Published:Updated:

கெய்ல் புயல், மந்தீப் செயல், ஷமி-பிஷ்னாய் ஸ்விங் சுழல்... ப்ளேஆஃபை புக் செய்யும் பஞ்சாப்! #KKRvKXIP

#KKRvKXIP | கிறிஸ் கெய்ல்
News
#KKRvKXIP | கிறிஸ் கெய்ல்

12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது பஞ்சாப்.

2020 ஐபிஎல் சீசனில் தொடர்ந்து ஐந்து தோல்விகளை சந்தித்து பாயின்ட்ஸ் டேபிளின் கடைசியில் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப், இப்போது தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றைக் கிட்டத்தட்ட உறுதிசெய்திருக்கிறது. 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது பஞ்சாப்.

ஷார்ஜாவில் இன்று கொல்கத்தா பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இரண்டு அணிகளிலும் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றங்களும் இல்லை.

#KKRvKXIP
#KKRvKXIP

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதலில் பேட்டிங் ஆடும் அணிகள் பவர்ப்ளே ஓவர்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழக்கும் வழக்கம் தொடர்ந்தது. முதல் ஓவரை மேக்ஸ்வெல்லைக் கொண்டு தொடங்கியது பஞ்சாப். டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் கொல்கத்தாவின் ஹீரோவாக இருந்து 81 ரன்கள் அடித்த நித்திஷ் ரானா, மேக்ஸ்வெல்லின் இரண்டாவது பந்திலேயே கெய்லிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். முகமது ஷமியின் அடுத்த ஓவரில் 7 ரன்களில் திரிபாதி அவுட். அடுத்த இரண்டாவது பந்தில் மோசமான ஃபார்மைத்தொடரும் தினேஷ் கார்த்திக் டக் அவுட் என 10 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துவிட்டது கொல்கத்தா. ஆனால், ஷுப்மான் கில்லோடு இணைந்து கேப்டன் இயான் மோர்கன் கொல்கத்தாவை காப்பாற்றும் முயற்சிகளில் இறங்கினார்.

சிக்ஸர்கள் அடிக்க ஏற்ற ஸ்டேடியமான ஷார்ஜாவில் 2 சிக்ஸர், 5 பவுண்டரி என நல்ல டச்சில் இருந்த மோர்கன், 25 பந்துகளில் 40 ரன்கள் அடித்திருந்த நிலையில் பிஷ்னாயின் பந்தை சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேப்டன் அவுட் ஆனதும் நரைன், நாகர்கோட்டி, கம்மின்ஸ் என அடுத்த மூன்று விக்கெட்கள் சிங்கிள் டிஜிட்டில் சரிந்தன. ஆனால் ஷுப்மான் கில் தாக்குப்பிடித்து ஆடி அரைசதம் கடந்து, 45 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அவுட் ஆனார். கடைசி நேரத்தில் லோக்கி ஃபெர்குசன் சிக்ஸர், பவுண்டரிகள் என 13 பந்துகளில் 24 ரன்கள் அடிக்க, 150 ரன்களை டார்கெட்டாக கொடுத்தது கொல்கத்தா. பஞ்சாபின் ஷமி 3 விக்கெட்கள் எடுக்க, ஜோர்டனும், ரவி பிஷ்னாயும் 2 விக்கெட்டுகளும், முருகனும், மேக்ஸ்வெல்லும் தலா ஒரு விக்கெட்டும் எடுத்து பேட்டிங் பிட்ச்சில் சிறப்பான பெளலிங் பர்ஃபாமென்ஸைக் கொடுத்தார்கள்.

#KKRvKXIP
#KKRvKXIP

நல்ல ஃபார்மில் இருக்கும் கேப்டன் கே.எல் ராகுலோடு மந்திப் சிங் ஓப்பனிங் இறங்கினார். பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் 36 ரன்களை அடித்தது பஞ்சாப். கடந்த போட்டியில் 5 விக்கெட்கள் எடுத்து அசத்திய தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி, தனது முதல் ஓவரில் கே.எல்.ராகுலின் விக்கெட்டை எடுத்தார். 2020 ஐபிஎல் சீசனின் நம்பர் 1 பேட்ஸ்மேனான ராகுல் 25 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்தடுத்து வருண் பல அற்புதங்களை நிகழ்த்துவார் என மோர்கனும், தினேஷ் கார்த்திக்கும் எதிர்பார்த்து காத்திருக்க, எப்போதுமே ஸ்பின்னில் திணறும் கிறிஸ் கெயில் மிஸ்ட்ரி ஸ்பின்னரையும் சமாளித்து ஆடி, அரைசதம் அடித்துவிட்டார். கெய்லின் பேட்டில் இருந்து மட்டும் 5 சிக்ஸர்கள் பறக்க, 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்து வெற்றிக்குப் பக்கத்தில் நெருங்கியதும் அவுட் ஆகி வெளியேறினார் கெய்ல். மந்தீப் சிங் 56 பந்துகளில் 66 ரன்கள் அடித்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்து பஞ்சாபின் வெற்றியை உறுதி செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த வாரம்தான் மந்தீப் சிங்கின் தந்தை உயிரிழந்திருந்தார். பயோபபுளில் இருப்பதால் மந்தீப்பால் இந்தியா சென்று தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்தமுடியவில்லை. மிகவும் உணர்ச்சிகரமாக இருந்த மந்தீப் அரைசதம் அடித்ததும் வானத்தை நோக்கி பேட்டையும், கண்களையும் உயர்த்தி தந்தைக்கு அரைசதத்தை அர்ப்பணித்தார். "என்னுடைய அப்பா நான் சென்சுரி அடித்தாலும், டபுள் சென்சுரி அடித்தாலும் 'ஏன் அவுட் ஆகிட்ட, எப்போதும் நாட் அவுட்டாகத்தான் இருக்கணும்' என்பார். இன்று நான் நாட் அவுட் பேட்ஸ்மேன். அப்பா சந்தோஷப்படுவார்" என்றார் மந்தீப் எமோஷனலாக.

#KKRvKXIP
#KKRvKXIP
கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளுக்கு ப்ளே ஆஃப் போட்டியை இன்னும் கடுமையாக்கியிருக்கிறது பஞ்சாபின் தொடர் வெற்றிகள். நாளை டெல்லியுடனான போட்டி ஹைதராபாத்துக்கு வாழ்வா சாவா போட்டி. தோல்வியடைந்தால் சென்னைக்கு அடுத்து ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து ஹைதராபாத் வெளியேறும். அதனால் துபாயில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்!