Published:Updated:

IPL 2020: டெத் பௌலிங்கில் மிரட்டிய டெல்லி... நார்க்கியா வேகத்தில் பம்மிப் பதுங்கிய ராஜஸ்தான்! #DCvRR

#DCvRR

ஒரு பௌலரின் அதிகபட்ச திறமை என்பது போல்டும், எல்பிடபிள்யூவும்தான். இந்தப் போட்டியில் அதி வேக பந்துகளில் போல்டு செய்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றிய நார்க்கியா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

IPL 2020: டெத் பௌலிங்கில் மிரட்டிய டெல்லி... நார்க்கியா வேகத்தில் பம்மிப் பதுங்கிய ராஜஸ்தான்! #DCvRR

ஒரு பௌலரின் அதிகபட்ச திறமை என்பது போல்டும், எல்பிடபிள்யூவும்தான். இந்தப் போட்டியில் அதி வேக பந்துகளில் போல்டு செய்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றிய நார்க்கியா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Published:Updated:
#DCvRR
டெல்லிக்கு இந்தமுறை எல்லாமே ஃபர்ஸ்ட் பேட்டிங் ராசிதான். மும்பைக்கு எதிரான தோல்வியைத் தவிர, மற்ற அனைத்து போட்டிகளிலும் முதல் பேட்டிங் என்றால் டெல்லி வெற்றி பெற்றிருக்கிறது. ஐதராபாத்துக்கு எதிராக மட்டுமே சேஸ் செய்த டெல்லி, அதில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆக, டாஸ் வென்றால், டெல்லி பேட்டிங்தான் செய்யும் என்பது உள்ளங்கை குட்டி மாங்காய்.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு இப்படியாக சொல்லிக்கொள்ளும்படி ஸ்டாட்டிஸ்டிக்ஸ் எதுவுமில்லை. ஷார்ஜாவில், 400+ ரன்கள் அடித்து சென்னை, பஞ்சாபை ஓட விட்டு, ̀இது எங்க கோட்டைடா' என மார்தட்டிக் கொண்டிருந்த ராயல்ஸை, அதே சார்ஜாவில் கடந்த வாரம் புரட்டியெடுத்தது டெல்லி. தற்போது அதே டெல்லிக்கு எதிராக துபாயில் இரண்டாவது போட்டி.

#DCvRR
#DCvRR

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஐபிஎல்-லில் துபாய் மைதானத்தில் நடந்த 13 போட்டிகளில் இரண்டில் மட்டுமே, இரண்டாவதாக பேட் செய்த அணி வென்றிருக்கிறது. மற்ற அனைத்து போட்டிகளுமே முதல் பேட்டிங்தான் வென்றிருக்கிறது. ஆடுகளங்கள் மாறிக்கொண்டே வருவதால், இரண்டாவது இன்னிங்ஸ் என்பது துபாய் மைதானத்தில் தண்ணியில்லா காடு நிலைதான். பேட்ஸ்மேன்கள் அடிக்கவே சிரமப்படுவது தான் கள நிலவரம். ̀ஸ்பின்னர்கள் பலம் பெறுவார்கள். டாஸ் ஜெயித்தால் பேட்டிங் எடுங்கள்' என்றார் கெவின் பீட்டர்சன். அதான பண்ண போறேன், என்பது போல் டாஸ் வென்றதும் பேட்டிங் என்றார் ஸ்ரேயாஸ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் பந்திலேயே டெல்லிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்தை, வழக்கம் போல் ஃபுட்வொர்க் இல்லாமல் அடிக்க முயல, இன்ஸைடு எட்ஜாகி, போல்டானார் பிருத்வி ஷா. ஒன் டவுனில் வந்த அனுபவ வீரர் ரஹானே, ஆர்ச்சரின் அடுத்த ஓவரிலேயே உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பவர்பிளே இறுதியில் 47 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்திருந்தது டெல்லி.

தவான், வாட்சனுக்கு எல்லாம் ஒரு மேஜிக் உண்டு. யுவனின் கம்பேக் போல் அது அவர்களுக்கு கைகொடுக்கும். என்னப்பா இவங்கள எதுக்கு டீம்ல வச்சு இருக்கணும் என யோசித்துக்கொண்டிருக்கும் போது, அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மும்பைக்கு எதிராக கடந்த போட்டியில் 69 ரன்கள் விளாசியவர், இந்தப் போட்டியிலும் அடித்து ஆடினார். ஐந்தாவது ஓவரில், ஃபிரண்ட் ஃபூட் நோபால் போட்ட ஸ்டோக்ஸ், பத்தாவது ஓவரில் over height நோ பால் வாங்கினார். முதல் ஃப்ரீ ஹிட்டை வீணாக்கிய ஸ்ரேயாஸ், இதை பவுண்டரிக்கு அனுப்பினார். திவேதியா பந்தில் சிங்கிள் அடித்து, இந்த சீசனின் இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்தார் தவான். அப்புறம் நாம வந்த வேலை முடிந்துவிட்டது என்பது போல், கோபால் பந்துவீச்சில் அவுட்டாகி கிளம்பிவிட்டார்.

#DCvRR
#DCvRR

ஒரு நொடியில் டி20யில் எதுவும் மாறலாம் என்பதற்கு இன்று ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச்சே சாட்சி. உனத்கட் வீசிய பந்தை டீப் விக்கெட் திசையில் அடித்தார் ஸ்ரேயாஸ். எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது என்பது போல், குதித்து அந்தப் பந்தைப் படித்தார் ஸ்டோக்ஸ். லேண்ட் ஆகும்போது, பந்தைத் தூக்கி எறிய வேண்டும். ஆனால், அப்போது ஒரு கால் லைன் பவுண்டரியில் வைத்துவிட சிக்ஸ் என அறிவிக்கப்பட்டது. அந்த சிக்ஸின் மூலம் இந்த சீசனின் இரண்டாவது அரை சதத்தை கடந்தார் ஸ்ரேயாஸ்.

கார்த்தி தியாகி வீசிய பதினாறாவது ஓவரில் மூன்றாவது பந்திலேயே ஸ்ரேயாஸ் அவுட். ஆனால், ராஜஸ்தான் வீரர்கள் யாரும் அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அப்பட்டமான எல்பிடபிளூயூவில் சிங்கிள் ஓடினார் ஸ்ரேயாஸ். பேட் என நினைத்து அடுத்த பந்து போடப்பட்டது. அதே ஓவரின் கடைசி பந்தில் பிராயச்சித்தமாக ஆர்ச்சரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஸ்ரேயாஸ். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி.

#DCvRR
#DCvRR

பட்லரும், ஸ்டோக்ஸும் ஓப்பனிங் இறங்கினார்கள். அந்தப் பக்கம் ஆர்ச்சர் என்றால், இந்தப் பக்கம் ரபாடாவும் நார்க்கியாவும். ரபாடாவின் முதல் ஓவரில் பத்து ரன்கள் போனது. மூன்றாவது ஓவரை வீச வந்தார் நார்க்கியா. 148 கிமீ வேகத்தில் வந்த பந்தை லாங் ஆனுக்கு சிக்ஸுக்கு அனுப்பினார் பட்லர். அடுத்த இரண்டு பந்துகள் 152 கிமீ. நான்காவது பந்து 146 கிமீ, அடுத்த பவுண்டரியை விளாசினார் பட்லர். ஐந்தாவது பந்தை ஸ்கூப் ஷாட் அடித்து பவுண்டரிக்குத் திருப்பினார். ஆனால், எல்லோரும் அப்படியே ஜெர்க் ஆகி பார்த்தது பந்தின் வேகம்தான்... 156.2 கிமீ . ஐபிஎல் வரலாற்றிலேயே அதி வேகமான பந்து இதுதான். அடுத்த பந்து 155.1 கிமீ. ஸ்டம்புகள் பறக்க பட்லர் அவுட். ஐபிஎல் வரலாற்றில், டாப் டென் அதி வேக பந்துகளில், ஐந்து நார்க்கியா வசம்தான். மனுஷனாயா நீயெல்லாம்!

அஷ்வின் வீசிய பந்தை, அஷ்வினிடமே திருப்பிகொடுத்து அவுட்டானார் கேப்டன் ஸ்மித். பவர்பிளே இறுதியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். ஃபீல்டிங் செய்ய முயன்ற போது, கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு வெளியேறினார் கேப்டன் ஸ்ரேயாஸ். இப்படித்தான் முதல் போட்டியில், அஷ்வினும் வெளியேறி அடுத்த சில போட்டிகளில் ஆடாமல் போனது. ஸ்ரேயாஸுக்கு ஒன்றும் இருக்காது என நம்புவோமாக!

#DCvRR
#DCvRR

ஒரு மேட்ச் அடித்தால், ஒன்பது மேட்ச் அடிக்க மாட்டேன் ரக வீரர்களில் லேட்டஸ்ட் எண்ட்ரி ̀அடுத்த தோனி' என சொல்லப்படும் சஞ்சு சாம்சன். சென்னைக்கு எதிராக 74, பஞ்சாபுக்கு எதிராக 85 அடித்த பின் எல்லாமே சிங்கிள் டிஜிட்தான். இந்தப் போட்டியில் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். துஷார் பாண்டேவின் பந்துவீச்சில் லாங் ஆனில் விக்கெட்டை இழந்தார் ஸ்டோக்ஸ். இந்த சீசனில் பெரிதாக ஸ்கோர் செய்யாத அனுபவமிக்க உத்தப்பா, இந்தப் போட்டியிலும் சொதப்பினார். தன் விக்கெட் பத்தாது என, ரியன் கார்கையும் 'அட ஓடுப்பா' என ஆசைக் காட்டி ஒரு ரன்னுக்கு அவுட்டாக்கி விட்டார். ராஜஸ்தானின் ஆபத்பாந்தவன் திவேதியா உள்ளே வந்தார்.

மீண்டும் ஒரு 150 வேக யார்க்கர், உத்தப்பா போல்டு. வேற யாரு நார்க்கியாதான். அடுத்து ரபாடாவின் வேகத்தில் வேகப்புயல் ஆர்ச்சரும் அவுட். கடைசி ஓவரில் 22 ரன்கள் எடுக்க வேண்டும். டெபுட் வீரரான துஷார் பந்துவீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் வெறும் எட்டு ரன்கள்தான் ராஜஸ்தானால் எடுக்க முடிந்தது. 13 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது டெல்லி.

#DCvRR
#DCvRR
ஒரு பௌலரின் அதிகபட்ச திறமை என்பது போல்டும், எல்பிடபிள்யூவும்தான். இந்தப் போட்டியில் அதி வேக பந்துகளில் போல்டு செய்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றிய நார்க்கியா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.