Published:Updated:

டேடிஸ் ஆர்மிதான், தோனி ஃபார்மில் இல்லைதான்... ஆனாலும் சென்னை சாம்பியன் ஆகிறதே எப்படி?

தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ்

எப்போதெல்லாம், மரண அடி வாங்கி மண்ணைக் கவ்வி விட்டதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மீது விமர்சனங்கள் பாய்கிறதோ, அப்போதெல்லாம், முன்னிலும், அதீத சக்தி படைத்ததாக, சிஎஸ்கே வீறு கொள்கிறது.

டேடிஸ் ஆர்மிதான், தோனி ஃபார்மில் இல்லைதான்... ஆனாலும் சென்னை சாம்பியன் ஆகிறதே எப்படி?

எப்போதெல்லாம், மரண அடி வாங்கி மண்ணைக் கவ்வி விட்டதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மீது விமர்சனங்கள் பாய்கிறதோ, அப்போதெல்லாம், முன்னிலும், அதீத சக்தி படைத்ததாக, சிஎஸ்கே வீறு கொள்கிறது.

Published:Updated:
தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ்

வலிமையோடு திரும்பிவந்த சென்னை சூப்பர் கிங்ஸ்... இறுதிப் போட்டியின் மேட்ச் வின்னிங் மொமன்ட்ஸ்!

எப்போதெல்லாம், மரண அடி வாங்கி மண்ணைக் கவ்வி விட்டதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மீது விமர்சனங்கள் பாய்கிறதோ, அப்போதெல்லாம், முன்னிலும், அதீத சக்தி படைத்ததாக, சிஎஸ்கே வீறு கொள்கிறது.

"முன்பைவிட வலிமையோடு திரும்பி வருவோம்" என கடந்த சீசனில் தோனி, சொன்னதைச் செய்துகாட்டி, நான்காவது முறையாக சென்னையை கோப்பை ஏந்த வைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

தேசிய அளவில் டிரெண்டிங் ஆகிக் கொண்டிருந்த, த்ரில்லிங்கான Squid Gameஐ எல்லாம், ஓரமாய்ப் போய் விளையாட வைத்து விட்டது, ஐபிஎல் இறுதிப் போட்டி. ஒன்பது முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அணியாக, சிஎஸ்கே வெறித்தனம் காட்ட, நுழைந்த இருமுறையுமே, கோப்பையைத் தட்டித் தூக்கிய அணியென கேகேஆரும், வாளைச் சுழற்றியது. போட்டியின் சுவாரஸ்யம் கூட்டிய, அனல் பறக்கும் தருணங்கள் இங்கே...

எடுபடாத ஸ்பின் சூத்திரம்!

அரபு நாடுகளில் நடந்த அத்தனை போட்டிகளிலுமே, ஸ்பின் + ஸ்லோ பிட்ச்கள் என்ற சூத்திரமே, மார்கனுக்குக் கை கொடுத்திருந்தது அதை நம்பியே இறுதிப் போட்டியிலும், அதே கூட்டணியைக் கொண்டு வந்திருந்தார். ஆனால், சிஎஸ்கே படைபலம் முன்பாக, சுழல் ஜாலம் எடுபடாமல் போனது.

நரைன், வழக்கம் போல் இரண்டு விக்கெட்டுகளோடு, வெறும் 24 ரன்களை மட்டுமே கொடுத்து ஆறுதல் அளித்திருந்தார், மற்ற இரு ஸ்பின்னர்களின் ஓவர்களில், 10 ரன்களுக்கு அருகில் சென்றதுதான் கொல்கத்தா சரிவைச் சந்தித்த இடம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஃபீல்டிங் தவறுகள்!

"பெரிய போட்டிகளில், சின்னத் தவறுகளுக்கான விலை பெரியதாகவே இருக்கும்", என்பது பாலபாடம். அத்தகைய தவறை ஆரம்பத்திலேயே செய்து சறுக்க ஆரம்பித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

பவர்பிளேவுக்கு உள்ளாகவே, மிஸ் ஃபீல்டிங், டைரக்ட் ஹிட் வாய்ப்புகளைத் தவறவிட்டது, ஸ்டம்ப்பிங் மிஸ் ஆனது என எப்படியெல்லாம் ஃபீல்டிங் செய்யக் கூடாது என்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டது கொல்கத்தா தரப்பு. அதற்கான விலைதான், விக்கெட்டுகளற்ற பவர்ப்ளே ஓவர்களுக்கு வழிவகுத்தது.

டுப்ளஸ்ஸிக்கு, தினேஷ் கார்த்திக் தவறவிட்ட ஸ்டம்ப்பிங்கின் போதே, கேகேஆருக்கு கோப்பை கைகூடாது என்ற நிலைமை வந்துவிட்டது.

தோனி - மார்கன்
தோனி - மார்கன்

மத்திய ஓவர்களில் ஆதிக்கம்!

எந்த ஒரு அணியும், பவர்ப்ளே ஓவர்களிலும், இறுதி ஓவர்களிலும் ரன்களை வாரிக் குவிக்கும். பவர் ப்ளேவுக்கும் இறுதி ஓவர்களுக்கும் இடைப்பட்ட மிடில் ஓவர்களில், ரன்கள் பெரும்பாலும் வராது. அதுவும் கேகேஆர் போன்ற ஒரு படைபலம் பொருந்திய ஸ்பின்னர்கள் கூட்டணிக்கு எதிராக, ரன் எடுப்பது என்பது இமாலய இலக்கு. இந்த சீசனின் இரண்டாவது பாதி முழுமையிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பௌலிங்கின் போது, ஏழாவது ஓவரிலிருந்து, பதினைந்தாவது ஓவர் வரை, 6.19 தான் அவர்களது எக்கானமியே. ஆனால் சிஎஸ்கே அந்த மிடில் ஓவர்களையும், குறிவைத்து அடித்தது. அந்த 9 ஓவர்களில், 81 ரன்களைக் குவித்து, கேகேஆரைப் பார்த்து, "கோப்பையும் கிடையாது, ஒன்றும் கிடையாது ஓடுங்கள்!" என்று சொல்லாமல் சொல்வதைப்சிஎஸ்கே பேட்ஸ்மேன்களின் ஆட்டம் இருந்தது.

டுப்ளெஸ்ஸி!

இரண்டாவது பாதி லீக் போட்டிகளில்,

பெரிதாக ஆடாத டுப்ளெஸ்ஸி, பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் 76 ரன்கள் எடுத்து 28 என்ற ஆவரேஜை மட்டுமே வைத்திருந்தார். சிஎஸ்கே போன்ற அணியில், நாக்அவுட் போட்டிகளில் எப்போதும் ஒரு வீரர் சாம்பியன் வீரராக உருவெடுப்பார். அவரே கோப்பை வெல்லவும் காரணமாக இருப்பார். 2018-ல் ஷேன் வாட்சன் சன்ரைசர்ஸைப் பந்தாடிய வேலையை, நேற்று டுப்ளெஸ்ஸி கையிலெடுத்தார். கேகேஆர் பௌலர்களை உண்டு இல்லை எனச் செய்து விட்டார். குறிப்பாக, தான் சந்தித்த ஃபெர்கூசனின் 17 பந்துகளில், கிட்டத்தட்ட 40 ரன்களை விளாசி மொத்தம் 86 ரன்களை குவித்தார் டுப்ளெஸ்ஸி.

தோனி
தோனி

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக, இந்த சீசனில் மட்டும் 224 ரன்களை, டுப்ளெஸ்ஸி எடுத்திருக்கிறார். முதல் ஓவரிலிருந்து, இறுதிப் பந்து வரை, அவர் தாக்குப் பிடித்தது மட்டுமின்றி, தடம் பதித்ததே, சிஎஸ்கேவுக்கு பெரும் பலமாக அமைந்தது. அவருக்கும், ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கும் இடையேயான ஆரஞ்சு கேப் ஓட்டத்தில், இரண்டே ரன்கள் வித்தியாசத்தில், கெய்க்வாட், கேப்பைக் கைப்பற்றியிருந்தாலும், இந்த சீசன் முழுவதுமே, இவர்களது தோள்கள்தான், சிஎஸ்கேயின் பல்லக்கைத் தூக்கிச் சுமந்ததன.

மூன்று 50+ பார்ட்னர்ஷிப்கள்!

தவறவிடப்படாக் கேட்சுகள் பௌலிங்கின் போது, வெற்றியை நோக்கி, ஓர் அணியை உந்தித் தள்ளுமெனில், அதற்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்தது, பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப்கள். சிஎஸ்கேயின் டாப் 4 வீரர்களுக்கு இடையேயான, மூன்று 50+ பார்ட்னர்ஷிப்களும், போட்டி, சிஎஸ்கேயின் பிடியிலிருந்து நழுவாமல் பார்த்துக் கொண்டன. நீண்ட நெடியதாக இருப்பினும், இந்த சீசனில், ஓப்பனர்கள் மட்டுமே, சிஎஸ்கேயின் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான ரன்களை அடித்துள்ளனர், நிலையற்றதாகவே மற்றவர்கள் ஆட்டம் பார்க்கப்பட்டு வந்த நிலையில், முக்கியப் போட்டிகளில், பிரதான பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக ஆடியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேகேஆர் ஃப்ளாஷ்பேக்!

இறுதிப் போட்டியில், சிஎஸ்கே - கேகேஆர் சந்திக்கிறது என்றதுமே, 2012 நினைவலைகள் இரண்டு பக்கமும் எழுந்திருந்தன. 'சரித்திரம் திரும்பும்' என கேகேஆர் ரசிகர்களும், 'வாங்கியதை சிஎஸ்கே திரும்பித் தந்து பழிதீர்க்கும்' என அவர்களது தரப்பும், வார்த்தைப் போர்களில் முட்டி மோதிக் கொண்டிருக்க, இப்போட்டியில் பல நிகழ்வுகள் பழையதை, மறுபடியும் ஓட்டிப் பார்க்க வைத்தன. 190+ ரன்களை இதற்கு முன்னதாக, இரண்டு ஃபைனல்களிலும் சேஸ் செய்தே கோப்பையை கேகேஆர் வென்றது, 2012-ல், முதல் இன்னிங்ஸின் இறுதிப் பந்து விக்கெட் காவு வாங்கியது என பல தகவல்கள் சற்றே சிஎஸ்கே ரசிகர்களுக்கு, தேஜாவு வரவழைத்து, கிலியூட்டிக் கொண்டே இருந்தன.

டுப்ளெஸ்ஸி
டுப்ளெஸ்ஸி

டெட் பால் சர்ச்சை!

கேகேஆர் ஓப்பனிங் வீரர்கள் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார்கள், விக்கெட்டே விழாதா என எண்ணித் தவித்த போது, பத்தாவது ஓவரில், ஜடேஜா வீசிய பந்தை, கில் அடிக்க, அது டீப் மிட் விக்கெட்டில், ராயுடுவிடம் தஞ்சமடைந்தது. விக்கெட் வீழ்ச்சியைக் கொண்டாடிய சிஎஸ்கே ரசிகர்களுக்கு, பந்து டெட் பால் என்ற அறிவிப்பு, காயத்தில், உப்புத் தாளைக் கொண்டு தேய்த்த உணர்வைத் தந்தது. காரணம், கீழ் நோக்கிப் பாய்ந்த பந்து, தரையை அடையும் முன்பு, உயரத்தில் இருந்த கேமராவின் வயரைத் தொட்டு இடறி வந்திருந்ததுதான். பத்து ஓவர்கள் விக்கெட் இழப்பின்றி, பத்திரமாக கேகேஆர் கடந்திருந்ததும், ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை முறிக்க முடியாமல் போனதும், சிஎஸ்கேவுக்கு சேதாரத்தைத் தரும் எனற பயத்தைக் கிளப்பியது.

இரட்டைத் தாக்குதல்!

இரட்டைத் தாக்குதலும், தாக்கூருக்குமான இணை பிரியாக் காதல் கதை பலமுறை படிக்கப்பட்டதுதான். இப்போட்டியிலும், அவரது தாக்குதல்தான், கேகேஆர் இடிபாடுகளுக்குள் இடறி அமர்வதை உறுதி செய்தது. வீசவந்த இரண்டாவது ஓவரிலேயே, இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி, போட்டியை சிஎஸ்கேயின் பக்கமாக, அவர்தான் நாற்காலி இட்டு அமர வைத்திருந்தார். டி20 உலகக் கோப்பைக்குள், வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்திருக்கும், லார்ட் ஷர்துல் தாகூர், அதற்கான நியாயத்தைக் கற்பித்திருந்தார்.

மிடில் ஆர்டர் மர்டர்!

இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே, கேகேஆரின் மிடில் ஆர்டர் பலவீனம் தெரிந்த கதைதான். அரபு மண்ணில், மிகப் பெரிய இலக்கை அவர்கள் துரத்த வேண்டிய அவசியமின்றி, அவர்களது பௌலர்கள் பெரும்பாலான போட்டிகளில், எதிரணியை குறைவான ஸ்கோருக்குள் சுருட்டி இருந்தனர். பெரும்பாலும், 160-க்கு அதிகமான ஸ்கோர்களை அவர்கள் சேஸ் செய்யுமாறு சூழல்கள் உருவாகவில்லை. அத்தகைய பழக்கம் இல்லாதது, இந்தப் பெரிய மேடையில், நன்றாகவே வெளிப்பட்டது. முதல் பத்து ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி நகர்ந்திருக்க, அடுத்த ஐந்து ஓவர்களில், வெகுண்டெழுந்த சிஎஸ்கே பௌலிங்கால், ஆறு விக்கெட்டுகளை இழந்து, அங்கேயே தனது கோப்பைக் கனவை கலைத்துக் கொண்டது கேகேஆர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

திரிபாதி காயம்!

ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த போதே, காயத்தால் வெளியேறியிருந்த திரிபாதி, எட்டாவது வீரராகத்தான், கேகேஆருக்காகக் களமிறங்கி இருந்தார். திடீரென வீறு கொண்டு, 2012 பிஸ்லாவின் இன்னிங்ஸை இவர் ஆடிக் காட்டலாம் என்றெல்லாம் கருத்துக்கள் உலா வர, திரிபாதியின் காயமும், கேகேஆருக்கு பின்னடைவானது.

லீக் போட்டிகளில், வெற்றி யாரை வேண்டுமெனினும் தொற்றிக் கொள்ளலாம், ஆனால், பிரஷர் கேம்களில், சிஎஸ்கேயின் ஆட்டம் எப்போதும் தனி ரகம்தான் என மறுபடியும் ஒருமுறை நிருபணம் ஆகியுள்ளது.

வீழ்ந்த இடத்திலேயே எழுந்திருக்கிறது சிஎஸ்கே. அதுவும் மூன்று தசாப்தங்களிலும்(2010, 2018, 2021) சென்னை சூப்பர் கிங்ஸை சாம்பியனாக்கி டி20 கிரிக்கெட்டின் பேரரசனாக மகுடம் சூடியிருக்கிறார் மகேந்திர சிங் தோனி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism