Published:Updated:

IPL 2022 - SRH Starting 11: பேக்-அப்பில்லா பேட்டிங், தேவைக்கு அதிகமாக பௌலர்கள்! என்ன பிளான்?

IPL 2022 - SRH

ஹைதராபாத் அணியின் ஏல தேர்வுகள் அவர்களின் பழைய திட்டத்தை இன்னும் தீவிரமாகச் செயல்படுத்த நினைக்கிறார்கள் என்பதை நமக்குத் தெரியப்படுத்துகிறது.

IPL 2022 - SRH Starting 11: பேக்-அப்பில்லா பேட்டிங், தேவைக்கு அதிகமாக பௌலர்கள்! என்ன பிளான்?

ஹைதராபாத் அணியின் ஏல தேர்வுகள் அவர்களின் பழைய திட்டத்தை இன்னும் தீவிரமாகச் செயல்படுத்த நினைக்கிறார்கள் என்பதை நமக்குத் தெரியப்படுத்துகிறது.

Published:Updated:
IPL 2022 - SRH
ராஜஸ்தான் ராயல்ஸ் சந்தித்த அதே அடையாள சிக்கலை கொண்டிருக்கும் மற்றொரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஆனால் இந்த மெகா ஏலத்தைச் சிறப்பாக எதிர்கொண்டு புதியதொரு அணியை ராஜஸ்தான் கட்டமைத்தது போல எந்த சிறு முயற்சியையும் செய்திருக்கவில்லை ஹைதராபாத் அணி.
SRH
SRH

வேகப்பந்து வீச்சாளர்கள்தான் ஹைதராபாத் அணியின் பலம். அவர்களை முதன்மையாகக் கொண்டே செயல்படுத்தப்படும் அந்த அணியின் திட்டம் அவர்களுக்கு பல வெற்றிகளையும் பெற்றுத்தந்திருக்கிறது. ஆனால் அவர்களின் பலமாகக் கருதப்பட்ட பௌலிங் யூனிட்டே அணியின் பேட்டிங் யூனிட்டை பலவீனமாக்கியது. மிகச்சிறந்த பேட்டர்களை முதல் மூன்று இடங்களில் கொண்டிருந்தாலும் அவர்களுக்கடுத்து வருபவர்கள் அனுபவமற்றவர்களாக இருந்ததால் அது முன்னிருப்பவர்களுக்கு கூடுதல் பிரஷரை ஏற்படுத்தி அணியின் மொத்த காம்பினேஷயும் குழப்பியது. அதற்கு சிறந்த உதாரணமாகக் கடந்த சீசனை கூறலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் அடையாளமோ அல்லது பின்பற்றி வரும் திட்டமோ அணியின் முன்னேற்றத்திற்கு உதவில்லை என்றால் அதைப் புறந்தள்ளி விட்டு புதிய திட்டத்தை செயல்படுத்தவதுதானே எந்த ஒரு அணியும் செய்ய நினைப்பது. ஆனால், ஹைதராபாத் அணியின் ஏல தேர்வுகள் அவர்களின் பழைய திட்டத்தை இன்னும் தீவிரமாகச் செயல்படுத்த நினைக்கிறார்கள் என்பதை நமக்குத் தெரியப்படுத்துகிறது. சரி அந்த அணியின் ஸ்டார்டிங்-11ஐ பார்த்துவிடுவோம்.

முந்தைய ஓப்பனர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் இந்தாண்டு அணியில் இல்லை. அவர்களுக்குப் பதிலாக ஏய்டன் மார்க்கரத்தை வாங்கியிருக்கிறார்கள். இவருக்கு பார்ட்னராக இன்னொரு எண்டில் அபிஷேக் ஷர்மாவைக் களமிறக்கலாம். அவரை கீழிறக்க முடிவு செய்தால் ராகுல் திரிபாதி, பூரான் போன்றோர் இன்னும் மேலே இறங்க வேண்டும். இப்படிச் செய்தால் அணியின் டெப்த் மேலும் குறையும் என்பதால் அபிஷேக் ஷர்மாவை ஓப்பனிங்கில் இறக்குவதே நல்லது. நம்பர்-3 பொசிஷனில் சந்தேகமே இல்லாமல் கேன் வில்லியம்சன்தான் இறங்குவார்.

இதற்கடுத்ததாக ராகுல் திரிபாதி மற்றும் நிக்கோலஸ் பூரான். டி20 ஃபார்மெர்டில் மிக சிறந்த பேட்டரான பூரன் ஐ.பி.எல் அரங்கில் தன்னை இன்னமும் நிரூபிக்கவில்லை. அவரின் ஃபார்மை பொறுத்துதான் அணியின் மிடில் ஆர்டர் பலம் நிர்ணயிக்கப்படும். இவருக்கு அடுத்ததாக ஆறாவது இடத்தில் அப்துல் சமத். இவ்வாறாக ஹைதராபாத் அணியின் பேட்டிங் யூனிட் முடிகிறது. ஸ்டார்டிங் 11-யில் பலமாகக் காட்சியளித்தாலும் பேக்-அப் ஆப்ஷன் என்று அந்த அணியில் யாருமே இல்லை. மூன்று வெளிநாட்டு பேட்டர்களுக்கும் சேர்த்து பேக்-அப் ஆப்ஷனாக இருக்கும் ஒரே வீரர் கிளென் பிலிப்ஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே பௌலிங்கில் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளராக அணியில் இடம்பெறப்போகும் ரோமரியோ ஷெப்பர்டுக்கு மார்க்கோ யான்சன், சீன் அபாட், ஃபசல்ஹாக் ஃபரூக்கி ஆகிய மூவர் பேக்-அப்பாக உள்ளனர். அதேபோல இந்திய வேகப்பந்துவீச்சாளர்களாக அந்த அணியில் இடம்பெற்றிருப்பவர்கள் புவனேஷ்வர் குமார், நடராஜன், கார்த்திக் தியாகி, உம்ரான் மாலிக். இப்படி நீண்ட பட்டியலை கொண்டிருக்கிறது ஹைதரபாத் அணியின் பௌலிங் படை.

Bhuvaneswar Kumar
Bhuvaneswar Kumar

இதில் எங்கள் ப்ளேயிங்-11-யில் இடம் அப்துல் சமத்திற்குப் பிறகு ரோமரியோ ஷெப்பர்ட் இடம்பெற்றுவிடுகிறார். அவருக்கு அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர். இவரை மேலே இறக்கியும் பரிசோதித்து பார்க்கக்கூடும் அணி நிர்வாகம். அவருக்கு அடுத்தபடியாக புவனேஸ்வர், கார்த்திக் தியாகி, உம்ரான் மாலிக் ஆகிய மூவரும் இடம் பெறுகின்றனர். சமத், மாலிக் ஆகிய இரு இளைஞர்களை நம்பி தக்கவைத்துள்ளதால் அவர்களுக்குக் கூடுதல் பிரஷர் நிச்சயம் இருக்கும். இவ்வாறாக சன்ரைசர்ஸ் அணியின் ஸ்டார்டிங்-11 முடிவுக்கு வருகிறது.

Sunrisers Hyderabad - Starting 11: ஏய்டன் மார்க்கரம், அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (c), ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் (wk), அப்துல் சமத், ரோமரியோ ஷெப்பர்ட், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், கார்த்திக் தியாகி, உம்ரான் மாலிக்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism