Published:Updated:

கேப்டன் மாறினாலும் கொல்கத்தாவின் காட்சிகள் மாறவில்லை... ப்ளே ஆஃபை நெருங்கிய மும்பை! #MIvKKR

#MIvKKR

பேன்ட்டனை இந்தப் போட்டியில் இருந்து தூக்கிவிட்டு எக்ஸ்ட்ரா ஸ்பின்னராக ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் கிரீனை சேர்த்திருந்தார் இயான் மார்கன். ஆல்ரவுண்டரான இவரின் ஆஃப் ஸ்பின் கரீபியன், பிக்பேஷ் லீக் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன.

கேப்டன் மாறினாலும் கொல்கத்தாவின் காட்சிகள் மாறவில்லை... ப்ளே ஆஃபை நெருங்கிய மும்பை! #MIvKKR

பேன்ட்டனை இந்தப் போட்டியில் இருந்து தூக்கிவிட்டு எக்ஸ்ட்ரா ஸ்பின்னராக ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் கிரீனை சேர்த்திருந்தார் இயான் மார்கன். ஆல்ரவுண்டரான இவரின் ஆஃப் ஸ்பின் கரீபியன், பிக்பேஷ் லீக் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன.

Published:Updated:
#MIvKKR
கேப்டன் மாற்றம் மட்டுமல்லாது இரண்டு முக்கியமான வீரர்களின் மாற்றங்களோடு களமிறங்கிய கொல்கத்தாவுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. கொல்கத்தாவை பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என எல்லா ஏரியாவிலுமே தோற்கடித்து கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ்!
#MIvKKR
#MIvKKR

அபுதாபியில் மும்பைக்கு எதிராக நடந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தாவின் புது கேப்டன் இயான் மார்கன் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். முதல் ஐபிஎல் போட்டியாக கடந்த போட்டியில்தான் அறிமுகமாகியிருந்தார் டாம் பேன்ட்டன். ஆனால், பேன்ட்டனை இந்தப் போட்டியில் இருந்து தூக்கிவிட்டு எக்ஸ்ட்ரா ஸ்பின்னராக ஆஸ்திரேலியாவின் கிறிஸ் கிரீனை சேர்த்திருந்தார் இயான் மார்கன். ஆல்ரவுண்டரான இவரின் ஆஃப் ஸ்பின் கரீபியன், பிக்பேஷ் லீக் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன என்பதால் கிரீனுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்கள். முதல் ஐபிஎல் போட்டியாக கிரீனும், நாகர்கோட்டிக்கு பதிலாக இன்னொரு இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் மவியும் கொல்கத்தாவின் ப்ளேயிங் லெவனுக்குள் வந்தார்கள். மும்பை ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு பதிலாக நாதன் கூல்ட்டர் நைலை அணிக்குள் கொண்டுவந்திருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேன்ட்டன் வெளியேபோனதால் மீண்டும் ஓப்பனராக வந்தார் ராகுல் திரிபாதி. முதல் இரண்டு ஓவர்களில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் இருந்து கேகேஆருக்கு அடிமேல் அடி. போல்ட்டின் பெளலிங்கில் திரிபாதி 7 ரன்களில் அவுட் ஆக, பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் கூல்ட்டர் நைல் பெளலிங்கில் ரானா அவுட். அவர் அடித்த ரன்கள் 5. கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த ஷுப்மான் கில் 21 ரன்களில் அவுட் ஆனார். விக்கெட்டைத் தூக்கியவர் ராகுல் சஹார். இந்த சீசனில் தொடர்ந்து கிரீஸுக்கு வருவதும், சிங்கிள் டிஜிட்டில் கடமையை முடித்துவிட்டு பெவிலியன் போவதுமாக இருக்கும் தினேஷ் கார்த்திக், ராகுல் சஹாரின் அடுத்தப்பந்திலேயே அவுட். தினேஷ் கார்த்திக்கின் ஸ்கோர் 4.

#MIvKKR
#MIvKKR

ஆண்ட்ரி ரஸல் வந்தார். க்ருணால் பாண்டியாவின் பெளலிங்கில் மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸர் விளாசினார் ரஸல். பும்ராதான் ரஸலை சமாளிக்க சரியான ஆள் என நினைத்த ரோஹித் ஷர்மா பும்ராவைக் கொண்டுவந்தார். ஏற்கெனவே முதல் சுற்றுப்போட்டியில் ரஸலின் விக்கெட்டை எடுத்திருந்த பும்ரா இந்த முறையும் ரஸலை 12 ரன்களில் அவுட் ஆக்கி டக் அவுட்டுக்கு அனுப்பிவைத்தார். 11 ஓவர்களின் முடிவில் 63 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது கொல்கத்தா.

கேப்டன் இயான் மார்கனும், பெளலர் பேட் கம்மின்ஸும் சேர்ந்து மூழ்கிக்கொண்டிருந்த கொல்கத்தாவை மீட்டெடுத்தார்கள். இயான் மார்கன் கொஞ்சம் கவனத்துடனேயே அளந்து அளந்து ஆட, கம்மின்ஸ் மோசமான பந்துகளை பவுண்டரிகளாகவும், கடினமான பந்துகளை சிங்கிள்களாகவும் மாற்றிக்கொண்டிருந்தார். கூல்ட்டர் நைலின் கடைசி ஓவரில் 21 ரன்கள் அடித்தாலும் கொல்கத்தாவின் ஸ்கோர் 150 ரன்களைத் தாண்டவில்லை. கம்மின்ஸ் 35 பந்துகளில் அரைசதம் அடித்தவர் இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். கேப்டன் இயான் மார்கனும் 29 பந்துகளில் 39 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றார். 160-170 ரன்களில் டார்கெட்டை செட் செய்திருக்கவேண்டிய கொல்கத்தா முதல் இன்னிங்ஸின் முடிவிலேயே மேட்ச்சை மும்பையிடம் விட்டுவிட்டது. இந்த சீசனில் ரஸல், தினேஷ் கார்த்திக்கைவிட கம்மின்ஸ் கொல்கத்தாவுக்காக அதிக ரன்கள் அடித்திருக்கிறார்.

#MIvKKR
#MIvKKR

பலமான மிடில் ஆர்டர் இருப்பதாலும், சேஸ் செய்யவேண்டிய ரன்கள் குறைவாக இருப்பதாலும் மும்பை கேப்டன் ரோஹித்தும், டிகாக்கும் கொஞ்சமும் பிரஷர் இல்லாமல் ஆட ஆரம்பித்தார்கள். பவர்ப்ளேவின் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 51 ரன்கள் அடித்தது மும்பை. ரோஹித் எப்படியாவது ஒரு அரை சதத்தைப் போட்டுவிடவேண்டும் என மிக மிக கவனமாக ஆட, டிகாக் சிக்ஸர், பவுண்டரிகளாக விரட்டிக்கொண்டிருந்தார். கொல்கத்தாவின் கைமீறி மேட்ச் போய்க்கொணடிருந்த நேரத்தில் ஷிவம் மவி பெளலிங்கில் 35 ரன்களில் அவுட் ஆனார் ரோஹித். இவர் 36 பந்துகளில் இந்த ரன்களை அடித்திருந்தார்.

அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ், வருண் சக்ரவர்த்தியின் பெளலிங்கில் 10 ரன்களில் அவுட் ஆனாலும், டிகாக் ஒற்றையாளாக அடித்து ஆடிக்கொண்டிருந்தார். 25 பந்துகளில் அரைசதம் அடித்த டிகாக் இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்து, 44 பந்துகளில் 78 ரன்கள் அடித்து மும்பையை வெற்றிபெறவைத்தார். ஹர்திக் பாண்டியா கேமியோ பர்ஃபாமென்ஸாக 11 பந்துகளில் 21 ரன்கள் அடித்து மும்பையின் வெற்றியை விறுவிறுப்பாக்கினார்.

#MIvKKR
#MIvKKR

விளையாடியிருக்கும் 8 போட்டிகளில் சென்னை, பெங்களூருவிடம் மட்டுமே தோற்று, 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது மும்பை. டெல்லியும் மும்பையைப்போலவே 12 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மும்பையும், டெல்லியும் ப்ளே ஆஃப் சுற்றை கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில், அடுத்த இரண்டு இடங்களுக்கான போட்டி இன்னும் கடுமையாகியிருக்கிறது. நாளை வாழ்வா சாவா போட்டியில் டெல்லியுடன் மோதயிருக்கிறது சென்னை.