவாக ஏமாற்றியிருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

'தொடரின் தொடக்கம் என்பதால் பரீட்சார்த்த முயற்சிகளை எடுத்துப் பார்க்கிறோம்' என ஆட்டம் முடிந்தபின் சொன்னார் தோனி. அது சரிதான். ஆனால் அதற்குள் பாதித் தொடர் முடிந்துவிடும். மீதி ஆட்டங்களை வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு எனும்பட்சத்தில் அது இளம் வீரர்களுக்கு இன்னும் பிரஷரை ஏற்றிவிடும். ஆதலால், சட்டென பழைய ஃபார்முக்கு சென்னையும் தோனியும் திரும்புதல் நலம்.

#RRvCSK
#RRvCSK
twitter.com/IPL
மறுமுனையில் மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கிய சஞ்சு சாம்சன் கே.எல் ராகுலையும் ரிஷப் பன்ட்டையும் தூங்கவிடாமல் செய்திருக்கிறார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism