Published:Updated:

பிளேயிங் லெவனை மாற்றினால் மட்டும் வெற்றி பெற முடியாது ராகுல்... அதுக்கு சண்டை செய்யணும்! #SRHvKXIP

#SRHvKXIP
News
#SRHvKXIP

ஏற்கெனவே மூன்று முறை கடைசி இடம் வாங்கியிருக்கும் பஞ்சாபுக்கு இது புதிதில்ல என்றாலும், குறைந்தபட்ச நன்மைக்காக இனி கவனித்து விளையாடுவது அவசியம்.

இந்தப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் இரண்டு விஷயங்கள் மனதில் இருந்தன. கே எல் ராகுலின் தலைமையில், மும்பைக்கு எதிரான போட்டியில், கடைசி 23 பந்துகளில் விக்கெட் விழவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த போட்டியில் விக்கெட் இழப்பின்றி வென்றனர் (106 பந்துகள்). 20 ஓவர்களாக விக்கெட் வீழ்த்தாத ஓர் அணி, இந்தப் போட்டியில் என்னவெல்லாம் பொறுப்புணர்ந்து விளையாட வேண்டும். இது முதல் பிரச்னை.

இரண்டாவது பிளேயிங் லெவனில், தொடர்ந்து சகட்டு மேனிக்கு கொத்து பரோட்டா போடுவது. அணி பயிற்சியாளர் கும்ப்ளே, இன்றைய போட்டியில் கெயிலை இறக்கலாம் என முடிவு செய்திருந்தோம். ஆனால், அவருக்கு கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது என்றார். அப்படியெனில் பேட்டிங்கில் சொதப்பி, பவுலிங்கில் ஸ்கோர் செய்யும் மேக்ஸியையோ அல்லது, அதிரடியாக ஓரளவு ரன்கள் சேர்க்கும் பூரனையும் வெளியே அனுப்ப வேண்டும். கெயிலையாவது எண்டெர்டெய்னர் கணக்கில் பரீசிலனை செய்யலாம். ஆனால், பஞ்சாபின் மற்ற மாற்றங்கள் எல்லாம், கொடுமையிலும் கொடுமை ரகம். ஒரு கிங்ஸ், அணியை மாற்றாமல், கேதர் ஜாதவை வைத்து வெறுப்பேற்றுகிறது என்றால், இன்னொரு கிங்ஸ் ஒவ்வொரு போட்டியிலும் சகட்டு மேனிக்கு அணியை மாற்றி வீரர்களின் குறைந்தபட்ச நம்பிக்கையைச் சீர்குலைக்கிறது.

#SRHvKXIP
#SRHvKXIP

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டாம் மூடி, பெவன், லீமென், சஞ்சய் பங்கர் என பலர் பஞ்சாப் அணிக்கு தலைமை பயிற்சியாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், கும்ப்ளே இந்த சீசனில் செய்வது உச்சகட்ட அநியாயம். அவரும் ராகுலும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் எனில் இது இன்னும் அபத்தம். டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வி. பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ஜோர்டானையும், கௌதமையும் தூக்கிவிட்டு, ஜிம்மி நீஷமையும் அஷ்வினையும் உள்ளே கொண்டு வந்தார்கள். அந்தப் போட்டியில் இமாலய வெற்றி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அடுத்து ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அஷ்வின் வீசியதே 9 பந்துகள்தான். பெங்களூருவுக்கு எதிராக 3 ஓவரில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட் வீழ்த்திய அஷ்வினை ஓரங்கட்டினார்கள். மும்பைக்கு எதிரான போட்டியில் அஷ்வினை தூக்கிவிட்டு மீண்டும் கௌதமை இறக்கினார்கள். 4 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் கௌதம்.

சென்னைக்கு எதிரான முந்தைய போட்டியில் கருண் நாயர், ஜிம்மி நீசம், கௌதம் மூன்று பேரையும் வெளியே எடுத்துவிட்டு மந்தீப் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஜோர்டானுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். ராஜஸ்தானுக்கு எதிராக கேவலமான தோல்வி என்றால், சென்னைக்கு எதிராக படு கேவலமாக தோற்றார்கள். ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை.

இன்றைய ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் மூன்று மாற்றங்கள். ஹர்ப்ரீத் பிரார், ஜோர்டான், சர்பராஸ் கானைத் தூக்கிவிட்டு பிரப்சிம்ரன், அர்ஷீத் சிங், முஜீப் உர் ரஹ்மானை எடுத்திருந்தார் ராகுல். இந்த ஐபிஎல் சீசனில் மோசமான கேப்டன்ஸி என்றால், கண்ணை மூடிக்கொண்டு ராகுலைக் கை காட்டலாம். ஜோர்டனை உள்ளே வெளியே போடுவதில் ஆரம்பித்த ராகுலின் பரிசோதனைகள், பஞ்சாபுக்கு பெரும் சோதனையாக அமைந்து வருகிறது. ஏற்கெனவே மூன்று முறை கடைசி இடம் வாங்கியிருக்கும் பஞ்சாபுக்கு இது புதிதில்ல என்றாலும், குறைந்தபட்ச நன்மைக்காக இனி கவனித்து விளையாடுவது அவசியம். சரி, இன்றைய போட்டிக்கு வருவோம்.

#SRHvKXIP
#SRHvKXIP

டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. வார்னரும், பேர்ஸ்டோவும் ஐதராபாத்துக்கு ஓப்பனிங் இறங்கினார்கள். பஞ்சாபுக்கு எதிரான கடைசி 8 போட்டிகளிலும் அரைசதம் அடித்திருக்கும் கெத்துடன் உள்ளே வந்தார் வார்னர். கார்டல் வீசிய முதல் ஓவரில், வார்னர் இரண்டு பவுண்டரிகள். கார்டல் வீசிய ஆட்டத்தின் நான்கு ஓவரில் பேர்ஸ்டோ மூன்று பவுண்டரிகள் அடித்தார். விக்கெட் எடுத்து ராம்ராஜுக்கு சல்யூட் அடிப்பார் என நினைத்த கார்டெல்லின் பந்துவீச்சை சிதறடித்தனர் வார்னரும் பேர்ஸ்டோவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஷமி ஐந்தாவது வீசிய இரண்டு ஷார்ட் பால்களையும் பவுண்டரிக்கு விளாசினார் வார்னர். அடுத்த இரண்டு பந்துகளையும் மிடில் ஸ்டம்பி நோக்கி வீசினார். வார்னரால் அதில் ரன் எதுவும் அடிக்க முடியவில்லை. இந்த ஐபிஎல் தொடர்களில் ஸ்டம்புக்கு பால் போடுவது என்பதே அரிதாகி விட்டது. இந்த ஆட்டத்தில் 11வது ஓவர் வரை, பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளில் நாலு சதவிகிதம் மட்டுமே ஸ்டம்ப் லைனில் வீசப்பட்டவை. பவர் பிளே இறுதியில் வார்னர், பேர்ஸ்டோ இருவரும் தலா 26 ரன்கள் எடுத்திருந்தனர். பார்டன்ர்ஷிப் பிரேக்கர் மேக்ஸியை உள்ளே கொண்டு வந்தார் ராகுல். வெறும் ஆறு ரன்கள்.

#SRHvKXIP
#SRHvKXIP

ரவி பிஷ்னாய் வீசிய அடுத்த ஓவரில் லாங் ஆனில் ஒரு சிக்ஸ், ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸ் என பதினெட்டு ரன்கள் சேர்க்கப்பட்டது. கூக்ளியைக்கூட அழகாக பவுண்டரிக்கு திருப்பினார் பேர்ஸ்டோ. பத்து ஓவர் முடிவில் 100 ரன்களை தொட்டது ஐதராபாத். மறுபடியும் மேக்ஸியை அழைத்தார் ராகுல். 'வா மச்சி' என 90 மீட்டரில் இமாலய சிக்ஸ் அடித்தார் பேர்ஸ்டோ. அடுத்த பந்திலும் சிக்ஸ். இந்த ஓவரில் 20 ரன்கள். பஞ்சாபில் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்றால், அது முஜிபுர் ரஹ்மான்தான். அவர் ஓவரிலும், பேர்ஸ்டோ கருணை காட்டவில்லை. அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்து, 150 ரன்களைக் கடந்தார்கள்.

ரவி பிஷ்னாய் பந்துவீச்சில் சுலபமாக மேக்ஸிக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார் வார்னர். ஆனால், பஞ்சாபுக்கு 150 ரன்களை தாண்டுவதே பெரிய விஷயம். கிட்டத்தட்ட 220 பந்துகளுக்குப் பிறகு ஒரு விக்கெட் எடுத்திருக்கிறது ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி. இதெல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா என மைண்டு வாய்ஸ் ஓடாமல் இல்லை. அதே ஓவரில் பேர்ஸ்டோவும் அவுட். சதம் அடித்திருந்தால், செமயா இருந்திருக்கும். அது மட்டுமே பேர்ஸ்டோ ஆட்டத்தில் வருத்தம். 97 ரன்களுக்கு எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். நியாயமாக, ஐதராபாத் டிக்ளேரே செய்திருக்கலாம். அடுத்து அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார் மனிஷ் பாண்டே. அட்டகாசமாக கேட்ச் பிடித்தார் அர்ஷ்தீப்.

#SRHvKXIP
#SRHvKXIP

37 ஓவர்களாக விக்கெட்டே எடுக்காத அணி 7 பந்துகளில் 3 விக்கெட் எடுத்திருந்தது. அர்ஷ்தீப்பின் அடுத்த ஓவரில் பிரியம் கார்க் கோல்டன் டக். ரவி பிஷ்னாய் பந்தில் அப்துல் சமாத் அவுட் என 'என்னடா இது' போல் ஆட்டம் மாறியது. இறுதியாக வில்லியம்ஸனின் அதிரடியில் 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் அடித்தது ஐதராபாத். எப்போதும் டெத் ஓவர்களில் கேவலமாக பவுலிங் போடும் பஞ்சாப், இந்த முறை அப்படியே உல்ட்டாக ஆரம்ப ஓவர்களில் வாரி வழங்கியது

16 ஓவர்களில் 201 ரன்களில் சேஸ் செய்ய வேண்டும். ஆம், எப்படியும் ரஷீதின் நான்கு ஓவர்களில் யாரும் எதுவும் அடிக்க போவதில்லை. ஆரஞ்சு கேப்பை மாற்றி மாற்றி போடும் மயாங்க் அகர்வாலும், ராகுலும் ஓப்பனிங் இறங்கினார்கள். ஓவருக்கு பத்து ரன்கள் அடிக்க வேண்டும் என்றது டார்கெட். அந்த பிரஷர் இரண்டாம் ஓவரே தெரிந்தது. ராகுல் இரண்டாம் ரன்னுக்கு ஓட ஆரம்பித்துவிட்டு, பின் வேண்டாம் என மறுத்துவிட்டார். ஆனால், அதற்குள் ராகுலிடம் பேசும் தூரத்துக்கு வந்துவிட்டார் அகர்வால். வார்னர் ஃபீல்டிங் செய்யும் இடத்தில் இரண்டு ரன்னுக்கு ஆசைப்படுவதெல்லாம், யாரோ தேனுக்கு ஆசைப்படும் பழமொழிதான் நினைவுக்கு வந்தது. அகர்வால் 9 ரன்களில் அவுட்.

#SRHvKXIP
#SRHvKXIP

சரி, ஒன் டவுனில் மந்தீப் அல்லது பூரன் வித்தைகள் காட்டுவார் என எதிர்பார்த்தால், 'என்ன சிம்ரன் இதெல்லாம்' என்பது போல், சிம்ரன் சிங்கை இறக்கி அதிர்ச்சி காட்டினர் ராகுல், கும்ப்ளே ஜோடி. இதுக்கு பேர்தான் அதிர்ச்சியா பாஸ் என்பது போல் பார்த்திருப்பார் வார்னர். இரண்டு பவுண்டரிகள் அடித்துவிட்டு அஹமது பந்தில் கார்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் சிம்ரன். இரண்டாம் டவுனில் வந்த பூரன், முதல் பந்தையே பவுண்டரிக்கு விளாசினார்.

முதல் போட்டியில் இரண்டு முறை டக் அவுட் ஆனாலும், (சூப்பர் ஓவரில் டக்) பூரனின் பேட்டிங் ஆச்சர்யமாக இருக்கிறது. ஆஜாகுபானுவான உடல் எல்லாம் இல்லை. ஆனால், சிக்ஸ் எல்லாம் அசால்ட்டாக செல்கிறது. நடராஜ் வீசிய பந்தை, எந்த மெனக்கெடலும் இல்லாமல், சிக்ஸுக்கு விளாசினார். அடுத்த அபிஷேக் ஷர்மாவின் ஓவரில் லாங் ஆன் திசையில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ். 'என்ன மேட்ச் நல்லா போகுதே' என நினைத்தாரோ என்னவோ, ராகுல் அதே ஓவரில் வில்லியம்ஸனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மேக்ஸி களமிறங்கினார்.

#SRHvKXIP
#SRHvKXIP

11 கோடிக்கு எடுக்கப்பட்ட மேக்ஸி இந்தப் போட்டியிலாவது ரன் அடிப்பாரா என எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. ரஷீதின் முதக் ஓவரில் எதிர்பார்த்ததைப் போலவே இரண்டு ரன்கள். அப்துல் சமத் வீசிய அடுத்த ஓவரில் 28 ரன்கள் குவித்தார் பூரன். 17 பந்துகளில் இந்த ஐபிஎல் சீசனின் அதி வேக அரை சதத்தையும் பதிவு செய்தார். நான்கு சிக்ஸர்கள் அந்த ஓவரில் விளாசினார் பூரன். ரஷீதின் அடுத்த ஓவரில் 5 ரன்கள். அடுத்த ஓவரில் ரன் அவுட் முறையில் வெளியேறினார் மேக்ஸீ.

அடுத்த வந்த மந்தீப் சிங், ரஷீத் ஓவரில் க்ளீன் போல்ட். இவர் ஏன் இந்த பேட்டிங் ஆர்டரில் வந்தார் என்பதெல்லாம், கேப்டனுக்கும் கோச்சுக்குமே வெளிச்சம். அடுத்த ரஷீதின் ஓவரில் பூரன் அவுட் ஆனபோது ஆட்டம் முடிவு வந்திருந்தது. 37 பந்துகளில் 200 ஸ்டிரைக் ரேட், 7 சிக்ஸ், ஐந்து பவுண்டரி என 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் பூரன். அடுத்த பந்திலேயே கோல்டன் டக் ஷமி. நட்டி வீசிய 17 வது ஓவரில் கார்டலும், அர்ஷீப்பும் கழண்டு கொள்ள, 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பஞ்சாப்.

#SRHvKXIP
#SRHvKXIP
"இந்த ஸ்குவாடில் எல்லோருமே திறமையானவர்கள். சில நேரங்களில் க்ளிக் ஆகாமல் போகலாம். ஆனால், நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்" என இறுதியாக பேசினார் ராகுல். கும்ப்ளேவுக்குத்தான் சொல்கிறாரா ராகுல். என்னவோ, வீரர்களின் மன உளைச்சலைக் குறைக்கவாவது அணியை குண்டக்க மண்டக்க என மாற்றாமல் இருங்கள். ஆட்ட நாயகனாக பேர்ஸ்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.