Published:Updated:

கால்குலேட்டரோட ரெடியாகுங்க மக்களே... கொல்கத்தா ஏன் இப்படி ஆடினாங்க?! #KKRvRR

#KKRvRR

ப்ளே ஆஃபுக்குள் நுழைய கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள்தான் அடிஷனல் சீட் வாங்கிக்குவித்து பலப்பரீட்சை எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. #KKRvRR

கால்குலேட்டரோட ரெடியாகுங்க மக்களே... கொல்கத்தா ஏன் இப்படி ஆடினாங்க?! #KKRvRR

ப்ளே ஆஃபுக்குள் நுழைய கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள்தான் அடிஷனல் சீட் வாங்கிக்குவித்து பலப்பரீட்சை எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. #KKRvRR

Published:Updated:
#KKRvRR
`சும்மா போகமாட்டேன். கொளுத்திட்டு வந்து உன்னைத்தான் கட்டிப்பிடிப்பேன்' என `உயிரே' படத்தின் க்ளைமாக்ஸ் உல்டாவாக நடத்தி முடித்து, பஞ்சாபை மஞ்சப்பையோடு கிளப்பிவந்துவிட்டது சென்னை. ஆக, ப்ளே ஆஃபுக்குள் நுழைய கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள்தான் அடிஷ்னல் சீட் வாங்கிக்குவித்து பலப்பரீட்சை எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

நேற்று, துபாயில் நடந்த 2020 ஐபிஎல்-ன் 54-வது பரிட்சையில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற, ஸ்டீவ் ஸ்மித் பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். பெர்குசன் மற்றும் ரிங்கு சிங்கிற்கு பதிலாக, ரஸல் மற்றும் ஷிவம் மாவி அணிக்குள் நுழைந்தனர். ரஸலின் கம்பேக், ரசிகர்கள் வாயில் ரஸகுல்லாவைத் திணித்ததுபோல் ஒரே தித்திப்பு. ராஜஸ்தான் அணியில் எந்தவித மாற்றமும் இல்லை.

பொறுப்பு கில்லும், பொன்முட்டையிடும் வாத்து ராணாவும் கொல்கத்தாவின் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஆர்ச்சர் முதல் ஓவரை வீசினார். முதல் பந்து, கில் ஒரு சிங்கிள் தட்ட, இரண்டாவது பந்தைச் சந்தித்தார் ராணா. இம்முறையும் கோல்டன் டக்! கடந்த ஐந்து இன்னிங்ஸில் 3 முறை கோல்டன் டக் பொறித்துள்ளார் நிதிஷ் ராணா. த்ரிபாதி உள்ளே வந்தார். முதல் ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 1 ரன் என கொடூரமாக ஸ்டார்ட் செய்தது கொல்கத்தா. வருண் ஆரோன் வீசிய 2வது ஓவரில், லாங் லெக் திசையில் ஒன்று, மிட் விக்கெட்டில் ஒன்று, ஹூக் ஆடி ஒன்று என மூன்று பவுண்டரிகளை அள்ளினார் கில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Jofra strikes in the very first over!
Jofra strikes in the very first over!
@IPL

ஜோசிய ஆர்ச்சர் ஜோரான ஃபார்மில் பந்து வீசினார். 3-வது ஓவரில், 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆரோனுக்கு பதில் கோபால் வந்தார். முதல் பந்தை மிட் ஆஃப் திசையில் பவுண்டரிக்கு தட்டிவிட்டார் கில். அடுத்த பந்து, டீப் மிட் விக்கெட் திசை பவுண்டரிக்கு பாய்ந்தது. அப்படியே, பார்த்து பக்குவமாக கோபாலைத் தூக்கி த்ரிபாதியிடம் கொடுத்தார் கில். த்ரிபாதியும் ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரி, டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரி என கோபாலுக்கு பெயின்ட் அடித்துவிட்டார். ஸ்டோக்ஸைக் கூட்டிவந்தார் ஸ்மித். ஓவரின் கடைசி பந்தில், டீப் பேக்வார்டு ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் த்ரிபாதி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரோன், ஆறாவது ஓவரை வீசவந்தார். கவர் பாயின்ட்டில் ஒரு பவுண்டரியை கவரில் போட்டுக்கொடுத்தார் த்ரிபாதி. `பப்பாதி பங்கு போட்டுக்குவோம் பங்காளி' என கில்லும் அதில் ஒரு பவுண்டரியைப் போட்டு கவரைக் கிழித்து அனுப்பினார். பவர்ப்ளேயின் முடிவில், 55/1 என பிரமாதமாக எதிர் காற்றில் சைக்கிள் மிதித்திருந்தது கொல்கத்தா.

7-வது ஓவரை வீச திவேதியா வந்தார். `திவேதியா, வந்துட்டியா' என ராஜஸ்தான் ரசிகர்கள் கண்களைத் துடைத்தார்கள். ஓவரின் 5வது பந்து, இறங்கிவந்து லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸரைத் தூக்கி கிடாசினார் த்ரிபாதி. 8வது ஓவரை வீசினார், தியாகி. 4 ரன்கள் மட்டுமே கிடைத்தன. திவேதியா வீசிய 9-வது ஓவரில், டீப் கவரில் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார் த்ரிபாதி. அதே ஓவரில், ஷுப்மான் கில் அவுட்! 24 பந்துகளில் 34 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.

#KKRvRR
#KKRvRR

சுழல் நரைன் உள்ளே வந்தார். சந்தித்த 2-வது பந்தையே சிக்ஸருக்கு சுற்றி, ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். திட்டமிட்ட திவேதியா, திகட்டாத ஓவர்யா! கேப்டன் மோர்கன் உள்ளே வந்தார். தியாகியின் ஓவரில், ஃபைன் லெக் திசையில் ஒரு சிக்ஸரைப் பொளந்தார். வருகின்ற பேட்ஸ்மேன் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சுற்றியதில், `ரைட்டு, இன்னைக்கு நம்மளை ரணகொடூரமா வேட்டையாடுற முடிவுல இருக்காய்ங்க போல' என ராஜஸ்தான் ரசிகர்கள் எச்சிலை விழுங்கினார்கள். 10 ஓவர் முடிவில், 84/3 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கைவிட்டுப்போன மேட்சை, தன் பக்கம் கயிற்றைப் போட்டு இழுத்தது ராஜஸ்தான். திவேதியா வீசிய 11-வது ஓவரில், வெறும் 4 ரன்கள். கோபால் வீசிய 12-வது ஓவரில், 6 ரன்கள் மற்றும் த்ரிபாதியின் விக்கெட் காலி. 39 ரன்களுடன் இன்னிங்ஸை முடித்துக்கொண்டார். திவேதியா வீசிய 13-வது ஓவரை, பவுண்டரியோடு மோர்கன் வரவேற்றாலும், கார்த்திக்கின் விக்கெட்டை கழற்றிவிட்டு புறப்பட்டார் திவேதியா. கொல்கத்தா சார்பாக, இரண்டாவது கோல்டன் டக்! ராஜஸ்தான் ரசிகர்கள் பெப்பர் தூக்கலாக, ஆஃப்பாயில் போட்டுக் கொண்டாடினர்.

14-வது ஓவர், கேப்டன் மோர்கன் சுய நினைவுக்குத் திரும்புகிறார். லாங் ஆஃப் திசையில் ஒன்று, எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒன்று என அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள். கொல்கத்தா அணியினர் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தமர்ந்தனர். அடுத்து லாங் ஆனில் ஒன்று, லாங் ஆஃபில் ஒன்று என இரண்டு பெரிய சிக்ஸர்கள். கொடுமை கொடுமையென அடுத்த ஓவருக்குச் சென்றால், அங்கு பேட்டோடு நின்றுகொண்டிருக்கிறார் ரஸல். அவுட் சைடு எட்ஜில் ஒரு பவுண்டரி, ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸர் என ஆர்ச்சரின் ஓவரிலேயே ரன்களை அள்ளினார். தியாகி வீசிய 16-வது ஓவரில், லாங் ஆனில் சர்ரென ஒரு சிக்ஸர். லாங் ஆஃபில் சுர்ரென ஒரு சிக்ஸர். `ரஸல் இஸ் பேக்' என விசில் ஊதினர் கொல்கத்தா ரசிகர்கள். ஆனால், அடுத்த பந்தில் வெறும் காத்து மட்டும்தான் வந்தது. அவுட்டானார் ஆண்ட்ரே ரஸல்.

#KKRvRR
#KKRvRR

13.4 ஓவர்களில் இந்த ரன்னை ராஜஸ்தான் சேஸ் செய்தால் ப்ளே ஆஃப் அரியணையில் கெத்தாக அமரலாம் என்கிற சூழலில் ராயல்ஸின் ஆட்டம் துவங்கியது. உத்தப்பாவும் ஸ்டோக்ஸும் இன்னிங்ஸை ஓப்பன் செய்ய, முதல் ஓவரை வீச கம்மின்ஸ் கம்மிங் ஒத்து. லாங் லெக் திசையில் அற்புதமான சிக்ஸரோடு துவங்கினார் உத்தப்பா. ஒருநிமிடம், ராஜஸ்தான் ரசிகர்களே கனவா, நிஜமா என குழம்பிப்போனார்கள். ஸ்டோக்ஸும் அதே ஓவரில், ஷார்ட் ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரி, ஓவர் ஃபைன் லெக்கில் ஒரு சிக்ஸரையும் பொளந்தார். கடுப்பான கம்மின்ஸ், கடைசிப் பந்தில் உத்தப்பாவின் விக்கெட்டைக் கழட்டினார். 19 ரன்கள் 1 விக்கெட் என ஆரம்பமே அதகளமாய் இருந்தது.

மாவி வீசிய 2வது ஓவரில், கவர் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டினார் ஸ்டோக்ஸ். மீண்டும் வந்தார் கம்மின்ஸ். இம்முறை, ஸ்டோக்ஸின் விக்கெட் காலி. டைவ் அடித்து கேட்சைப் பிடித்தார் கார்த்திக். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் வந்து ஒரு பவுண்டரியை விரட்டி பயம்காட்ட, அவரையும் அதே ஓவரில் அவுட்டாகி விரட்டிவிட்டார் கம்மின்ஸ். `இது கனாவாக இருந்திடக்கூடாதா' என ராஜஸ்தான் ரசிகர்கள் கண்ணீர் வடித்தனர். மாவி வீசிய 4வது ஓவரில், சாம்சனின் விக்கெட்டும் காலி. அடுத்து ரியான் பராக் வந்தார். அடுத்த ஓவரிலேயே, பராக்கின் விக்கெட்டையும் படக்கென பறித்தார் கம்மின்ஸ். 6 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்திருக்க, ராஜஸ்தானின் சப்போர்ட்டிங் ஸ்டாஃப்கள் மூட்டைமுடிச்சைக் கட்ட துவங்கியிருந்தார்கள்.

#KKRvRR
#KKRvRR

நாகர்கோட்டி வீசிய 8வது ஓவரில், பட்லர் ஒரு பவுண்டரியும், திவேதியா ஒரு பவுண்டரியும் அடித்தனர். நரைன் வீசிய 9வது ஓவரில், லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். நாகர்கோட்டி வீசிய 10வது ஓவரில், மிட் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரி கிட்டியது பட்லருக்கு. 10 ஓவர் முடிவில், 60 பந்துகளில் 118 ரன் தேவை என்ற நிலையில் தள்ளாடிக்கொண்டிருந்தது ராயல்ஸ். 11வது ஓவரை வீச சுழல் சக்கரவர்த்தி, பட்லரின் விக்கெடைக் கழட்டி எறிந்தார். 35 ரன்களில் சோகமாக பெவிலியனுக்குத் திரும்பினார் பட்லு. நரைன் வீசிய 12வது ஓவரில், டீப் பாயின்ட்டில் ஒரு பவுண்டரி, ஸ்வீப்பில் ஒரு சிக்ஸர் என ஒண்டிப்புலி சர்பத் குடித்தவர் போல் தெம்பாக விளையாடிக்கொண்டிருந்தார் திவேதியா. கடைசியில், வருண் சக்ரவர்த்தி வீசிய 15-வது ஓவரில் அவரும் அவுட். சப்போர்ட்டிங் ஸ்டாஃப்களோடு அணி வீரர்களும் மூட்டைகளைக் கட்டி முடித்திருந்தார்கள். நரைன் வீசிய 17-வது ஓவரில், இரண்டு பவுண்டரிகளை அடித்தார் கோபால். அப்போதும், கொல்கத்தாவுக்கு கோபம் கொப்பளித்தது. பாவத்த...

நாகர்கோட்டி வீசிய 18-வது ஓவரில், ஆர்ச்சரும் அவுட். மாவியின் 19-வது ஓவரில், தியாகியும் அவுட். 131/9 என இன்னிங்ஸை முடித்துக்கொண்டது ராஜஸ்தான். 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ப்ளே ஆஃப் போட்டியில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது கொல்கத்தா. `டொப்பு டொப்புனு விக்கெட் காலியானால், எல்லாம் தப்பு தப்பாதான் நடக்கும். ஆர்ச்சர், திவேதியா எல்லாம் அற்புதமா ஆடினாங்க. யாரும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணல' என்றார் ஸ்டீவ் ஸ்மித். `பேட்டிங் ஆட அற்புதமான விக்கெட். அதான் அடிச்சு நொறுக்கினோம். ரஸலும் மீண்டு வந்துட்டார். பார்ப்போம், மற்ற மேட்சுகள் என்ன ரிசல்டாகுதுனு' என்றார் மோர்கன். பேட்டிங் பவர் ப்ளே ஓவர்களை, பெளலிங் பவர் ப்ளேவாக மாற்றிக்கொண்ட கம்மின்ஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

#KKRvRR
#KKRvRR
அடுத்து நடக்கும் பெங்களூர் வெர்சஸ் டெல்லி மேட்சில், பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும் மக்கா. கால்குலேட்டரோடு ரெடியா இருங்க...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism