Published:Updated:

#RRvsCSK தோனியின் சர்ப்ரைஸ் என்ன... ஸ்மித்தை டிரீம் லெவனில் எடுக்கலாமா?! #Preview #Prediction

#CSKvsRR
#CSKvsRR

இங்கிலாந்து வீரர்களை அதிகம் நம்பியிருக்கும் அணி ராஜஸ்தான். ஆனால், இங்கிலாந்தின் ஸ்டார்களான ஸ்டோக்ஸ், பட்லர் இருவருமே இன்றைய அணியில் இல்லை.

வெற்றியோடு டி20 சீசனைத் தொடங்கியிருக்கும் சிஎஸ்கே இன்று ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸை சந்திக்க இருக்கிறது. ராஜஸ்தானுக்கு இந்த ஐபிஎல்-ல் இதுதான் முதல் போட்டி.

அணிக்கு மீண்டும் கேப்டனாகத் திரும்பியிருக்கும் ஸ்மித் சமீபத்தில் நடந்துமுடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. விளையாடிய 2 டி20 போட்டிகளிலும் சிறப்பாக ஆடவில்லை. அதனால் ஸ்மித் தனிப்பட்ட முறையில் ஃபார்முக்கு வரவேண்டும் என்பதோடு, தோனியின் அணியை சமாளிக்க மிக வலுவான வியூகங்கள் அமைக்க வேண்டும். அப்படி ராஜஸ்தான் வருவார்களா, ராஜஸ்தானுக்கு தோனி என்ன சர்ப்ரைஸ் வைத்திருப்பார்?

#CSKvsRR
#CSKvsRR

ஷார்ஜா பிட்ச் எப்படி?!

முதல் போட்டியை அபுதாபியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று ஷார்ஜாவில் விளையாடயிருக்கிறது. 2020 ஐபிஎல்-ல் ஷார்ஜாவில் நடக்கும் முதல் போட்டி இதுதான். அபுதாபி, துபாயைவிட ஷார்ஜாவின் பிட்ச் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் அதேவேளையில் மற்ற இரண்டு பிட்ச்களைவிட பேட்டிங்குக்கு இன்னும் சாதகமான பிட்ச். மேலும் மற்ற இரண்டு மைதாங்களோடு ஒப்பிடும்போது பவுண்டரி லைன் குறைவு. அதனால் அதிக சிக்ஸர், பவுண்டரிகளை எதிர்பார்க்கலாம். இன்றும் டாஸ் வெல்லும் அணி ட்யூவை மனதில்வைத்து முதலில் ஃபீல்டிங்கையே தேர்வு செய்யும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்மித்தின் ப்ளேயிங் லெவன் என்ன?!

இங்கிலாந்து வீரர்களை அதிகம் நம்பியிருக்கும் அணி ராஜஸ்தான். ஆனால், இங்கிலாந்தின் ஸ்டார்களான ஸ்டோக்ஸ், பட்லர் இருவருமே இன்றைய அணியில் இல்லை. பட்லர் க்வாரன்டீனில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னால் தனிப்பட்ட காரணங்களுக்காக நியூஸிலாந்து போன பென் ஸ்டோக்ஸ் இன்னும் ஐபிஎல்-ல் விளையாடுவாரா இல்லையா என்பதையே சொல்லவில்லை. இவர்கள் இருவர் இல்லையென்றாலும் ராஜஸ்தானுக்கு கைகொடுக்க ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் கரண் என இன்னும் இரண்டு இங்கிலாந்து வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்றைய அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

#CSKvsRR
#CSKvsRR

பேட்டிங்கைப் பொருத்தவரை பட்லர் இல்லாததால் யாரை ஓப்பனிங் இறக்குவது என்கிற குழப்பம் ராஜஸ்தானுக்கு இருக்கிறது. கடந்த பல சீசன்களாக கொல்கத்தாவில் இருந்த ராபின் உத்தப்பா இப்போது ராஜஸ்தான் வந்திருக்கிறார். ராபின் உத்தப்பாவும், இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஓப்பனிங் இறங்கலாம். இல்லையென்றால் சஞ்சு சாம்சனும், ஜெய்ஸ்வாலும் ஓப்பனிங் இறங்குவார்கள். இந்த ஓப்பனிங்கைப் பொறுத்து டாப் ஆர்டரில் ஸ்டீவ் ஸ்மித்தும், உத்தப்பாவும் இடம்பிடிப்பார்கள். இவர்களுக்கு அடுத்து பஞ்சாபில் இருந்து வந்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் இருப்பார். டாம் கரண் ஆல்ரவுண்டர் என்பதால் அவர் பேட்டிங் ஆர்டரில் கொஞ்சம் மேலே வரலாம். இவருக்கு அடுத்த இன்னொரு ஆல் ரவுண்டர் ஸ்பாட்டில் அசாமைச் சேர்ந்த இளம் வீரர் ரியான் பராக் இடம்பிடிப்பார். இவர் கடந்த ஆண்டே ராஜஸ்தானுக்காக விளையாடி அனுபவம் பெற்றிருப்பவர். பராக்கைப்போலவே லெக் ஸ்பின்னரான ஷ்ரேயாஸ் கோபாலும் கடந்த சீசனில் நல்ல பர்ஃபாமென்ஸைக் கொடுத்தவர். வேகப்பந்து வீச்சாளர்களில் ராஜஸ்தானுக்கு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஜோஃப்ரா ஆர்ச்சரோடு உனட்கட், வருண் ஆரோன் அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே ராஜஸ்தானுக்கு பவர் பர்ஃபாமெர்கள் பெரிதாக இல்லை. பேட்டிங்கில் ஸ்டீவ் ஸ்மித் நின்று ஆடினால் மட்டுமே ஓரளவுக்கு அவர்களால் ஸ்கோரை உயர்த்தமுடியும். அதேபோல் பெளலிங்கில் ஜோஃப்ரா ஆர்ச்சர் கை கொடுக்கவேண்டும். இதுத்தவிர அணியின் எல்லா வீரர்களுமே பங்களித்தால் மட்டுமே ராஜஸ்தானால் சிஎஸ்கே-வை சமாளிக்கமுடியும்.
#CSKvsRR
#CSKvsRR

தோனியின் சர்ப்ரைஸ் என்ன?!

வெற்றிபெற்ற அதே அணியோடு பயணிப்பாரா அல்லது ஷார்ஜா சிறிய மைதானம் என்பதால் இன்னொரு கூடுதல் பெளலரை அணிக்குள் சேர்ப்பாரா என்பதுதான் தோனியின் இன்றைய சர்ப்ரைஸாக இருக்கும். முரளி விஜய்க்கு பதிலாக தோனி இன்று ஷர்துல் தாக்கூரை களம் இறக்கலாம். அதேப்போல் ரித்துராஜ் கெய்க்வாட் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருப்பதால் அவருக்கு தோனி வாய்ப்பளிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ரித்துராஜ் கெய்க்வாட் அணிக்குள் வந்தால் கேதர் ஜாதவ் அணிக்குள் இருக்கமாட்டார். சென்னையின் பேட்டிங் ஆர்டர் இன்னும் ஸ்ட்ராங்காகும். டுப்ளெஸ்ஸி, வாட்சனோடு ஓப்பனிங் இறங்குவார் என எதிர்பாக்கலாம். வாட்சன், டுப்ளெஸ்ஸி, எங்கிடி, கரண் என வெளிநாட்டு வீரர்கள் கோட்டா நிரம்பியிருப்பதால் இன்றும் தாஹிர் விளையாடுவதற்கான் வாய்ப்புகள் குறைவுதான்.

ரித்துராஜ் கெய்க்வாட், அம்பதிராயுடு, தோனி என்பதுதான் சென்னையின் பேட்டிங் ஆர்டராக இருக்கும். இதற்கடுத்து சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லாவும், இவர்களுக்கு அடுத்து வேகப்பந்து வீச்சாளர்களும் இருப்பார்கள்.
ஒரே ஓவரில் 30 ரன்கள்... ஸ்டாய்னிஸ் Vs ஜோர்டன் பகை நேற்று தொடங்கியதல்ல! #IPL2020 #Rivalry

தோனி இன்று மூன்று சர்ப்ரைஸ்கள் தரக்கூடும். ஒன்று எந்த மாற்றமுமே இல்லாமல் மும்பைக்கு எதிராக ஆடிய அதே ப்ளேயிங் லெவனோடு விளையாடலாம். இரண்டு முரளி விஜய்க்கு பதிலாக ரித்துராஜ் கெய்க்வாடை இறக்குவது. மூன்று கேதர் ஜாதவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை அணிக்குள் கொண்டுவருவது. இதில் எந்த சர்ப்ரைஸ் என்பது ஸ்டீஃபன் ஃப்ளெமிங்குக்கூட தெரியுமா எனத்தெரியாது. தோனிக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் இவை.

#RRvsCSK தோனியின் சர்ப்ரைஸ் என்ன... ஸ்மித்தை டிரீம் லெவனில் எடுக்கலாமா?! #Preview #Prediction

ட்ரீம்லெவனில் யாரை எல்லாம் எடுக்கலாம்?!

விக்கெட் கீப்பர் ஸ்லாட்டில் சஞ்சு சாம்சனை நிச்சயம் அணிக்குள் எடுக்கலாம். தோனி களத்தில் இறங்கி ஆடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்காது என்றே தெரிவதால் அவரை அணிக்குள் எடுக்காமல் இருக்கலாம். பேட்ஸ்மேன்களைப் பொருத்தவரை வாட்சன் எப்போதாவது பெரிய இன்னிங்ஸ் ஆடி அதிர்ச்சி கொடுப்பவர். கடந்த ஆண்டு மிக மோசமாக ஆடியவர் இறுதியாக சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஷார்ஜா பிட்ச் அவர் ஃபார்முக்கு வர கைகொடுக்கலாம். அதனால் ஒரு ரிஸ்க்கோடு வாட்சனை அணியில் எடுக்கலாம். ரித்துராஜ் கெய்க்வாட் ப்ளேயிங் லெவனில் இருந்தால் அவரை நிச்சயம் எடுக்கலாம். ராஜஸ்தான் வீரர்களைப் பொருத்தவரை ஜெய்ஸ்வாலும், மில்லரும் நல்ல சாய்ஸாக இருப்பார்கள். ஸ்டீவ் ஸ்மித் நீண்ட பிரேக்கில் இருந்துவருகிறார் என்பதோடு ஸ்பின்னுக்குத் தடுமாறுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில்கூட ரஷீத்தை சமாளிக்கத் திணறினார்.

ஐபிஎல் போட்டிகளைப்பொருத்தவரை ரவீந்திர ஜடேஜா அவரின் விக்கெட்டைப் பல முறை வீழ்த்தியிருக்கிறார். அதனால் ஸ்டீவ் ஸ்மித்தை அணிக்குள் எடுப்பது ரிஸ்க்தான். ஆல் ரவுண்டர்களைப் பொருத்தவரை சென்னையின் சாம் கரண், ஜடேஜா இருவரையுமே எடுக்கலாம். அதேபோல் ராஜஸ்தானின் ரியான் பராக்கை எடுக்கலாம். பெளலர்களில் ஸ்பின்னைப் பொருத்தவரை ராஜஸ்தானில் ஷ்ரேயாஸ் கோபாலை எடுக்கலாம். வேகப்பந்து வீச்சாளர்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர், லுங்கி எங்கிடி ஆகியோரை எடுக்கலாம். டாஸுக்குப்பின்னர் அறிவிக்கப்படும் ப்ளேயிங் லெவனைப் பொறுத்து உங்கள் டிரீம்லெவனை இறுதிசெய்யுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு