Published:Updated:

அனுபவமே பாடம்... ஆனால், கேட்ச் விடுவோம், கேதரைக் கொண்டுவருவோம், தோத்து தோத்து விளையாடுவோம்! #DCvCSK

#DCvCSK

இம்ரான் தாஹிர் என்ன பாவம் செய்தார் என்றே தெரியவில்லை. கடந்த ஆண்டு 26 விக்கெட்டுகள் எடுத்து, ஐபிஎல்-ன் நம்பர் ஒன் பெளலராக இருந்தவருக்கு இந்த ஆண்டு தோனி செய்திருப்பதெல்லாம் உச்சபட்ச அநியாயம்.

அனுபவமே பாடம்... ஆனால், கேட்ச் விடுவோம், கேதரைக் கொண்டுவருவோம், தோத்து தோத்து விளையாடுவோம்! #DCvCSK

இம்ரான் தாஹிர் என்ன பாவம் செய்தார் என்றே தெரியவில்லை. கடந்த ஆண்டு 26 விக்கெட்டுகள் எடுத்து, ஐபிஎல்-ன் நம்பர் ஒன் பெளலராக இருந்தவருக்கு இந்த ஆண்டு தோனி செய்திருப்பதெல்லாம் உச்சபட்ச அநியாயம்.

Published:Updated:
#DCvCSK
இத்தனை ஆண்டுகளாக சென்னையின் தொடர் வெற்றிகளுக்கு தோனிதான் காரணம் என்பதுபோல, இந்தாண்டு சென்னையின் தொடர் தோல்விகளுக்கு தோனிதான் ஒரே காரணம். ஒன்றல்ல, இரண்டல்ல அவர் தெரிந்தே செய்த தொடர் தவறுகள் சென்னையை முதல்முறையாக ப்ளே ஆஃபுக்குள்கூட நுழையமுடியாதபடியான சூழலுக்குக் கிட்டத்தட்ட கொண்டுசென்றுவிட்டது.

வாட்சன் ஃபார்மில் இல்லை... அது ஒன்றும் பிரச்னையில்லை, அவரையே ஓப்பனிங் அல்லது ஒன் டவுனில் ஆடவிடுவோம். பிராவோ ஃபிட்டாக இல்லை, பரவாயில்லை அவர்தான் டெத் பெளலர் என ஃபிக்ஸ் ஆகிவிட்டோம். கேதர் ஜாதவ் ஏன் டீமில் இருக்கார்...? அவர் இருப்பார்... அதெல்லாம் ஒரு வியூகம், சொன்னா புரியாது. இதுதான் தோனியின் 2020 ஐபிஎல் சீசனின் ATTITUDE.

#DCvCSK
#DCvCSK

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த சீசனில் தோனி செய்த மாற்றங்கள் எல்லாம் என்ன தெரியுமா?! பியூஷ் சாவ்லாவுக்கு பதில் கார்ன் ஷர்மா, ராயுடுவுக்கு பதில் ருத்துராஜ், கேதருக்கு பதில் ஒரேயொரு போட்டியில் விமர்சனங்கள் காரணமாக ஜெகதீசனுக்கு வாய்ப்பு. கடந்த மூன்று சீசன்களாக ஃபார்மிலேயே இல்லாத முரளி விஜய்க்கு மூன்று வாய்ப்புகள். கொஞ்சமும் நெருக்கடி இல்லாத நேரத்தில் முதல் போட்டியின் முதல் பந்தையே எந்த நிதானமும் இல்லாமல் க்ரீஸைவிட்டு இறங்கிவந்து ஆடி அவுட் ஆன, ருத்துராஜுக்கு இரண்டு வாய்ப்புகள். ஆனால், முதல் போட்டியில் 30 ரன்களுக்கு மேல் அடித்த ஜெகதீசனுக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே. Just Dhoni Things... யாருக்கும் புரியாது... புரியவும் கூடாது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இம்ரான் தாஹிர் என்ன பாவம் செய்தார் என்றே தெரியவில்லை. கடந்த ஆண்டு 26 விக்கெட்டுகள் எடுத்து, ஐபிஎல்-ன் நம்பர் ஒன் பெளலராக இருந்தவருக்கு இந்த ஆண்டு தோனி செய்திருப்பதெல்லாம் உச்சபட்ச அநியாயம். பிராவோ ஃபிட்டாக இல்லாதபோதும், இம்ரான் தாஹிரை பென்ச்சில் உட்காரவைத்தது அடாவடியின் உச்சம். கரீபியன் லீகில் ஃபிட்டாக இல்லாத பிராவோவை பென்ச்சில் உட்காரவைத்தார்கள். ஆனால், சிஎஸ்கே-வில் அவருக்கு ராஜமரியாதை. கேதர் ஜாதவ், பென்ச்சுக்குப்போன இரண்டு போட்டி இடைவெளியில் என்ன நிரூபித்துவிட்டார் எனத் தெரியவில்லை. ஷார்ஜாவில் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனாக, கேதர் ஜாதவைக் கொண்டுவந்து சேர்த்துக்கொண்டார் தோனி. சரிவு டாஸ் போடும்போதே தொடங்கிவிட்டது.

சென்னையைத் தவிர எல்லா அணிகளும் பல்வேறு பரிட்சார்த்த முயற்சிகளை செய்துவிட்டன. தொடர்ந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து, அவர்கள் பர்ஃபார்ம் செய்ய களம் அமைத்துக்கொடுத்தன. ஆனால், சென்னையில் பரிட்சார்த்த முயற்சிகளுக்கு எல்லாம் இடம் இல்லை என்கிற தோனியின் பிடிவாதம் சென்னையை கடைசி இடத்துக்குத் தள்ளிக்கொண்டேபோகிறது. பஞ்சாப் கூட இன்னும் சில போட்டிகளில் சென்னையை முந்திவிடும் போல!

#DCvCSK
#DCvCSK

சாம் கரண் பின்ச் ஹிட்டர்தான். பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட்கள் விழுந்தால் ஒன்டவுன் அல்லது 2 டவுனில் இறக்கிவிடலாமே தவிர நிரந்தர ஓப்பனிங் ஆப்ஷனாக அவரை யோசிக்கவே முடியாது. மிகவும் அனுபவம் வாய்ந்த கேப்டன் தோனி, எப்படித்தொடர்ந்து கரணை ஓப்பனிங் இறக்கினார் எனத் தெரியவில்லை. அதுவும் ரபாடா, நார்க்கியா, அஷ்வின் என மிகச்சிறந்த பெளலர்கள் இருக்கும் அணிக்கு எதிராக சாம் கரணை ஓப்பனிங் இறக்கும் தைரியம் எப்படி வந்தது?! முதல் ஓவரிலேயே கரண் டக் அவுட் ஆக, முதல் ஓவரிலேயே டுப்ளெஸ்ஸிக்கு ப்ரஷர் கூடியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாட்சன் சமீபத்திய போட்டிகளில் 30 ரன்களைத் தாண்டுகிறாரே தவிர அவரால் அவருடைய பழைய ஆட்டத்தை ஆடவேமுடியவில்லை என்பதற்கு டெல்லிக்கு எதிரான இந்த இன்னிங்ஸ் இன்னொரு உதாரணம். வாட்சனுக்கும் சேர்த்து டுப்ளெஸ்ஸி ஆடிக்கொண்டிருந்தார். வாட்சனுக்கும், டுப்ளெஸ்ஸிக்கும் இருக்கும் பிரச்னையே ஒரு விக்கெட் போனால், ராயுடு, அவரைவிட்டால் அடுத்து ஃபார்மில் இருக்கும் எந்த பேட்ஸ்மேனுமே இல்லை என்கிற பயம். அதனால் 14-15 ஓவர் வரைக்கும் விக்கெட் இழக்காமல் விளையாடவேண்டும் என்கிற கூடுதல் சுமை. பவர்ப்ளே ஓவர்களில் 40 ரன்களைக் கூடத்தாண்டாத சிஎஸ்கே, ஒன்பதாவது ஒவரில்தான் 50 ரன்களைத்தொட்டது.

#DCvCSK
#DCvCSK

நார்க்கியாவின் ஓவரில் வாட்சன் 28 பந்துகளில் 36 ரன்களில் அவுட் ஆக, ராயுடு வந்தார். 14 ஓவர்களின் முடிவில் 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சென்னை. 2 விக்கெட்கள்தான் போயிருக்கிறது. அதனால் கவலைப்படவேண்டாம் என்று சென்னை ரசிகர்கள் சாய்ந்து உட்காரமுடியாது. ஏனென்றால் சென்னையின் மிடில் ஆர்டர் அப்படி. டெத் ஓவர் தொடங்கியதுமே ரபாடாவின் பந்துவீச்சில் 47 பந்துகளில் 58 ரன்கள் அடித்திருந்த டுப்ளெஸ்ஸி அவுட் ஆனார். தோனி வந்தார், 3 ரன்களில் பெவிலியன் சென்றார். ராயுடுவும், ஜடேஜாவும் கடைசி 3 ஓவர்களில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்ததால் 179 ரன்கள் அடித்து, 180 ரன் டார்கெட்டை செட் செய்தது சென்னை. என்னதான் ஷார்ஜா பிட்ச்சின் வேகம் குறைந்துவிட்டாலும், இங்கே குறைந்தது 200 ரன்கள் என்பதுதான் வெற்றிக்கு உத்திரவாதமான ஸ்கோர். ஆனால், சென்னை 20 ரன்கள் குறைவாக, அதுவும் பேட்டிங்கில் ஸ்ட்ராங்கான டெல்லிக்கு எதிராக 179 ரன்கள் மட்டுமே அடித்தபோது அங்கேயே வெற்றிக்கான ஒளி குறைந்துவிட்டது.

சாம் கரணைப்போலவே, டெல்லியின் பேபி ஃபேஸ் பிரித்வி ஷாவும் டக் அவுட் ஆனார். முதல் சுற்றுப்போட்டியில் பிரித்விதான் சென்னைக்கு எதிரியாக இருந்தார். அவர் டக் அவுட் ஆகி, முதல் ஓவர் விக்கெட் மெய்டனாகி அற்புதமாகத்தொடங்கியது சென்னையின் பெளலிங். சஹாரின் இரண்டாவது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட். ரஹானே அவுட். மேட்ச் அப்படியே சென்னையின் கைகளுக்குள் வந்துகொண்டிருந்தது. பவர்ப்ளேவின் முடிவில் சென்னையைப்போலவே 40-களில்தான் இருந்தது டெல்லி. பவர்ப்ளே முடிந்ததும் ஜடேஜாவைக் கொண்டுவந்தார் தோனி. 25 ரன்களில் இருந்த தவான் முதல் கேட்ச் வாய்ப்பைக் கொடுத்தார். சஹார் கோட்டைவிட்டார். அடுத்தப் பந்தில் மீண்டும் தவான் இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்தார். வாட்சன் கேட்சை விட்டார். 'இவங்களையெல்லாம் பார்த்தா கேட்ச் பிடிக்கிற மாதிரி தெரியல' என தவான் தெம்பாகித் தொடையைத் தட்ட ஆரம்பித்தார். மீண்டும் பிராவோவின் பெளலிங்கில் தவான் இன்னொரு கேட்ச் வாய்ப்பைக் கொடுத்தார். இந்த முறை தவறவிட்டவர் தோனி. 50 ரன்களுக்குள் மூன்று முறை தவானின் கேட்ச்களைக் கோட்டைவிட்டு, மேட்சையும் விட்டது சென்னை. 25, 27, 50, 79 என நான்குமுறை தவானின் கேட்ச்களைவிட்டு அவரை முதல்முறையாக ஐபிஎல்-ல் சென்சுரி அடிக்கவைத்தது சென்னை.

#DCvCSK
#DCvCSK

19வது ஓவரில் சாம் கரண் வீசிய ஓவர் மட்டுமே சென்னைக்கு கிடைத்த ஒரே ஆறுதல். 12 பந்துகளில் 21 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற நிலையில் பந்துவீசவந்த சென்னையின் கடைக்குட்டி சிங்கம் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார். முதல் பந்தில் கேரியின் விக்கெட்டைத் தூக்கியவர், 2 டாட் பால்கள் போட்டு வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் டெல்லிக்குப் பிரஷர்கூடியது. 6 பந்துகளில் 17 ரன்கள் எடுக்கவேண்டும்.

ஆனால், 14-வது ஓவரோடு மூன்று ஓவர்கள் வீசி, 23 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்திவிட்டு பெவிலியன் போன பிராவோ, அதன்பிறகு களத்துக்குள் வரவேயில்லை. இதனால் தோனிக்கு இரண்டே ஆப்ஷன்கள்தான் இருந்தன. 3 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்திருந்த கார்ன் ஷர்மா அல்லது ஒரு ஓவர் மட்டுமே வீசி, 13 ரன்கள் கொடுத்திருந்த ஜடேஜா. களத்தில் நின்றுகொண்டிருந்த தவான், அக்ஸர் பட்டேல் இருவருமே இடது கை பேட்ஸ்மேன்கள். கார்ன் ஷர்மா வலது கை லெக் ஸ்பின்னர், ஜடேஜா இடது கை ஸ்பின்னர். ஆனால், அனுபவம் கைகொடுக்கும் என நினைத்து, இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இடது கை பெளலரான ஜடேஜாவிடமே கடைசி ஓவரைக் கொடுத்தார் தோனி. அக்ஸர் பட்டேல் மூன்று சிக்ஸர்கள் அடித்து டெல்லியின் சேஸிங்கை முடித்துவைத்தார்.

#DCvCSK
#DCvCSK

சென்னைக்கு எதிரானப் போட்டியை டெல்லி அதன் பலத்தால் வெல்லவில்லை. சென்னையின் தவறுகளால் வென்றிருக்கிறது. சென்னைக்கு இன்னும் 5 போட்டிகள்தான் இருக்கின்றன. 5 போட்டிகளிலும் பெரிய அளவில் வெற்றிபெற்று அதிசயங்கள் நிகழ்த்தக்கூடிய அணியாக சென்னையில்லை என்பதை முழுமனதோடு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஈ சாலா கப் பெங்களூருவுக்கோ, டெல்லிக்கோ, மும்பைக்கோ என மனதைத்தேற்றிக்கொண்டு, இனி இந்த ஐபிஎல்லை சென்னை ரசிகர்கள் பிரஷர் இல்லாமல் பார்க்க ஆரம்பிக்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism