Published:Updated:

IPL 2022 - KKR Starting 11: கொல்கத்தா அணியின் இன்னொரு கம்பீராக உருவெடுப்பாரா ஷ்ரேயாஸ்?

IPL 2022

சென்ற தொடரின் இரண்டாம் பகுதியில் கேகேஆர் முன்னேறிய வேகம் அளப்பரியது. அதற்குக் காரணமாக அமைந்தவர்களைச் சுற்றியே புதிய அணியைக் கட்டமைக்க இந்த மெகா ஏலத்தில் திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது கொல்கத்தா அணி.

IPL 2022 - KKR Starting 11: கொல்கத்தா அணியின் இன்னொரு கம்பீராக உருவெடுப்பாரா ஷ்ரேயாஸ்?

சென்ற தொடரின் இரண்டாம் பகுதியில் கேகேஆர் முன்னேறிய வேகம் அளப்பரியது. அதற்குக் காரணமாக அமைந்தவர்களைச் சுற்றியே புதிய அணியைக் கட்டமைக்க இந்த மெகா ஏலத்தில் திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது கொல்கத்தா அணி.

Published:Updated:
IPL 2022
கடந்த ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்ற திடீர் எழுச்சியை யாராலும் மறந்துவிடமுடியாது. பிளே-ஆப்ஸிற்கான வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட முடிந்ததே விட்டது என அனைவரும் நினைக்க தொடரின் இரண்டாம் பகுதியில் அவர்கள் முன்னேறிய வேகம் அளப்பரியது. அதற்குக் காரணமாக அமைந்தவர்களைச் சுற்றியே புதிய அணியைக் கட்டமைக்க இந்த மெகா ஏலத்தில் திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது கொல்கத்தா அணி.
KKR
KKR
Ron Gaunt

இயன் மார்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் விலக்கிவிட்டு ஷ்ரேயாஸ் ஐயரை மிக பெரிய தொகைக்கு வாங்கியிருந்தது அந்த அணி. இதில் இருந்தே அந்த அணிக்கான நீண்டதொரு திட்டத்தை நிர்வாகம் மனதில் வைத்திருப்பது நமக்கு நன்றாக புலப்படுகிறது. இதே வழியில்தான் கௌதம் கம்பீரை அணித் தலைவராக தெரிந்தெடுத்து மிகப்பெரிய வெற்றியும் பெற்றிருந்தது அந்த அணி. ஷ்ரேயாஸ் தற்போது உச்சகட்ட ஃபார்மில் உள்ளது அனைவருக்கும் தெரியும். அதை அப்படியே ஐபிஎல் களத்திலும் தொடர்ந்தால் கொல்கத்தா அணிக்கு பெரும்பலமாக இருக்கும். சரி ஸ்டார்டிங்-11ஐ பார்த்துவிடுவோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் ஒப்பனர் சந்தேகமே இல்லாமல் வெங்கடேஷ் ஐயர். முன்பு சொன்ன புதிய எழுச்சிக்கான காரணமானவர்களுள் மிக முக்கிய பங்கு வெங்கடேஷை சேரும். அதிரடியாய் ஆடக்கூடிய இவருடன் அனுபவம் நிறைந்த அஜிங்க்யா ரஹானே களமிறங்கினால் அது அணிக்கு நல்லதொரு பேலன்ஸை அளித்திடும். இவர்களுக்கு அடுத்ததாக லெப்ட்-ரைட் காம்பினேஷனுக்கு ஏற்றது போல நிதிஷ் ராணா அல்லது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இறங்கக்கூடும்.

Sunil Narine
Sunil Narine
PRAVEEN JAYAKARAN

ஐந்தாவது இடத்தில் சாம் பில்லிங்ஸைக் களமிறக்கலாம். அணியின் விக்கெட் கீப்பராகவும் செயல்பட இருக்கும் இவரின் இடத்தில் முகமது நபி அல்லது கூடுதலாக ஆரோன் பின்ச் போன்ற பேட்டர் டாப் ஆர்டரில் தேவைப்பட்டால் தமிழக வீரர் ஷெல்டன் ஜாக்சன் பேக்-அப் கீப்பராக உள்ளார். மேலும் மற்றொரு தமிழக வீரர் பாபா இந்திரஜித் மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளதால் அணியின் தொடக்க செயல்படுகளை பொறுத்து மாற்றங்கள் செய்யப்படலாம்.

இதற்கடுத்ததாக வருபவர் ஆண்ட்ரே ரஸல். கடந்த தொடரில் மோர்கன், தினேஷ் கார்த்திக் அத்தனை சிறப்பாக ஆடவில்லை என்றாலும் இம்முறை அவர்கள் அணியிலேயே இல்லாதது ரஸலுக்குக் கூடுதல் ஃபிரஷரை உண்டாகும். மேலும் அவரது ஃபிட்னஸும் கொல்கத்தா அணிக்கு மிக மிக முக்கியம். கடந்த சீஸனில் அனைத்து பேட்டர்களையும் ஆட்டம் காண வைத்த நரைன்-வருண் கூட்டணிக்கு அணியில் நிச்சயம் இடமுண்டு. ஆனால் கடந்த உலககோப்பைக்கு பிறகு எந்த ஒரு பெரிய ஆட்டத்தில் வருண் ஆடாததால் அவரின் பௌலிங் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Venkatesh Iyer
Venkatesh Iyer
PRAVEEN JAYAKARAN

வேகப்பந்துவீச்சு யூனிட்டை பேட் கம்மின்ஸ் தலைமை தாங்கி நடத்தினாலும் இந்திய பௌலர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அப்படி அணியில் இடம்பெற்றிருக்கும் இருவர் ஷிவம் மாவி மற்றும் உமேஷ் யாதவ். இருவரும் கடந்த இரு சீஸன்களாக சொற்ப ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளதால் அவர்கள் அளிக்கப்போகும் பங்களிப்பை இப்போதைக்குச் சொல்லமுடியாது. இதோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்டார்டிங்-11 முடிவுக்கு வருகிறது.

KKR - Starting 11: வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (c), சாம் பில்லிங்ஸ் (wk), ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி