Published:Updated:

தோனியின் அடாவடிகள்... மாற்றங்கள் இல்லா சென்னை மாட்டிக்கொண்டது எப்படி?! #CSKvDC

#CSKvDC
#CSKvDC

தீபக் சஹாரின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ப்ரித்வி ஷாவின் பேட்டில் பந்துபட்டு தோனியிடம் கேட்ச் ஆனது. ஆனால், யாருமே கேட்ச்சுக்கு அப்பீல் செய்யவேயில்லை.

தோனியின் அணிக்குத் தொடர்ந்து இரண்டாவது தோல்வி. ராஜஸ்தானை அடுத்து டெல்லியிடமும் தோல்வியை சந்தித்திருக்கிறது சென்னை. இந்தப்போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே சென்னை வெற்றிக்காக விளையாடவில்லை என்பதுதான் உண்மை. டெல்லிக்கு எதிராக என்னவெல்லாம் நடந்தது?! #CSKvDC

#CSKvDC
#CSKvDC

1. டாஸ் வெற்றி ஆனால் தோல்வி!

முதலில் பேட்டிங் செய்யும் அணியே தொடர்ந்து வெற்றிபெறுகிறது என்பது நிரூபணம் ஆனப்பிறகும், டாஸ் வென்றபிறகும் பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார் தோனி. டாஸின் போது ''மைதானத்தின் சூழலுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும்'' என்றார் தோனி. அவர் சொன்னதையே அவர் செய்ததுபோல் தெரியவில்லை. தோல்விக்குப்பிறகு ''டியூ இல்லை. ஆனால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டார்கள்... சேஸ் செய்யும் அணிகள் தொடர்ந்து சொதப்புவதுதான் தோல்விக்குக் காரணம்'' என சமாளித்தார். டாஸிலேயே சென்னை தோல்வியை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டது.

2. எதிர்பாராததை எதிர்பார்க்காதே!

எதிர்பார்த்த மாற்றங்கள் அல்லது தேவையான மாற்றங்கள் எதையுமே தோனி செய்யவில்லை. இதை ஒருவகையில் தோனியின் அடாவடி ஆட்டிட்யூட் என்றுகூட சொல்லலாம். பேட்டிங் ஆர்டர் பலவீனமாக இருக்கிறது என்பதை உணர்ந்தும் பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் செய்யாமல், எங்கிடிக்கு பதிலாக ஜோஷ் ஹேஸில்வுட்டை மட்டுமே ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டுவந்திருந்தார் தோனி. முரளி விஜய், கேதர் ஜாதவ் என சென்னையின் மிக மோசமான பர்ஃபாமெர்கள் தொடர்ந்து ப்ளேயிங் லெவனுக்குள் இடம்பிடிப்பது ஏன் என்கிற கேள்விக்கு தோனியிடமே சரியான பதில் இருப்பதுபோல் தெரியவில்லை. இவர்கள் இருவரும் அணிக்குள் இருக்கும்வரை சென்னையின் பேட்டிங் பிரச்னை தீரப்போவதேயில்லை.

#CSKvDC
#CSKvDC

3. ப்ரித்வி ஷா-வுக்கு உதவிய சிஎஸ்கேயன்ஸ்

ரன்கள் அடிக்கமுடியாமல், ஃபார்முக்கு வரமுடியாமல் திணறிக்கொண்டிருந்த டெல்லியின் பொடியன் ப்ரித்வி ஷாவை ரன் அடிக்கவிட்டதிலேயே சென்னையின் பெளலிங் எவ்வளவு மோசம் என்பது தெரியும். தீபக் சஹாரின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ப்ரித்வி ஷாவின் பேட்டில் பந்துபட்டு தோனியிடம் கேட்ச் ஆனது. ஆனால், யாருமே கேட்ச்சுக்கு அப்பீல் செய்யவேயில்லை. எப்போதுமே இதுபோன்ற எட்ஜ்களை மிஸ் செய்யாமல் கவனிக்கும் தோனியின் காதுகள் சத்தத்தை மிஸ் செய்ததன் விளைவு 64 ரன்கள் அடித்து மேட்ச் வின்னரானார் ப்ரித்வி ஷா.

4. ஏமாற்றிய ஸ்பின்னர்ஸ்!

டெல்லியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சமாளிக்கவே ஸ்பின்னர்களை பயன்படுத்தும் எண்ணத்தில் இருந்தார் தோனி. ஆனால், பவர்ப்ளே வரை விக்கெட்டே விழாததால் ஆறாவது ஓவருக்கு மேல் இருந்து தொடர்ந்து ஜடேஜா, சாவ்லா என ஸ்பின்னர்களைப் பந்துவீசவைத்தார். இதில் சாவ்லா மட்டுமே தனது மூன்றாவது ஒவரில் தவான், ப்ரித்வியின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ப்ரித்வியின் விக்கெட்டை ஸ்டம்ப்பிங் என்று சொல்லுவதைவிட ரன் அவுட் என்று சொல்வதே சரி. இன்னொரு பக்கம் ஜடேஜா தொடர்ந்து இரண்டாவது மேட்ச்சாக விக்கெட் எதுவும் எடுக்காமல் 40 ரன்களுக்கு மேல் கொடுத்தார்.

5. வேகம் பாவம்!

தீபக் சஹார் பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட். ஆனால், தொடர்ந்து இரண்டாவது போட்டியாக ஓப்பனிங் விக்கெட்டுகளை எடுக்கத்தடுமாறுகிறார் சஹார். விக்கெட்டே எடுக்காமல் 38 ரன்கள் கொடுத்தார் சஹார். இன்னொருபக்கம் நோ பால் போட்டு ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸர்கள் கொடுக்கவில்லையே தவிர ஹேஸில்வுட்டும் விக்கெட்டுகள் எடுக்கவில்லை. சாம் கரண் மட்டுமே ஒரேயொரு விக்கெட் எடுத்த ஒரே வேகப்பந்து வீச்சாளர்.

#CSKvDC
#CSKvDC

6. டெல்லி கில்லீஸ்!

200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கவேண்டியவர்களை 175 ரன்களுக்குள் முடக்கியதில் மட்டுமே சென்னையின் பெளலர்களை பாராட்டலாம். மற்றபடி சென்னையின் எந்த பெளலரையும் மதிக்காமல்தான் டெல்லி பேட்ஸ்மேன்கள் ஆடினார்கள். ஷா, தவான், பன்ட், ஐயர் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லோருமே 25 ரன்களுக்கு மேல் அடிக்க பெரிய அதிரடிகள் எதுவும் இல்லாமலேயே வெற்றிக்குத் தேவையான 175 ரன் டார்கெட்டை நிர்ணயித்துவிட்டது டெல்லி.

#Dhoni
#Dhoni

7. சேஸிங் பரிதாபம்!

சென்னையின் சேஸிங் தொடங்கியதில் இருந்தே பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கில் 175 ரன்களை சேஸ் செய்வதற்கான எந்த மெனக்கெடலும் இல்லை. வழக்கம்போல வாட்சன், முரளி விஜய் இருவரும் சொதப்ப, கெய்க்வாடும் இரண்டாவது முறையாக காலை வாரினார். தொடர்ந்து சென்னைக்காக உயிரைக்கொடுத்து பேட்டிங் ஆடிவரும் டுப்ளெஸ்ஸி மட்டுமே 43 ரன்கள் அடித்தார். அவரும் அடித்திருக்கவில்லையென்றால் சென்னையின் ஸ்கோர் 100-ஐத் தாண்டியிருக்குமா என்பதே சந்தேகம்தான்.

8. குழப்பியடிக்கும் பேட்டிங் ஆர்டர்!

ப்ளேயிங் லெவனை மாற்றாமல் வந்ததுகூட ஓகே. தொடர்ந்து பேட்டிங் ஆர்டரில் குழப்பங்கள் செய்வது தோனி போன்ற கேப்டனுக்கு அழகல்ல. ஜூனியர் வீரரான ருத்துராஜை ஓப்பனிங் அல்லது 1 டவுன் பேட்ஸ்மேனாக இறக்கும் வாய்ப்பிருந்தும் அவரைத்தொடர்ந்து ப்ர்ஷரான சூழலில் 2 டவுன் பேட்ஸ்மேனாகவே இறக்கினார் தோனி. 5 ரன்னில் ரன் அவுட் ஆகி ருத்துராஜ் வெளியேறினார். 5-வது பேட்ஸ்மேனாக இந்தப்போட்டியிலாவது வருவார் என தோனியை எதிர்பார்த்தால் கேதர் ஜாதவ் வந்தார். கடைசிகட்ட ஆறுதலாக சில சிக்ஸர்கள் அடிக்க சாம் கரண் வருவார் என எதிர்பார்த்தால் ரவீந்திர ஜடேஜா வந்தார் என தோனியின் முடிவுகள் எதுவும் நேற்று பெருமைகொள்ளக்கூடியதாக இல்லை.

Chennai Super Kings
Chennai Super Kings

9. தோனியை வீழ்த்த வியூகங்கள்!

தோனிக்கு பயம்காட்டி அச்சுறுத்தும் வித்தைகளை எதிரணிகள் கற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. கவர், எக்ஸ்ட்ரா கவர், மிட் ஆஃப் என ஆஃப் சைடில் அவ்வளவு ஃபீல்டர்களை நிறுத்தி தோனிக்கு பயம் காட்டியது ஷ்ரேயாஸ் ஐயர் - ரிக்கி பான்ட்டிங் கூட்டணி. ஆஃப் சைடில் ஃபீல்டர்களை நிறுத்திவிட்டு லெக் சைடில் ஆவேஷ் கான் பெளலிங் போட்டதால் சில பவுண்டரிகளை மட்டுமே அடித்துவிட்டு, தோல்வியை உறுதிசெய்துவிட்டு வெளியேறினார் தோனி.

10. பிளான் பண்ணணும் தோனியன்ஸ்!

இதே ப்ளேயிங் லெவனோடு தொடர்ந்து சென்னை விளையாடினால் முதல்முறையாக ப்ளே ஆஃப் கூட விளையாட முடியாத சூழல் உருவாகும். கேதர் ஜாதவ், முரளி விஜய்க்கு பதிலாக புதுவீரர்களை அணிக்குள் இறக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. சென்னைக்கு இன்னும் 7 நாட்களுக்குப் போட்டிகள் இல்லை என்பதால் அணிக்குள் பாசிட்டிவ் எனர்ஜியை ஊட்டி தேவையான மாற்றங்களை செய்து வெற்றிப்பாதையை நோக்கிப் பயணிக்கவைப்பது தோனியின் கடமை... செய்வாரா தோனி?!

அடுத்த கட்டுரைக்கு