Published:Updated:

ராஜஸ்தான் செந்தில், கொல்கத்தா குணா, பஞ்சாப் பழனி, ஹைதராபாத் வேலு.... இணைப்பரா சென்னை ராஜன்? #KXIPvRR

#KXIPvRR

ராஜஸ்தான் இன்னும் ப்ளே ஆஃப் ரேஸில் உயிர்ப்போடுதான் இருக்கிறது. பஞ்சாப் அணி, நாலாவது இடத்தில் இருந்தாலும் முதல்-இரண்டு இடங்களைப் பிடிப்பது இயலாத காரியம். அய்யகோ! #KXIPvRR

ராஜஸ்தான் செந்தில், கொல்கத்தா குணா, பஞ்சாப் பழனி, ஹைதராபாத் வேலு.... இணைப்பரா சென்னை ராஜன்? #KXIPvRR

ராஜஸ்தான் இன்னும் ப்ளே ஆஃப் ரேஸில் உயிர்ப்போடுதான் இருக்கிறது. பஞ்சாப் அணி, நாலாவது இடத்தில் இருந்தாலும் முதல்-இரண்டு இடங்களைப் பிடிப்பது இயலாத காரியம். அய்யகோ! #KXIPvRR

Published:Updated:
#KXIPvRR
ராஜஸ்தான் செந்தில், கொல்கத்தா குணா, பஞ்சாப் பழனி, ஐதராபாத் வேலு.... இவங்க எல்லோரையும் ப்ளே ஆஃப் ரேஸ்ல இணைக்குறது சென்னை ராஜன். 'எனக்கு கிடைக்காதது வேற யாருக்கும் கிடைக்ககூடாது' என வில்லன் மோடுக்கு மாறியுள்ள சென்னை அணி, அதன் ப்ளே ஆஃப் வாய்ப்பு கருகிப்போன நிலையிலும், டோர்னமென்ட்டையே சூடு பிடிக்கவைத்திருக்கிறது. நான்கு அணி ரசிகர்களும் தங்கள் அணி ஜெயிக்க வேண்டுமென உண்டியலில் காசு போடுகிறார்களோ இல்லையோ, மீத மூன்று அணிகளும் தோற்கவேண்டுமென ட்விட்டரில் காசு வெட்டிப்போடுகிறார்கள். ச்சே!

அபுதாபியில் நேற்று நடந்த 2020 ஐபிஎல்லின் 50-வது போட்டியில், அந்த நான்கில் இரண்டு அணிகளான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. கடந்த சில மேட்சுகள் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும் பஞ்சாப், அதே லெவனோடு களமிறங்கியது. ராஜஸ்தான் அணியில், கடையெட்டாவது வள்ளல் ராஜ்புத்தை அனுப்பிவிட்டு வருண் ஆரோனை `வருக வருக' என வரவேற்றார்கள். டாஸ் வென்ற ராஜஸ்தான், பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தது. ராகுலும் மந்தீப்பும் பஞ்சாப்பின் இன்னிங்ஸைத் தொடங்க, முதல் ஓவரை வீசவந்தார் ஆர்ச்சர்.

#KXIPvRR
#KXIPvRR

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவரின் முதல் நான்கு பந்துகளிலும் நான்கு புள்ளிகளை வைத்த ராகுல், ஐந்தாவது பந்தில் ஒரு கோடு போட்டார். ஆனால், அடுத்த பந்திலோ ஆர்ச்சர் ரோடே போட்டார். சந்தித்த முதல் பந்தே பவுன்ஸாகி சங்கைக் கடிக்க வர, பேட்டை வைத்து தடுத்தார் மந்தீப். பந்து அழகாக எகிறி குதிக்க, பாய்ந்து பிடித்தார் ஸ்டோக்ஸ். அற்புதமான பந்து வீச்சு, மிக அற்புதமான கேட்ச். 1 ஓவர் முடிவில், 1 விக்கெட்டை இழந்து 1 ரன் எடுத்திருந்தது பஞ்சாப் என கோடு கோடாக ஸ்கோர்போர்டில் பைனரி கோட் எழுதியது போலிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டாவது ஓவரை வீசவந்தார் வருண் ஆரோன். ஓவரின் கடைசி பந்தை கெய்ல் புல் அடிக்க, அது பாட்டம் எட்ஜாகி பவுண்டரிக்கு விரைந்தது. அடுத்து ஆர்ச்சர் வீசிய ஓவரில், ஒரு பவுண்டரியை விரட்டிய கே.எல்.ஆர், இந்த சீசனில் 600 ரன்களை எட்டினார். வருண் வீசிய 4வது ஓவரில், டீப் ஃபார்வார்டு ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸரைப் போட்டுவிட்டார் கெயில். ராஜ்புத் இல்லையென்றால் என்ன, இருக்கவே இருக்கிறார் தியாகி என மனதின் ஒரு ஓரமாக நம்பிக்கையை விதைத்திருந்தது பஞ்சாப். அதற்கு பொறுப்பாக உரம் போட்டு, நீர் ஊற்றினார் தியாகி. அவர் வீசிய 5-வது ஓவரில், மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி, டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸர், எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி எனப் பொளந்தார் யுனிவர்சல் பாஸ். ஆரோன் வீசிய 6-வது ஓவரில், ராகுலும் தன் பங்குக்கு ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸரையும் மிட்-விக்கெட் திசையில் ஒரு பவுண்டரியையும் விளாசினார் ராகுல். பவர்ப்ளேயின் முடிவில், 53/1 என சிறப்பான நிலையில் இருந்தது பஞ்சாப். ப்ரீத்தி ஜிந்தாவின் கன்னத்தில் குழி விழுந்தது.

#KXIPvRR
#KXIPvRR

7-வது ஓவரை வீசவந்தார் கோபால். அவர் வீசிய ஓவரின் 4வது பால், பவுண்டரிக்கு அப்பால் பறந்துபோய் விழுந்தது. கெய்லுக்கு இன்னொரு சிக்ஸர். ஸ்டோக்ஸ், 8-வது ஓவரை வீசவந்தார். அவருக்கும் ஒரு பவுண்டரி பாயாசத்தைப் போட்டார் கெய்ல். திவேதியா வீசிய 9-வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. `தப்புணே... ரொம்ப தப்பு' என கடுப்பான தியாகி, ராகுலுக்கு ஒரு சிக்ஸரைக் கொடுத்து சமாதானப்படுத்தினார். 10 ஓவரின் முடிவில், 81/1 என சற்று சறுக்கியிருந்தது பஞ்சாப். திவேதியா வீசிய 11-வது ஓவரில் மற்றுமொரு சிக்ஸரை வறுத்த கெய்ல், தனது அரைசதத்தையும் கடந்திருந்தார். யுனிவர்சல் பாஸ்... பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல. திவேதியாயா வீசிய 13-வது ஓவரில், லாங் ஆன் திசையில் இன்னொரு சிக்ஸரையும் போட்டார். 14-வது ஓவரை வீசவந்தார் ஆர்ச்சர். ராகுலுக்கு ஒரு பவுண்டரியும், கெயிலுக்கு ஒரு பவுண்டரியும் கிட்டியது. 15-வது ஓவரில், டீப் மிட் விக்கெட்டில் கேட்சாக வைத்து ராகுலின் விக்கெட்டைக் கழற்றினார் ஸ்டோக்ஸ். 41 பந்துகளில் 46 எனும் கேப்டனின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

16-வது ஓவரை வீசவந்தார் ஆரோன். அதில் 2 சிக்ஸர்களைப் போட்டார் பூரன். ஆரோன் வெர்சஸ் பூரன்! ஸ்கொயர் லெக்கில் ஒன்று, எக்ஸ்ட்ரா கவரில் ஒன்று என 2 சிக்ஸர்கள். தியாகி வீசிய 17வது ஓவரில், மீண்டும் ஒரு சிக்ஸர் கிடைத்தது பூரனுக்கு. இந்த சீசனில் பூரன் அடித்த 25-வது சிக்ஸர் இது. மீண்டும் ஸ்டோக்ஸ் வந்தார். பூரனின் விக்கெட்டைக் கழற்றினார். தியாகி வீசிய 19-வது ஓவரில், லெக் சைடில் கெய்ல் ஒரு சிக்ஸரைப் போட்டார். அவருடைய ஆயிரத்து ஒன்றாவது சிக்ஸர் இது. ஆயிரத்து ஒன்றில் ஒருவன்! இன்னும் ஒரு ரன் எடுத்தால் சதம் என்ற நிலையில், கெய்லின் இன்னிங்ஸ் `கதம் கதம்'. ஆர்ச்சர் இறக்கிய யார்க்கரில் போல்டானார். பாவத்த! 20 ஓவரின் முடிவில், 185/4 என வலுவான நிலையில் இருந்தது பஞ்சாப்.

#KXIPvRR
#KXIPvRR

186 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கினர் உத்தப்பா மற்றும் ஸ்டோக்ஸ். அப்பாவி சிறுவன் அர்ஷ்தீப் முதல் ஓவரை வீசவந்தார். ஓவரின் 6-வது பந்து. மிட்-ஆன் ஒரு பவுண்டரியைப் பறக்கவிட்டு ரன் மெஷினை ஆன் செய்தார் ஸ்டோக்ஸ். ஷமி வீசிய 2வது ஓவரில், ஸ்டோக்ஸ் கவர் பாயின்ட்டில் ஒர் பவுண்டரியை விரட்ட, உத்தப்பா ஒரு ஃபைன் லெக்கில் ஒரு சிக்ஸரைப் போட்டார். அர்ஷ்தீப் வீசிய 3-வது ஓவரில், டீப் மிட் விக்கெட், ஷார்ட் ஃபைன் லெக் என இரண்டு பவுண்டரிகள் கிட்டின ஸ்டோக்ஸுக்கு. ஸ்பின் கன் முருகன் வந்தார். முருகன் அஸ்வின் வீசிய 4வது ஓவரை, 1 பவுண்டரி, 2 சிக்ஸர் சிதறடித்தார் பென் ஸ்டோக்ஸ். ஷமி வீசிய 5வது ஓவரில், இன்னொரு பவுண்டரி. 30 பந்துகளில் 23 பந்துகளை ஸ்டோக்ஸ் மட்டுமே ஆடியிருந்தார். ஜோர்டன் வீசிய 6வது ஓவரின் முதல் பந்தில் 6 ரன்கள் விளாசிய ஸ்டோக்ஸ், அப்படியே அரைசதத்தையும் கடந்தார். `என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது' என பஞ்சாப் ரசிகர்கள் பயந்துப்போனார்கள். கடைசியில், அதே ஓவரில் அவுட்டானார் பெஞ்சமின் ஸ்டோக்ஸ். ப்ச்ச்...

சஞ்சு சாம்சன் உள்ளே வந்தார். பிஷ்னோய் வீசிய 8வது ஓவரில், உத்தப்பா ஒரு பவுண்டரியை உருட்டிவிட்டார். இந்தப் பக்கம் அர்ஷ்தீப் 9வது ஓவரில், ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸரை கொளுத்தினார் சாம்சன். பிஷ்னோய் வீசிய 10வது ஓவரில், லாங் ஆஃப் திசையில் சஞ்சுவுக்கு இன்னொரு சிக்ஸர். 10 ஓவர் முடிவில், 103/1 என சம்பவம் அடித்து வைத்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இன்னும் 60 பந்துகளில் 83 ரன்கள் மட்டுமே தேவை. முருகன் அஸ்வின் வீசிய 11வது ஓவரில், ஆசை தீர ஒரு சிக்ஸரை அடித்துவிட்டு, அடுத்த பந்தே அவுட்டாகி கிளம்பினார் உத்து. பிஷ்னோயின் 12வது ஓவரில், ஸ்மித்துக்கு ஒரு பவுண்டரி கிட்டியது. முருகன் அஸ்வின் வீசிய 13வது ஓவரை, வெச்சி செய்தார் சஞ்சு. டீப் மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸர், டீப் கவரில் ஒரு பவுண்டரி. 14வது ஓவரை வீச வந்த ஜோர்டன், பேட்ஸ்மென் இருவருக்கும் ஒரு பவுண்டரிகளை பரிசளித்தார். 15வது ஓவரில், திடீரென ஸ்மித் ரன் அவுட்! பட்லர் களமிறங்கினார். 15வது ஓவர் முடிவில், 146 ரன்கள் என மிகவும் வலுவான நிலையில் ராஜஸ்தான். ப்ரீத்தி ஜித்தா மனதில் இடி விழுந்தது!

#KXIPvRR
#KXIPvRR

ஜோர்டன் வீசிய 16வது ஓவரில், லாங் ஆனில் ஒரு சிக்ஸரை விரட்டினார் ஜோர்டன். பசிக்கு பழையசோற்றைத் திருடிக்கொண்டிருந்த இடத்தில், ருசிக்கு பாயாசமே கிடைத்தால் எப்படியிருக்கும்? ராஜஸ்தான் அணிக்கு அப்படித்தான் இருந்தது 17வது ஓவர். மிட் ஆஃபில் ஒன்று, டீப் மிட் விக்கெட்டில் ஒன்று, ஷார்ட் ஃபைனில் ஒன்று என 3 பவுண்டரிகளைக் கொளுத்தினார் கேப்டன் ஸ்மித். அதே ஓவரில், பட்லரும் டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரியைப் போட்டார். ஒரே ஓவரில் 19 ரன்கள். இன்னும் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி.

ஜோர்டன் வீசிய அடுத்த ஓவரில், ஒரு சிக்ஸர் உட்பட 11 ரன்களை எட்டி, வெற்றிக்குறி காண்பித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். `என்னங்கடா எவ்ளோ அடிச்சாலும் திருப்பி அடிச்சுப்புடுறீங்க' என பஞ்சாப் ரசிகர்கள் கடுப்பானார்கள். ராஜஸ்தான் இன்னும் ப்ளே ஆஃப் ரேஸில் உயிர்ப்போடுதான் இருக்கிறது. பஞ்சாப் அணி, நாலாவது இடத்தில் இருந்தாலும் முதல்-இரண்டு இடங்களைப் பிடிப்பது இயலாத காரியம். அய்யகோ!

#KXIPvRR
#KXIPvRR

"டாஸ் ஜெயிக்காமல் போனது, எங்களுடைய துரதிர்ஷ்டம். பனி விழுந்து கெடுத்து விட்ருச்சு. நாங்க மோசமா பந்து வீசல. ஆனா, இன்னும் நல்லா பந்து வீசியிருக்கலாம்" என கமல் ஸ்டைலில் பேசினார் கே.எல். "சிறப்பான, தரமான ஆட்டம். நாங்க ப்ளே ஆஃப்புக்குள்ளே நுழையுறத பார்க்கதான் போறீங்க" என நம்பிக்கையாக பேசினார் ஸ்மித். பென் ஸ்டோக்ஸுக்கு, ஆட்டநாயகன் விருது வழங்கபட்டது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism