Ipl-2021 banner
Published:Updated:

DC v MI: அமித் மிஷ்ரா, ஒற்றை ஆளாக மும்பையை காலி செய்தது எப்படி? | IPL 2021

Amit Mishra
Amit Mishra

ரோஹித் ஷர்மாவை ஆஃப் ஸ்டம்புக்கு மிகவும் வெளியே வீசி வெளியேற்றியவர், பொல்லார்டை தன் திடீர் கூக்ளியால் காலி செய்தார். அதற்கு முன் பொல்லார்டுக்கு வீசிய 2 பந்துகளையும் லெக் பிரேக்காக வீசியவர், மூன்றாவது பந்தை கூக்ளியாக்க, அதை சமாளிக்க முடியாமல் வெளியேறினார் பொல்லார்ட்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ். நடப்பு சாம்பியனை வெறும் 137 ரன்களுக்கு சுருட்டியது அந்த அணி. இந்த அட்டகாச செயல்பாட்டுக்கு மிகமுக்கியக் காரணம் அமித் மிஷ்ரா. 4 ஓவர்கள் பந்துவீசி, வெறும் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, கரண் பொல்லார்ட், இஷன் கிஷன் என மிகப்பெரிய விக்கெட்டுகளை அவர் எப்படி வீழ்த்தினார், இந்த வீடியோவில் முழுமையாக.

ரோஹித் ஷர்மாவை ஆஃப் ஸ்டம்புக்கு மிகவும் வெளியே வீசி வெளியேற்றியவர், பொல்லார்டை தன் திடீர் கூக்ளியால் காலி செய்தார். அதற்கு முன் பொல்லார்டுக்கு வீசிய 2 பந்துகளையும் லெக் பிரேக்காக வீசியவர், மூன்றாவது பந்தை கூக்ளியாக்க, அதை சமாளிக்க முடியாமல் வெளியேறினார் பொல்லார்ட். இதை விட இஷன் கிஷன் விக்கெட்டை வீழ்த்தியது இன்னும் சுவாரஸ்யமானது. அதை எப்படி வீழ்த்தினார் மிஷ்ரா - இந்த வீடியோவில்.

"மெதுவாகப் பந்துவீசி விக்கெட்டுகள் எடுக்க மட்டுமே முயற்சி செய்தேன். நன்றாக காற்றில் ஃப்ளோட் செய்து பந்தை 'டிப்' செய்வதுதான் என் ஸ்டைல். அதைத்தான் 14 வருடங்களாக செய்துகொண்டிருக்கிறேன். அதை இனி மாற்ற விரும்பவில்லை. ரோஹித்தும் மும்பை இந்தியன்ஸும் கடந்த 14 வருடங்களாக மேட்ச் வின்னர்களாகத் திகழ்கிறார்கள். அதனால், எப்போதுமே விக்கெட் எடுக்கவே முயற்சி செய்வேன். போட்டியை நினைத்து கொஞ்சம் கவலையாக இருந்தது. ஆனால், எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்" என்று கூறினார் மிஷ்ரா.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு