Published:Updated:

ரபாடாவின் ரகிட ரகிட, ஸ்டாய்னிஸின் செம ஸ்பீடு 50... டெல்லியின் பிளான்களில் சுருண்ட பெங்களூரு! #RCBvDC

#RCBvDC
#RCBvDC

டாஸ் வென்றதும் டியூவைக் காரணம் காட்டி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்ததில் ஆரம்பித்தது கோலியின் சறுக்கல்.

ஐபிஎல் 2020 சீசனின் சாம்பியன்ஷிப்பை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக செம ஃபார்மில் இருக்கிறது டெல்லி கேபிடல்ஸ். ஏற்கெனவே விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றிபெற்று, ஹைதராபாத்திடம் மட்டுமே தோல்வியடைந்திருந்த டெல்லி நேற்று பெங்களூரையும் வீழ்த்தி நான்கு வெற்றிகளோடு முதலிடத்தில் இருக்கிறது.

டாஸ் வென்றதும் டியூவைக் காரணம் காட்டி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்ததில் ஆரம்பித்தது கோலியின் சறுக்கல். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆடம் ஸாம்பா வெளியேபோக அவருக்குப் பதில் மொயின் அலியியும், குர்கிரீத் மானுக்கு பதிலாக முகமது சிராஜும் பெங்களூரு அணியில் இடம்பிடித்திருந்தார்கள். டெல்லி அணியில் இருந்து காயம் காரணமாக 2020 ஐபிஎல்-ல் இருந்தே விலகியிருக்கும் அமித் மிஷ்ராவுக்கு பதிலாக அக்ஸர் பட்டேல் சேர்க்கப்பட்டிருந்தார்.

#RCBvDC
#RCBvDC

வாஷிங்டன் சுந்தரின் ஆஃப் ஸ்பின்னை மட்டும் மிக கவனமாக கையாள வேண்டும், மற்ற பெளலர்களை பவர்ப்ளேயில் அடித்து நொறுக்கவேண்டும் என்கிற முடிவோடு டெல்லியின் ஓப்பனர்களான ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் களமிறங்கியிருந்தார்கள். பவர்ப்ளேவுக்குள் ஓப்பனிங் விக்கெட்டுகளை தூக்கிவிடவேண்டும் என துடியாய் துடித்துக்கொண்டிருந்தார் பெங்களூரு கேப்டன் கோலி. இசுரு உடானாவின் முதல் ஓவரில் இருந்தே பவுண்டரிகளாக அடிக்க ஆரம்பித்துவிட்டார் பிரித்வி ஷா. வாஷிங்டன் சுந்தரின் பெளலிங்கில் மட்டும் டாட் பால்கள்விட்டு சைனி, சஹால் என மற்ற பெளலர்களை பவுண்டரிக்கு விரட்டிக்கொண்டிருந்தது ப்ரித்வி - தவான் கூட்டணி. 6 ஓவர் பவர்ப்ளேவின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் அடித்துவிட்டது டெல்லி. வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து 3 ஓவர்கள் வீசி வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்ததார். மற்ற மூன்று பெளலர்கள் மட்டும் 46 ரன்கள் கொடுத்தார்கள்.

IPL 2020: வாட்டோ பேக் டு ஃபார்ம், டு பிளஸ்ஸி மிரட்டல்... பஞ்சாப் சொதப்பியது எங்கே? #KXIPvCSK

பவர்ப்ளே முடிந்ததும் பயந்துகொண்டே சிராஜை இறக்கினார் கோலி. ஆனால், சிராஜ்தான் ஓப்பனிங் விக்கெட்டாக ப்ரித்வியின் விக்கெட்டைத் தூக்கினார். 23 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்தார் ப்ரித்வி. அடுத்து வாஷிங்டன் ஓவர். தன்னுடைய நான்காவது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 ஓவர் ஸ்பெல்லில் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார் சுந்தர்.

#RCBvDC
#RCBvDC

அடுத்து தவான் உடனா பெளலிங்கில் 32 ரன்களில் அவுட் ஆக, கேப்டன் ஷ்ரேயாஸின் மொயின் அலியின் பெளலிங்கில் வெறும் 11 ரன்களில் அவுட் ஆனார். ஆட்டம் பெங்களூருவின் கன்ட்ரோலுக்கு வந்துவிட்டது என நினைத்தபோதுதான் மார்கஸ் ஸ்டாய்னிஸ் வந்தார். 26 பந்துளில் 53 ரன்கள் அடித்து மேட்ச்சை அப்படியே டெல்லி பக்கம் திருப்பிவிட்டார். ஸ்டாய்னிஸின் இன்னிங்ஸில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள். 20 ஓவர்களின் முடிவில் 196 ரன்கள் அடித்தது டெல்லி. கடைசி 8 ஓவர்களில் மட்டும் 102 ரன்களை வாரி வழங்கினர் பெங்களூரு பெளலர்கள். தொடர்ந்து சிறப்பாகப் பந்து வீசிவந்த சஹாலையும், சைனியையும் விக்கெட் இல்லாமல் விரட்டிவிட்டது டெல்லி.

கிட்டத்தட்ட ஓவருக்கு 10 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற நெருக்கடியோடு சேஸிங் செய்ய வந்தது பெங்களூரு. ரபாடாவின் முதல் ஓவரிலேயே ஃபின்ச் தப்பிப்பிழைத்தார். நல்ல ஃபார்மில் இருந்த தேவ்தத் படிக்கல் அஷ்வினின் பெளலிங்கில் வெறும் 4 ரன்களில் அவுட் ஆக, அடுத்து ஃபின்ச் அக்ஸர் பட்டேலின் ஆஃப் ஸ்பின்னில் வீழ்ந்தார். ஏபி டில்லியர்ஸ், மொயின் அலி, வாஷிங்டன், துபே என வந்தவர்கள் எல்லாம் வந்தகையோடு அவுட் ஆகி கிளம்ப, கோலி மட்டுமே 20 ரன்களைத் தாண்டிய பெங்களூரு பேட்ஸ்மேன். 39 பந்துகளில் 43 ரன்கள் அடித்து அவுட் ஆனார் கோலி. ரபாடாதான் கோலியின் விக்கெட்டைத் தூக்கியவர். கோலியோடு சேர்த்து சுந்தர், துபே, உடனா என மொத்தம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் ககிஸோ ரபடா. பெங்களூரு 20 ஓவர்களின் முடிவில் வெறும் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. டெல்லி கேபிடல்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் பெருவெற்றி பெற்றது.

#RCBvDC
#RCBvDC
"இன்றைய தவறுகளைத் திருத்திக்கொண்டால் அடுத்தடுத்து நாங்கள் தொடர் வெற்றிகளைப்பெறுவோம். கிறிஸ் மோரிஸ் விளையாடத்தயாராகிவிட்டார். அடுத்து சென்னைக்கு எதிரானப் போட்டியில் அவரைப் ப்ளேயிங் லெவனில் எதிர்பார்க்கலாம்" என்றார் கோலி. ரிக்கி பான்ட்டிங்கின் டைரி வெற்றிக்குறிப்புகளால் நிரம்ப ஆரம்பித்திருக்கிறது.
அடுத்த கட்டுரைக்கு