Published:Updated:

IPL 2022 - RR Starting 11: தவறுகளைத் திருத்திக்கொண்ட ராயல்ஸ்... இரண்டாவது கோப்பையை வெல்லுமா?

IPL 2022

வலுவான கட்டமைப்பைக் கொண்டிருக்கும் அணிகளெல்லாம் தங்களின் கோர் வீரர்களை மீட்டெடுக்க பெரும்பாடு பட, சத்தமே இல்லாமல் இந்த வருடத்தின் மிகச் சிறந்த அணியை கட்டமைத்துவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ்.

IPL 2022 - RR Starting 11: தவறுகளைத் திருத்திக்கொண்ட ராயல்ஸ்... இரண்டாவது கோப்பையை வெல்லுமா?

வலுவான கட்டமைப்பைக் கொண்டிருக்கும் அணிகளெல்லாம் தங்களின் கோர் வீரர்களை மீட்டெடுக்க பெரும்பாடு பட, சத்தமே இல்லாமல் இந்த வருடத்தின் மிகச் சிறந்த அணியை கட்டமைத்துவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ்.

Published:Updated:
IPL 2022

ஐபிஎல் தொடரின் கடந்த சில சீசன்களில் மிக சுமாரான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸை சொல்லலாம். ஒவ்வொரு ஐ.பி.எல் அணிக்கும் அதற்கென்று கட்டமைக்கப்பட்ட ஒரு அடையாளம் இருக்கும். அதுதான் அந்த அணியின் பலமாகவும் இருக்கும். ஆனால் அப்படியொரு அடையாளம்தான் ராஜஸ்தான் ராயல்ஸின் பின்னடைவிற்கான காரணமாக தோன்றுகிறது. ஆம், புதுப்புது இளம் திறமைகளை கண்டெடுத்து அதை வளர்த்தெடுப்பதுதான் அந்த அணியின் இத்தனை ஆண்டு கால அடையாமளாக இருந்துவருகிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனால் போக போக அந்த அடையாளமே அவர்களின் அணி தேர்விலும் காம்பினேஷனிலும் பல்வேறு குழப்பங்களுக்கு வித்திட்டது.

Sanju Samson
Sanju Samson

அதை இந்த மெகா ஏலத்தில் மிகச்சிறப்பாக உடைத்தெறிந்திருக்கிறது அந்த அணி. ஐபிஎல் தொடரின் அத்தனை அணிகளுக்கும் இந்த ஏலமானது மிக சவாலான களமாகத்தான் அமைந்தது. அதுவும் வலுவான கட்டமைப்பைக் கொண்டிருக்கும் அணிகளெல்லாம் தங்களின் கோர் வீரர்களை மீட்டெடுக்க பெரும்பாடு பட, சத்தமே இல்லாமல் இந்த வருடத்தின் மிகச் சிறந்த அணியை கட்டமைத்துவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ். அதற்கு முக்கியமாதொரு காரணம் தங்களின் அடையாளத்தை அவர்கள் உடைத்தெறிந்ததுதான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யசஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் என இரு ஒப்பர்களை ஏலத்திற்கு முன்பே தக்கவைத்திருந்தது அந்த அணி. ஆனால் படிக்கலை புதிதாக வாங்க, ஓப்பனிங் பொஷிஷனில் சற்றே குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் டி20 ஃபார்மெர்டில் பட்லருக்கு விருப்பமான இடம் ஓப்பனிங் ஸ்லாட்தான். தன் தேசிய அணிக்கும் அவர் அதே இடத்தில்தான் ஆடிவருகிறார். ஆனால், ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் இருவரையும் ஓப்பனிங்கில் இறக்கிவிட்டு பட்லரை கீழே தள்ளினால் அந்த அணியின் பேட்டிங் இன்னும் பலமாகவும் கூடுதல் டெப்த்தாகவும் மாறுவதால் இந்த முடிவு அந்த அணிக்கு சாதகமாகவே மாறுகிறது.

மூன்றாவது இடத்தில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆடுவார். அவருக்கு அடுத்ததாக மிடில் ஓவர்களில் ஆக்சிலேட்டரை முழுமையாக அழுத்தக்கூடிய ஷிம்ரன் ஹெட்மேயர் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக அணியில் ரியான் பராக். ஆறாவது இடத்தில் ஜாஸ் பட்லர். இவ்வாறாக முடிகிறது அந்த அணியின் பேட்டிங் லைன்-அப். பலமான பேட்டர்களை வரிசையாக கொண்டிருக்கும் ராஜஸ்தானின் பௌலிங் லைன்-அப்போ இன்னமும் பலமானதாகக் காட்சியளிக்கிறது.

ட்ரெண்ட் போல்ட் மற்றும் கூல்டர் நைல் இருவரையும் மும்பை அணியிலிருந்து அப்படியே இறக்குமதி செய்திருக்கிறது அணி நிர்வாகம். இவர்களுடன் ப்ரஸீத் கிருஷ்ணாவும் இந்த வேகப்பந்துவீச்சு கூட்டணியில் இடம்பெறுகிறார். சுழற்பந்துவீச்சாளர்களாக ரவி அஷ்வின் மற்றும் சாஹல் சந்தேகமே இல்லாமல் இடம்பிடித்துவிடுவார்கள். இதை விட சிறப்பானதொரு பௌலிங் கூட்டணியை எந்த அணியும் நினைத்து பார்க்கமுடியாது. இப்படியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ட்ராட்டிங் 11 முடிவுக்கு வருகிறது.

Buttler-Ashwin
Buttler-Ashwin
ராஜஸ்தான் ராயல்ஸ் - ஸ்டார்டிங் 11: யசஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (c), ஷிம்ரன் ஹெட்மேயர், ரியான் பராக், ஜாஸ் பட்லர் (wk), நாதன் கோல்டர் நெய்ல், ரவி அஷ்வின், ட்ரெண்ட் போல்ட், ப்ரஸீத் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.
Malinga-Chahal
Malinga-Chahal

இவ்வாறாக மிக பலமான ப்ளேயிங்-11ஐ கொண்டிருக்கும் ராஜஸ்தான் அணியின் பேக்-அப் ஆப்ஷன்களும் சிறப்பாகவே உள்ளன. இந்திய வேகப்பந்து வீச்சாளரின் இடத்தில் நவதீப் சைனி, ஜெய்ஸ்வால் அல்லது பராக் சரியாக ஆடாத பட்சத்தில் கருண் நாயர், வெளிநாட்டு வீரர்கள் டாரி மிட்சல் மற்றும் வேன் டர் டுசன் ஆகியோர் தயாராக உள்ளனர். ஆன்-பேப்பரில் அசுரபலத்துடன் காட்சியளிக்கும் ராயல்ஸ் அதே வேகத்தில் களத்திலும் செயல்பட்டால் நிச்சயம் கைகூடும் கோப்பை.