Published:Updated:

IPL 2022 - DC Starting 11: இருமுறை தவறவிட்டதை இம்முறை பிடிப்பாரா ரிஷப் பண்ட்?

IPL 2022

கடந்த சில சீசன்களாய் ரிஷப் பண்ட்டைத் தாண்டி ஒரு இந்திய விக்கெட் கீப்பர் இல்லாமல் ரொம்பவும் தடுமாறியது டெல்லி அணி. வெளிநாட்டு கீப்பரை ஆடவைக்கும் பட்சத்தில் மொத்த காமினேஷனையும் மாற்ற வேண்டி பல்வேறு குழப்பங்களையும் சந்தித்து வந்தது. அதற்கான நல்லவொரு மாற்றாக பரத் நிச்சயம் இருப்பார்.

IPL 2022 - DC Starting 11: இருமுறை தவறவிட்டதை இம்முறை பிடிப்பாரா ரிஷப் பண்ட்?

கடந்த சில சீசன்களாய் ரிஷப் பண்ட்டைத் தாண்டி ஒரு இந்திய விக்கெட் கீப்பர் இல்லாமல் ரொம்பவும் தடுமாறியது டெல்லி அணி. வெளிநாட்டு கீப்பரை ஆடவைக்கும் பட்சத்தில் மொத்த காமினேஷனையும் மாற்ற வேண்டி பல்வேறு குழப்பங்களையும் சந்தித்து வந்தது. அதற்கான நல்லவொரு மாற்றாக பரத் நிச்சயம் இருப்பார்.

Published:Updated:
IPL 2022

புள்ளிப் பட்டியலின் ஆழத்தில் தேங்கிக் கிடப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் அணி டெல்லி கேப்பிடல்ஸ் கடந்த சில சீசன்களுக்குள்ளேயே சென்னை, மும்பைக்கு அடுத்தபடியாக ஐ.பி.எல் அரங்கில் உயர்ந்து காட்சியளிக்கிறது. நிர்வாகத்தின் தெளிவான திட்டமிடல், அனுபவமுள்ள பயிற்சிபட்டறை அதை அப்படியே பிரதிபலிக்கும் இளம் படை என அவர்களின் வெற்றிக்கான காரணத்தைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். மேலும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கப்போகும் இந்திய கோர் யூனிட்டை அட்டகாசமாக அமைத்திருந்தது டெல்லி. அதை தக்கவைப்பதே இந்தாண்டின் மெகா ஏலம் அந்த அணிக்கான மிகப்பெரிய சவாலாகவும் அமைந்தது. ஆனால் அதை வெற்றிகரமாக சமாளித்து மீண்டுமொரு பலம்பொருந்திய படை டெல்லிக்கு வாய்த்திருக்கிறது. சரி, இப்போது ஸ்டார்டிங்-11ஐ பார்த்துவிடுவோம்.

Delhi Capitals
Delhi Capitals
Sandeep Shetty

சத்தமே இல்லாமல் ரன்கள் குவித்துக்கொண்டிருக்கும் தவனை இழந்துவிட அவருக்கு பதிலாக டேவிட் வார்னரை வாங்கியிருக்கிறது டெல்லி. ப்ரித்வி ஷா, வார்னர் இதைவிட சிறந்ததொரு ஓப்பனிங் கூட்டணியை யாரும் நினைத்துப்பார்க்க முடியாது. டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகனை அடுத்தபடியான இறுதிப்போட்டியில் கலக்கிய மிட்சல் மார்ஷும் அணியில் இடம்பெற்றுவிடுகிறார். இந்த இருபெரும் சக்திகளுக்கு அடுத்தாக இளம் இந்திய வீரர் கே.எஸ்.பரத் களமிறங்கலாம்.

கடந்த சில சீசன்களாய் ரிஷப் பண்ட்டைத் தாண்டி ஓர் இந்திய விக்கெட் கீப்பர் இல்லாமல் ரொம்பவும் தடுமாறியது டெல்லி அணி. வெளிநாட்டு கீப்பரை ஆட வைக்கும் பட்சத்தில் மொத்த காமினேஷனையும் மாற்ற வேண்டி பல்வேறு குழப்பங்களையும் சந்தித்து வந்தது. அதற்கான நல்லவொரு மாற்றாக பரத் நிச்சயம் இருப்பார். இதற்கடுத்ததாக ஐந்தாவது இடத்தில் கேப்டன் ரிஷப் பண்ட். ஃபினிஷ் ரோலை தாண்டி தன்னை ஒரு கேப்டாக மென்மேலும் மெருகேற்றி வரும் பண்ட் டெல்லியின் மிக முக்கிய வீரராக இருப்பார். இவ்வாறாக அந்த அணியின் பேட்டிங் யூனிட் முடிவுக்கு வருகிறது.

ஆல்-ரவுண்டர் ஸ்லாட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்த ஸ்டாய்னிஸின் பணி இம்முறை ரோவ்மன் பாவெலின் கைகளில் கிடைத்திருக்கிறது. அவர் எப்படி செயல்பட போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பாவெலுக்கு அடுத்தபடியாக ஏழாவது இடத்தில் இருப்பவர் அக்ஸர் படேல். டெல்லி அணியின் மெயின் ஸ்பின்னர்களான ரவி அஷ்வின் மற்றும் அமித் மிஸ்ரா ஆகிய இரு அனுபவமிக்க வீரர்களும் இவ்வாண்டு அணியில் இல்லை. அந்த இடத்தில் தற்போது குல்தீப் யாதவே விளையாடவே வாய்ப்பிருக்கிறது. இந்திய அணியின் பிராதன ஸ்பின்னராக விளங்கிவந்த இவரை ஐ.பி.எல் அணிகளே நம்பிக்கை வைக்காதது கவலை அளிக்கும் விதமாக இருந்தாலும் இவரை தான் டெல்லி அணி இவ்வருடம் நம்ப வேண்டி இருக்கிறது.

எட்டாவது இடத்தில் சென்னை அணியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஷர்துல் தாக்கூர். பௌலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கில் கைகொடுக்க கூடிய மிக சிறந்த மேட்ச் வின்னராக விளங்கிடுவார் இவர். ரபடாவை ஏலத்தில் இழந்தது இந்தாண்டு டெல்லி அணியின் மற்றொரு பலவீனமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக இந்திய இடது கை பந்துவீச்சாளரான சேத்தன் சக்கரியா விளையாடலாம் என தெரிகிறது. கடைசி வீரராக ஆன்ரிக் நார்க்கியா. இவ்வாறாக டெல்லி அணியின் ஸ்டார்டிங்-11 முடிவுக்கு வருகிறது.

Shardul Thakur
Shardul Thakur

சென்ற ஆண்டுகளை போலல்லாமல் பெரிய ஆட்டங்களில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் தன் முதல் கோப்பையை நிச்சயம் வெல்லக்கூடும்.

Delhi Capitals- Starting 11: ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ், கே.எஸ்.பரத், ரிஷப் பண்ட் (c) (wk), ரோமன் பாவெல், அக்ஸர் படேல், ஷர்துல் தாக்கூர், சேத்தன் சக்கரியா, குல்தீப் யாதவ், ஆன்ரிக் நார்க்கியா.