Published:Updated:

IPL 2022 - CSK Starting 11: சிஎஸ்கே-வின் புதிய அத்தியாயம்... தோனியின் இடத்தை நிரப்புவாரா ஜடேஜா?

IPL 2022

2, 3, 4 எந்த பொஷிஷனிலும் ஆடக்கூடிய திறன், பயிற்சியாளர் ஃபிளெமிங் உடனான பிணைப்பு என சி.எஸ்.கே-விற்கு அனைத்து விதத்திலும் பொருந்திப்போகக்கூடிய கான்வே, டூ ப்ளஸ்ஸிக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவர்.

IPL 2022 - CSK Starting 11: சிஎஸ்கே-வின் புதிய அத்தியாயம்... தோனியின் இடத்தை நிரப்புவாரா ஜடேஜா?

2, 3, 4 எந்த பொஷிஷனிலும் ஆடக்கூடிய திறன், பயிற்சியாளர் ஃபிளெமிங் உடனான பிணைப்பு என சி.எஸ்.கே-விற்கு அனைத்து விதத்திலும் பொருந்திப்போகக்கூடிய கான்வே, டூ ப்ளஸ்ஸிக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவர்.

Published:Updated:
IPL 2022
சுமார் 12 ஆண்டு கால ஐ.பி.எல் களத்தில் சி.எஸ்.கே-வின் ஒரே கேப்டனாக விளங்கி வந்த தோனி என்னும் தன்னிகரற்ற தலைவன் தன் பதவியை அடுத்த தலைமுறையினருக்கு வழங்கியிருக்கிறார். இனி சென்னை அணியை வழிநடத்தப்போவது தோனி இல்லை ஜடேஜாதான் என்ற திடீர் செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இது ஒரு மிகச் சிறந்த முடிவாகவே பார்க்கப்படுகிறது. கேப்டன் பதிவிலிருந்து விலகியிருக்கும் தோனியின் முடிவால் எப்போதும் நிலையான ப்ளேயிங் 11-ஐ கொண்டிருக்கும் சென்னை அணியில் இம்முறை மாற்றங்கள் நிகழலாம். சரி தற்போது ஸ்டார்டிங் 11-ஐ பார்த்துவிடுவோம்.
Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad

இந்த வருட மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் எடுத்த முடிவுகள் சில ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்றுதான் சொல்லவேண்டும். காரணம், தோனிக்குப் பிறகு சென்னை அணிக்கு இத்தனை ஆண்டு காலம் படை தளபதியாய் விளங்கி வந்த சுரேஷ் ரெய்னாவை தொடக்க விலைக்கு கூட வாங்க முற்படவில்லை சி.எஸ்.கே. அவரின் சமீபத்திய ஃபார்ம், தொலைநோக்கு திட்டத்துடன் கட்டமைக்கப்படவேண்டிய புதிய அணி ஆகியவற்றால் இம்முடிவுக்கு அணி நிர்வாகம் தள்ளப்பட்டிருக்கலாம். அதேபோலதான் ஃபாப் டூ பிளசியை ஆர்.சி.பி-யிடம் இழந்ததும். ஆனால் 5 கோடிக்கு மேல் வெளிநாட்டு ஓப்பனர்களுக்கு போகக் கூடாது என்பது சென்னை அணி காலங்காலமாக வைத்திருக்கும் கொள்கை. இந்த இரு பெரும் இழப்பிற்கும் சேர்த்து அட்டகாசமான அணி ஒன்றை கட்டமைத்திருக்கிறது சி.எஸ்.கே.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் ஓப்பனராக சந்தேகமே இல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட். அவரின் புதிய பார்ட்னராக டேவான் கான்வே. 2, 3, 4 எந்த பொஷிஷனிலும் ஆடக்கூடிய திறன், பயிற்சியாளர் ஃபிளெமிங் உடனான பிணைப்பு என சி.எஸ்.கே-விற்கு அனைத்து விதத்திலும் பொருந்திப்போகக்கூடிய கான்வே டூப்ளஸிக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவர். மூன்றாவது இடத்தில் விளையாடப்போகும் வீரரையும் யோசனையே இல்லாமல் சொல்லிவிடலாம். மொயின் அலி. 2020-யில் சரித்துப்போயிருந்த அணியை இந்த ஒற்றை வீரரின் வரவு எப்படி மாற்றியது என்பதை நாம் கடந்த ஐ.பி.எல்-யில் கண்கூடாக பார்த்திருப்போம். இன்றைய முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை என்றாலும் மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் நிச்சயம் விளையாடுவார் அலி.

சி.எஸ்.கே-விற்கு சிறப்பான பங்களிப்பைத் தொடர்ந்து அளித்து வரும் ராயுடுவை பற்றி நாம் யாருமே அதிகம் பேசுவதில்லை. அவருக்கான இடம் நம்பர் 4 ஆக இருக்கும். ராயுடுவுக்குப் பிறகு லெப்ட்-ரைட் காம்பினேஷனைத் தொடர ஷிவம் தூபேவை ஆடவைக்கலாம். பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற அணிகளுக்காக முன்பே ஆடியிருந்தாலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை துபே. ஆனால் சென்னை அணி இந்த வரைமுறைக்குளெல்லாம் வரவே வராது. தோனி என்னும் சிறந்த வழிகாட்டி, முழுமையான ஆதரவைத் தொடர்ந்து அளிக்கும் நிர்வாகம் என இப்படியொரு சூழலில் எந்தவொரு வீரரும் மேட்ச் வின்னராக மாறலாம். அவருக்கு அடுத்ததாக புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா. உலகின் மிக சிறந்த ஆல்-ரவுண்டராக தன்னைத் தொடர்ந்து நிரூபித்து வரும் ஜடேஜா இனி வரும் நாள்களில் சென்னை அணிக்கு அளிக்கப்போகும் பங்கு அளப்பரியதாக இருக்கப்போகிறது.

ஜடேஜாவிற்குப் பின்பே வருகிறார் தோனி. வயது காரணமாக தன் ஆட்டத்தைக் கொஞ்ச கொஞ்சமாக இழந்து வரும் தோனி தற்போது கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ளதால் சில ஆட்டங்களில் அவர் விளையாடாமல் இருந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை. அவருக்குப் பதிலாக ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் அல்லது பேக்-அப் கீப்பராக ராயுடு, டேவான் கான்வே கூட செயல்படக்கூடும். எட்டாவது பொஷிஷனில் டுவைன் ப்ராவோ. இவருக்கான இடத்திற்கும் நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. டி20 உலகக்கோப்பையில் இரும்பாக டெத் பௌலிங் செய்த ப்ரிடோரியஸ் இருக்கிறார், கிறிஸ் ஜோர்டனும் ஓரளவிற்கு இப்பணியைச் சிறப்பாகச் செய்யக்கூடியவரே. ஆடம் மில்னே இதுவரை ஐ.பி.எல் அரங்கில் தன்னை பெரிய அளவில் நிரூபித்திருக்கவில்லை. அதனால் எங்களுடைய ஸ்டார்டிங் 11-யில் ப்ராவோ, ஜோர்டன் இருவருக்கும் இடம் இருக்கிறது. வயது மற்றும் ஃபிட்னெஸ் கருத்தில் கொண்டு ப்ராவோவும் ப்ரிடோரியஸும் மாற்றி மாற்றி கூட விளையாடலாம்.

CSK
CSK

மீதமிருக்கும் இரண்டு இடங்களில் ஒன்று தீபக் சஹர் நிச்சயம் ஆடுவார். தற்போது காயத்தால் அவதிப்பட்டுவரும் அவரின் நிலை என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. அப்படி அவர் பெரும்பாலான ஆட்டங்களில் விளையாடபட்சத்தில் சி.எஸ்.கே அணிக்குக் கொஞ்சம் சிக்கல் ஏற்படும். மீதமிருக்கும் ஒரு இடத்தில் இளம் வீரர் ஹங்கர்கேக்கருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஜடேஜாவை தவிர ஓர் அனுபவமுள்ள ஸ்பின்னர் இல்லாததே தற்போதைய சென்னை அணியில் உள்ள ஒரே குறை. இன்னொரு ஸ்பின்னராக மகேஷ் தீக்ஷனாவை ஆடவைத்தால் அணியில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்படலாம்.

தீபக் சஹாரின் காயம் மற்றும் தோனியின் திட்டங்களை பொறுத்து மாறும் டீம் காம்பினேஷன் ஆகியவற்றால் இவ்வருட சென்னை அணி பல முயற்சிகளை செய்யக்கூடும். இப்போதைக்கான ஸ்டார்டிங் 11 இதோ...

CSK- Starting 11: ருதுராஜ் கெய்க்வாட், டேவான் கான்வே, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா (c), எம்.எஸ்.தோனி (wk), ப்ராவோ, தீபக் சஹார், ஹங்கர்கேகர், கிறிஸ் ஜோர்டன்.