Election bannerElection banner
Published:Updated:

ஆரஞ்சு கேப்புக்கு மட்டும் ஆடினால் போதுமா ராகுல்?! ப்ளேஆஃப் கனவை நோக்கி கொல்கத்தா! #KXIPvKKR

#KXIPvKKR
#KXIPvKKR ( twitter.com/IPL )

பஞ்சாப், இன்றைய போட்டியில் பௌலர்களை அருமையாக உபயோகித்தது. இடதுகை வேகப்பந்து வீச்சாளர், அர்சிதிப் சிங் மெய்டன் ஓவர் எல்லாம் வீசி, கேகேஆர் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். ஆனால் வெற்றிக்கு இது மட்டும் போதுமா என்ன?

தவறுகள் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் பஞ்சாப் மற்றுமொறு மாபெரும் தவறு செய்து கைக்கு அருகில் வந்த வெற்றியைத் தவறவிட்டு இருக்கிறது. தங்களது வலிமையற்ற மிடில் ஆர்டரால், மீண்டும் நூலிழையில் வெற்றியை விட்டுக் கொடுத்து 7 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்து, ப்ளே ஆஃப் வாய்ப்பை மிகக் கடினமானதாக்கியுள்ளது.

சென்ற போட்டியில், சிஎஸ்கேவுடன் இறுதி நிமிடங்களில் மாயம் செய்து, அசத்தல் வெற்றியைப் பெற்ற கேகேஆர்ரோ, திரும்பவும் அச்சுப் பிறழாமல் அதே போன்றதொரு மற்றுமொரு திரில்லிங் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

அனைவரும் மிகவும் எதிர்பார்த்த கிறிஸ் கெயிலை, இன்றும் பஞ்சாப் களம் இறக்கவில்லை. எனினும் பிளேயிங் லெவனில் இருபக்கமும், இன்று சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. பஞ்சாப்பில், காட்ரேலுக்கு பதிலாக ஜோர்டன் இறங்க, கேகேஆர்ரோ சிவம் மாவிக்கு பதில், பிரசித் கிருஷ்ணாவை களம் இறக்கியது.

#KXIPvKKR
#KXIPvKKR
twitter.com/IPL

டாஸ் ஜெயித்த கேகேஆர் பேட்டிங்கைத் தேர்வு செய்ய, ஆரம்பமே அவர்களுக்கு அதிர்ச்சியான தொடக்கமாக இருந்தது. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்ததனால், பவர்பிளே ஓவர்களில் அவர்களால் 25 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இன்று கேகேஆரின் பேட்டிங்கைப் பார்த்தவர்களுக்கு, இவர்கள் 20 ஓவர் ஐபிஎல் போட்டி ஆடுகிறார்களா அல்லது ஒருநாள் போட்டி ஆடுகிறார்களா என்ற சந்தேகமே வந்திருக்கும். அந்த அளவுக்கு மந்தமாகத்தான் இருந்தது.

சுபம் கில்லும், இயான் மார்கனும் தராசுபோல பந்துக்குச் சமமாக ரன்களையும் கொண்டு சென்றனர். ஒரு ஓவரில்கூட அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் இறுதிவரை சுபம்கில்லுக்கு வரவில்லை. 47 பந்துகளைச் சந்தித்து 57 ரன்களை மட்டுமே எடுத்து, அணியின் ஸ்கோரைப் பெரிதாக உயர்த்தாமல் சென்றுவிட்டார்.
பல போட்டிகளில் சொதப்பிக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக், இன்று அதிசயமாக ஃபார்ம்க்குத் திரும்பினார். அவரது அதிரடியினால் மட்டுமே கேகேஆர்ரால் 164 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயிக்கமுடிந்தது.

29 பந்துகளைச் சந்தித்தவர் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் எனப் பறக்கவிட்டு 58 ரன்கள் எடுத்து கேகேஆர் ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசை வழங்கினார். குறிப்பாக கிறிஸ் ஜோர்டன் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என அடுத்தடுத்து அடித்து அசத்தினார்.

#KXIPvKKR
#KXIPvKKR
twitter.com/IPL

கேகேஆர்ரின் பெரும் எதிர்பார்ப்பான ரசல் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் பேட்டிங்கில் சொதப்பிக் கொண்டிருக்கிறார். அதே வகையான ஆட்டம்தான் இன்றும் தொடர்ந்தது. கடைசி இரண்டு ஓவர்கள் இருக்கும்போது களத்திற்கு வந்தவர், 5 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்ட, கேகேஆரால் 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

பஞ்சாப், இன்றைய போட்டியில் பௌலர்களை அருமையாக உபயோகித்தது. இடதுகை வேகப்பந்து வீச்சாளர், அர்சிதிப் சிங் மெய்டன் ஓவர் எல்லாம் வீசி, கேகேஆர் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். ஆனால் வெற்றிக்கு இது மட்டும் போதுமா என்ன?

165 ரன்கள் என்ற டார்கெட்டை சேஸ் செய்யத் தொடங்கிய பஞ்சாபிற்கு வழக்கம்போல் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. ஆரஞ்சு கேப்புக்கு அடிதடி செய்துவரும் கேஎல் ராகுலும் மயாங் அகர்வாலும் நங்கூரமாக நின்றுவிட்டனர். கேகேஆர் மாற்றி மாற்றி பவுலர்களை உபயோகித்தும் யாராலும் இவர்கள் விக்கெட்டை வீழ்த்தவே முடியவில்லை. 14ஆவது ஒவரில் 39 பந்தில் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயாங் அகர்வால் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடித்து அவுட் ஆகிச்சென்றார். அடுத்து வந்த பூரண் 16 ரன்களில் நரைனிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்தார்.

#KXIPvKKR
#KXIPvKKR
twitter.com/IPL

இதுவரைதான் மேட்ச் பஞ்சாப்பிடம் இருந்தது. 16 பந்தில் 21 ரன்கள் எடுக்கவேண்டும்... 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்திருக்கிறது, களத்தில் செட்டில் ஆன கேஎல் ராகுல் வேறு இருக்கிறார். அடுத்து மேக்ஸ்வெல் உள்ளே வர இருக்கிறார். அனைவரும் பஞ்சாப் எளிதான வெற்றியைப் பெற்றுவிடும் எனக் கருத அன்பிரெடிக்டபிள் கோச்சிங்கை பண்ணிக் கொண்டிருக்கும் கும்ப்ளே, மேக்ஸ்வெலை அனுப்பாமல், சிம்ரன் சிங்கை உள்ளே அனுப்பினார். இங்கேதான் ஆட்டமே தலைக்கீழாக மாறியது.

சிஎஸ்கேவிற்கு ரசல் எமனாக இருந்தார் என்றால் இந்த மேட்ச்சில் பிரசித் கிருஷ்ணா எமனாக மாறினார்.

19வது ஓவரை வீசியவர், சிம்ரான் சிங்கை 4 ரன்களிலும், நன்றாக ஆடிக்கொண்டிருந்த கேஎல்ராகுலை 74 ரன்களிலும் அவுட் ஆக்கி, வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து மேட்ச்சில் கொல்கத்தாவின் கொடியை நாட்டினார். பொறுப்புடன் நின்று ஆட்டத்தை முடித்திருக்கவேண்டிய ராகுல் ஸ்டம்புக்கு வெளியே வந்த ஃபுல் டாஸ் பந்தில் இன்ஸைட் எட்ஜாகி ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார். இதற்கும் அடித்து ஆடவேண்டிய பிரஷர் ஏதும் அப்போது இருக்கவில்லை. ஆரஞ்சு கேப் மட்டும் போதுமா ராகுல்?

ஸ்மித் ஆர்வக்கோளாறுகள்... டெல்லியின் பெளலிங்கையே சேஸ் செய்ய நினைத்த ராஜஸ்தானின் சோகம்! #RRvDC

இறுதி ஓவரில் 14 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வர, நரைன் சுழலில் சிக்கிய மேக்ஸ்வெல்லால் 12 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. 5வது பந்தில் மந்திப் சீங் டீப் மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்து அவுட் ஆக கடைசி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று வந்து நின்றது. எங்கே மேக்ஸ்வெல் சிக்ஸர் அடித்து சூப்பர் ஓவருக்கு அழைத்துச் சென்று விடுவாரோ என எதிர்பார்க்க, பவுண்டரி மட்டுமே அவரால் அடிக்கமுடிந்தது. அதுவும் சிக்ஸராக சில இன்ச்கள் வித்தியாசம் மட்டுமே! 2 ரன்களில் மீண்டும் ஒரு திரில்லிங் வெற்றியைப் பெற்றது கேகேஆர்.

#KXIPvKKR
#KXIPvKKR
twitter.com/IPL

கைக்கு அருகில் இருந்த வெற்றியை கோட்டைவிட்டு இருக்கிறது பஞ்சாப். இவர்களுக்கு 5வது தொடர் தோல்வி இது. 7 போட்டிகளில் ஆடியவர்கள் 1 போட்டியில் மட்டும் வெற்றிபெற்று பிளேஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட தவறவிட்டுள்ளனர் என்றே சொல்லலாம்.

கேகேஆர் ஒவ்வொரு முறை தோல்விக்கு அருகில் சென்று திரில்லிங் வெற்றியைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்களிடம் இருந்து சீரான ஆட்டம் வெளிப்படுமேயானால் அவர்கள் பிளே ஆஃப் செல்வது உறுதி.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு