Published:Updated:

IPL 2020: கலக்கிய இளைஞர் படை... ராஜஸ்தானுக்கு முதல் தோல்வியைப் பரிசளித்த கொல்கத்தா! #RRvKKR

கார்த்தி
#RRvKKR
#RRvKKR ( twitter.com/IPL )

20 வயது வீரர்களான ஷிவம் மவியும், கம்லேஸ் நாகர்கோட்டியும் ராஜஸ்தானின் டாப் ஆர்டரை காலி செய்து கவனம் ஈர்த்தனர். மவி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும், கடந்த இரண்டு போட்டிகளில், கேப்டன்சியில் அசத்துகிறார் டிகே. பௌலர்களை சரியாக உபயோகிப்பது, ஃபீல்டிங் பிளேஸ்மெண்ட் என எல்லாமே பக்கா. கொல்கத்தாவின் இளைஞர் படை ஃபீல்டிங், பேட்டிங் எல்லா டிபார்ட்மெண்டிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. குல்தீப் யாதவையே 15வது ஓவரில் அறிமுகப்படுத்தும் அளவுக்கு பௌலிங் ஆப்சன்கள் வைத்திருக்கிறார் டிகே.

துபாய் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும், முதலில் பேட் செய்த அணிதான் வென்றிருந்தாலும், டாஸ் ஜெயித்தால் பௌலிங்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கொண்ட கொள்கைக்கு மாறாமல், ஃபீல்டிங் தேர்வு செய்தார் ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித். இந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்ற ஒரே அணி என்பதால், பிளேயிங் லெவனை மாற்றாமல் களம் இறங்கியது. கொல்கத்தாவும் அணியை மாற்றவில்லை.

#RRvKKR
#RRvKKR
twitter.com/IPL

நரைனும், ஷுப்மான் கில்லும் வழக்கம் போல ஒப்பனிங் இறங்கினார்கள். நரைனின் அதிர்ஷட காலம் பேட்டிங்கில் ஏறக்குறைய முடிந்துவிட்டது என்பதையே உணர்த்தியது இந்த ஆட்டமும். ரன் ஏதும் அடிக்காத நிலையில், உத்தப்பாவிடம் எளிதாக கேட்ச் கொடுத்தார் நரைன். கடந்த போட்டியைப் போலவே, இதிலும் கேட்ச் மிஸ் செய்தார் உத்தப்பா. அடுத்த உனத்கட் ஓவரிலேயே 15 ரன்களுக்கு போல்டானார் நரைன். பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா.

இன்றைய ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் அனல் பறந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஷுப்மன் கில்லால், ஒரு ரன் மட்டுமே அடிக்க முடிந்திருந்தது. ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே C&B ஆனார் நன்றாக ஆடிக்கொண்டிருந்த கில். அந்த ஓவரில் ஆர்ச்சர் வீசிய ஒரேயொரு ஸ்லோ பாலை மட்டுமே ரஸலால் சிங்கிளுக்குத் தட்டிவிட முடிந்தது. முதலிரண்டு ஓவர்களில் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தார் ஆர்ச்சர். அவரின் மூன்றாவது ஓவர் முதல் பந்தில், டிகேவின் சோக ஃபார்ம் தொடர்ந்தது. அடித்துவிட்டு கீப்பரை வேறு பார்த்தார். அந்த ஓவரில் 152.1kphல் ஆர்ச்சர் வீசியதுதான் அவரின் வேகமான பந்துவீச்சு. இந்த ஓவரிலும் இரண்டு ரன்கள்தான்.

#RRvKKR
#RRvKKR
twitter.com/IPL

இருபது ஓவர் முடிவில் அறு விக்கெட் இழப்புக்கு, 174 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. நாங்கள் நினைத்தைவிடவும், 15 ரன்கள் அதிகமாக கொல்கத்தா அடித்துவிட்டது என்றார் ஆர்ச்சர்.

பட்லரும், ஸ்மித்தும் ஓப்பனிங் இறங்கினார்கள். நரைனின் முதல் ஓவரில் 12 ரன்கள் விட்டது கொல்கத்தா. ஃபுல் பார்மில் இருந்த ஸ்மித் (முதலிரண்டு போட்டிகளிலும் அரைசதம்), கம்மின்ஸின் முதல் ஓவரில் திணறினார். அதற்கேற்றார் போல், அந்த ஓவரின் இறுதி பந்தில் டிகேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

முதலிரண்டு போட்டிகளை சார்ஜாவில் விளையாடி, அந்த குட்டி மைதானதில் 200+ ரன்கள் எடுத்த அணி, தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பியது. இந்த ஐபிஎல் தொடரில் 200+ ஸ்டிரைக் ரேட்டில், இரண்டு அரை சதங்கள் எடுத்த சஞ்சு சாம்சன், மவி பந்தில் நரைனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த மவியின் ஓவரில் தேர்ட் மேனில் நின்றுகொண்டிருந்த சக்ரவர்த்தியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் பட்லர். உத்தப்பா எல்லாம் கொடூர அவுட் ஆஃப் பார்ம் போல, கம்லேஷ் நாகர்கோட்டியின் பந்துவீச்சில் சுலபமாகவே அவுட்டானார். அதே ஓவரில் ரியான் பராகும் அவுட். ராஜஸ்தானி டாப் ஆர்டரை ஜஸ்ட் லைக் தட் காலி செய்தது கொல்கத்தாவின் இளைஞர் படை.

#RRvKKR
#RRvKKR
twitter.com/IPL

போன மேட்ச், ஒரே ஓவரில் 30 ரன் எடுத்தவர் என்னும் அடைமொழியுடன் இருந்த திவேதியாவும் ராஜஸ்தானுக்குக் கைகொடுக்கவில்லை. பஞ்சாபுக்கு எதிரான போட்டியிலேயே லெக் ஸ்பின் பௌலர்களிடம் திணறிய திவேதியாவுக்கு, லெக்கி சக்ரவர்த்தியை வீச வைத்தார் டிகே. சக்ரவர்த்தியின் கூக்ளியை வீளாச, லெக் சைடில் முழுதாக விலகி நின்ற திவேதியா ஸ்டம்புகளைப் பறிகொடுத்ததுதான் மிச்சம். 11 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான்.

IPL 2020: தோனி டு கோலி... கேன் வில்லியம்சனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள்!

இனி, இந்தப் போட்டியில் பார்க்க ஒன்றுமே இல்லையென்னும் நிலையில், நரைன் வீசிய 19வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்து ஆறுதல் அரைசதம் அடித்தார் டாம் கர்ரன். இறுதியாக 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ராஜஸ்தான். உனத்கட் அடித்த பந்து ஒயர்ல பட்டுச்சு அதனால, நாட் அவுட் என அம்பயரிடம் புகார் கொடுத்தது, போட்டியை ஐந்து நிமிடம் இழுத்தது அன்றி, அதனால், யாருக்கு எந்தப் பயனும் இல்லை.

#RRvKKR
#RRvKKR
twitter.com/IPL
20 வயது வீரர்களான ஷிவம் மவியும், கம்லேஸ் நாகர்கோட்டியும் ராஜஸ்தானின் டாப் ஆர்டரை காலி செய்து கவனம் ஈர்த்தனர். மவி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்த கட்டுரைக்கு