Election bannerElection banner
Published:Updated:

ரோஹித் சரவெடிகள்... கொல்கத்தாவை வென்றது மும்பை... #KKRvMI மேட்ச்சின் டாப் 10 தருணங்கள்!

#KKRvMI
#KKRvMI ( twitter.com/IPL )

சென்னையிடம் முதல் அடி வாங்கிய மும்பை அடுத்த போட்டியிலேயே மீண்டிருக்கிறது. கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ். கொல்கத்தா வெர்சஸ் மும்பை மேட்ச்சின் டாப் 10 தருணங்கள் மட்டும் இங்கே!

* இதுவரை இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய அத்தனை கேப்டன்களும் என்ன முடிவெடுத்தார்களோ அதையேதான் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் செய்தார். டாஸ் வென்றதும் டியூ காரணமாக பெளலிங்கைத் தேர்ந்தெடுப்பதாக அறிவித்தார் கார்த்திக். இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், கரீபியன் கிங்ஸ் ரஸல், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ் என நான்கு வெளிநாட்டு ப்ளேயர்களோடு களமிறங்கியது. மாறாக சென்னைக்கு எதிராக விளையாடிய அதே ப்ளேயிங் லெவனோடு இறங்கியது மும்பை.

* டேஞ்சரஸ் டிகாக் இரண்டாவது ஓவரிலேயே அவுட். 21 வயதேயான உத்திரப்பிரதேச வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மவி அற்புதமான தொடக்கத்தை கொல்கத்தாவுக்கு கொடுத்தார். ஆனால், ரோஹித் ஷர்மாவையும், சூர்யகுமார் யாதவையும் செட் ஆகவிட்டது கொல்கத்தா பெளலிங் டீம். ரோஹித் சமீபமாக ஸ்பின்னுக்குத் திணறுகிறார் எனும்போது அவரது விக்கெட்டை வீழ்த்த அடுத்தடுத்து ஸ்பின்னர்களை இறக்கவில்லை கார்த்திக். பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் சுனில் நரேனிடம் பந்தைக்கொடுத்தவர் தொடர்ந்து ஸ்பின்னர்களைப் பயன்படுத்தவில்லை. 15 கோடி ரூபாய்க்கு மேல் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டு எல்லோரையும் பொறாமை கொள்ளவைத்த பேட் கம்மின்ஸ் தனது முதல் ஓவரிலேயே 15 ரன்கள் கொடுத்தார்.

#KKRvMI
#KKRvMI
twitter.com/IPL

* சூர்யகுமார் யாதவ் 47 ரன்களில் அவுட் ஆனப்பிறகு மும்பை இந்தியன்ஸின் விக்கெட்டுகள் ஒருப்பக்கம் சரிந்துகொண்டேயிருந்தாலும் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி அசத்தினார். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வந்து 18வது ஓவர் வரை நின்று 54 பந்துகளில் 80 ரன்கள் அடித்திருந்தார் ரோஹித். நல்ல ரன்ரேட்டில் இருந்து டெத் ஒவர்களில் பெரிதாக ரன் அடிக்காததால் 200 ரன்களை மும்பையால் தொடமுடியவில்லை. 196 ரன்களை டார்கெட்டாக கொல்கத்தாவுக்குக் கொடுத்தது.

* கொல்கத்தா பெளலர்களில் ஷிவம் மட்டுமே 2 விக்கெட்டுகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல், 1 மெய்டன் ஓவரையும் போட்டு பவர் காட்டினார். ரஸல் 2 ஓவர்கள் மட்டுமே வீசி 1 விக்கெட்டையும் எடுத்தார். சுனில் நரேன் எக்கனாமிக்கலாகப் பந்து வீசியதோடு, சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த திவாரியின் விக்கெட்டையும் எடுத்தார்.

* குல்தீப் யாதவின் பந்துவீச்சு இந்த ஆண்டும் மோசமானதாகவே இருக்கிறது. 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் இல்லாமல் 39 ரன்கள் கொடுத்தார் குல்தீப். ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப்பின் இடம் இனி கேள்விக்குள்ளாகப்படும்.

#KKRvMI
#KKRvMI
twitter.com/IPL

* ஷுப்மான் கில் மற்றும் சுனில் நரேன் இருவரும்தான் ஒப்பனிங் பேட்ஸ்மேன்கள். இரண்டு பேருமே சிங்கிள் டிஜிட்டில் அவுட். 25 ரன்களுக்கு ஐந்து ஓவர்களிலேயே 2 விக்கெட்டை இழந்துவிட்டது கொல்கத்தா. தேவையைப் பொருத்து ரஸல் டாப் ஆர்டரில் ஆடுவார் என அறிவித்திருந்தது கேகேஆர் நிர்வாகம். ஆனாலும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 1 டவுன் பேட்ஸ்மேனாக வந்தாரே தவிர ரஸல் ஐந்தாவது பேட்ஸ்மேனாகத்தான் கிரீஸூக்குள் வந்தார்.

* ரஸல், நரேன், மார்கன் என எல்லா வெளிநாட்டு வீரர்களும் சொதப்ப, பேட் கமின்ஸ்தான் கொல்கத்தாவின் டாப் ஸ்கோரர். கம்மின்ஸ் 33 ரன்கள் அடித்திருக்க, தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் அடித்தார்.

* முதல் மூன்று ஓவர்களுக்கு வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ரஸல், மார்கன் என முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த பும்ராவை அவரது கடைசி ஓவரில் அடித்துவெளுத்துவிட்டார் கம்மின்ஸ். பும்ராவின் நான்காவது ஓவரில் மட்டுமே 4 சிக்ஸர்கள் அடித்தார் கம்மின்ஸ். ஒரே ஒவரில் திடீரென 27 ரன்களைக் கொடுத்த பும்ராவைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

#KKRvMI
#KKRvMI
twitter.com/IPL

* மும்பை கேப்டன் ரோஹித் ஸ்பின்னர்களில் சஹாருக்கு மட்டுமே 4 ஓவர்கள் கொடுத்தார். இவர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால், க்ருணாலுக்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுத்த ரோஹித் தொடர்ந்து போல்ட், பேட்டின்சன், பும்ரா, பொலார்ட் என வேகப்பந்து வீச்சாளர்களையே பயன்படுத்தினார். ஒரே ஒரு ஓவர் வீசிய க்ருணாலைத்தவிர மற்ற மும்பை பெளலர்கள் அனைவருமே விக்கெட் எடுத்தார்கள்.

* மிக எளிதான வெற்றிபெற்று பாசிட்டிவ் எனர்ஜியைத் திரும்பப்பெற்றிருக்கிறது மும்பை. மாறாக இந்த ஆண்டு ஐபிஎல் கப் நமக்குத்தான் என கெத்தாக இருந்த கொல்கத்தா பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. தரமான பேட்ஸ்மேன்கள், பவர்ஃபுல் ஆல்ரவுண்டர்கள், உலகத்தரமான பெளலர்கள் இருந்தும் தோல்வியை சந்தித்திருக்கிறது கொல்கத்தா அணி. கொல்கத்தாவால் மீண்டெழ முடியுமா என்பது அடுத்தடுத்த போட்டிகளில் தெரிந்துவிடும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு