Published:Updated:

"தோனி அந்த வார்த்தை சொல்லணும்னு அவசியமே இல்ல" - நெகிழும் CSK வீரர் ஹரி நிஷாந்த்

Hari Nishaanth
Hari Nishaanth

ஹரி நிஷாந்த் - 2021 தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் தொடர் நாயகன். இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு இணையத் தயாராகிவிட்டார். TNPL, IPL அனுபவங்கள், தோனியோடு நடந்த சுவாரஸ்ய சம்பவம் போன்றவற்றை நம்மோடு அவர் பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறு உரையாடல். முழு உரையாடல் வீடியோவில்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

9 போட்டிகளில் 368 ரன்கள் எடுத்து இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் டாப் ஸ்கோரராகியிருக்கிறார் ஹரி நிஷாந்த். இதில் 4 அரைசதங்கள். சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலிலும் (23 சிக்ஸர்கள்) இவர்தான் முதலிடம். வேறு யாரும் 20 சிக்ஸர்கள் கூட அடிக்கவில்லை. தொடர்ந்து இரண்டு TNPL சீசன்களிலும் 40+ சராசரியோடு சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஹரி நிஷாந்த். அதன் பலனாகத்தான் 2021 IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

ஒருமுறை வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்திருக்கிறார் தோனி. அப்போது, நெட்டுக்கு அருகே நின்ற ஹரியை அழைத்து, "ஹரி எனக்கு பேட் எடுத்து வந்து கொடுக்க முடியுமா" என்று கேட்டிருக்கிறார். தோனி கேட்டதும் தலைதெறிக்க ஓடிச் சென்று பேட் எடுத்துவந்திருக்கிறார் ஹரி. "அவர் கேட்டதும் வெறித்தனமா ஓட ஆரம்பிச்சிட்டேன். விட்டிருந்தா பவுண்டரி லைன்லாம் தாண்டியும் ஓடியிருப்பேன்" என்ற ஹரி, பேட்டைக் கொடுத்ததும் தோனி சொன்ன வார்த்தைகளால் நெகிழ்ந்துவிட்டார். தோனி அப்படி என்ன சொன்னார்? அது மேலே உள்ள வீடியோவில்!

இந்த IPL சீசனின் முதல் பாதியில் சூப்பர் கிங்ஸ் அணியோடு இணைந்திருந்த ஹரி நிஷாந்த், மைக் ஹஸ்ஸி ஏற்படுத்திய தாக்கம் பற்றிப் பேசியிருக்கிறார். ஹஸ்ஸி, டுப்ளெஸ்ஸி, தோனி போன்ற ஆளுமைகள் இருப்பது தனக்கு எந்த அளவில் உதவியாக இருக்கிறது என்பதையும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தோனியோடு நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வையும் நம்மோடு பகிர்ந்திருக்கிறார்.

கொரோனா காரணமாக ஒவ்வொரு விளையாட்டுத் தொடரில் பங்கேற்கும் வீரர்களும் பயோ பபுள்களுக்குள்தான் இருக்கிறார்கள். விஜய் ஹசாரே, சையது முஷ்தாக் அலி, IPL, TNPL என தொடர்ந்து பபுள்களுக்குள்ளேதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்போதும்கூட TNPL முடிந்த மூன்றாவது நாள் IPL தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் பபுளில் இணையவேண்டும். இந்த நியூ நார்மலை எப்படி சமாளித்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றியும் பேசியிருக்கிறார் ஹரி நிஷாந்த்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு