Published:Updated:

IPL 2022: தீபக் சஹார் முதல் டேவிட் வார்னர் வரை... ஆப்சென்ட் ஆகப்போகும் வீரர்களின் லிஸ்ட்!

Deepak Chahar | தீபக் சஹார்

சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ, கொல்கத்தா போன்ற அணிகள் சில வீரர்களின் தற்காலிக ஆப்சென்டால் கொஞ்சம் அதிகமாகவே பிரச்னைகளைச் சந்திக்கவிருக்கின்றனர்.

IPL 2022: தீபக் சஹார் முதல் டேவிட் வார்னர் வரை... ஆப்சென்ட் ஆகப்போகும் வீரர்களின் லிஸ்ட்!

சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ, கொல்கத்தா போன்ற அணிகள் சில வீரர்களின் தற்காலிக ஆப்சென்டால் கொஞ்சம் அதிகமாகவே பிரச்னைகளைச் சந்திக்கவிருக்கின்றனர்.

Published:Updated:
Deepak Chahar | தீபக் சஹார்
15வது ஐ.பி.எல் சீசன் இன்று கோலாகலமாக தொடங்க இருக்கிறது. முட்டி மோதி சாம்பியனாக அத்தனை அணிகளும் தயாராக இருக்கின்றனர். ஆனால், அத்தனை வீரர்களும் தயாராக இல்லை. முதல் சில போட்டிகள் முதல் சில வாரங்கள் ஏன் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரையுமே சில வீரர்கள் தவறவிட இருக்கின்றனர். அந்த வீரர்கள் யார்? அவர்களின் இல்லாமையால் அந்த அணிகள் எப்படியான பாதிப்பை அடையப்போகின்றன?
சென்னை சூப்பர் கிங்ஸ்: மொயின் அலி, தீபக் சஹார்

நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த முறை இரண்டு முக்கிய வீரர்களை தவறவிட இருக்கிறது. முதலாவதாக மொயின் அலி. விசா கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டு இந்தியா வந்து சேர தாமதமானதால் கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டியில் மொயின் அலி ஆடுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. மொயின் அலி ஒரு போட்டியில் ஆடாவிட்டாலும் அது சென்னை அணிக்கு பின்னடைவே. கடந்த சீசனில் சென்னைக்காக ருதுராஜ் மற்றும் டு ப்ளெஸ்ஸிக்கு அடுத்து அதிக ரன்களை அடித்திருந்தது மொயின் அலிதான். பௌலிங்கிலும் ஆறாவது பௌலிங் ஆப்சனாக ஜடேஜாவோடு சேர்ந்து பயங்கர எக்கானமிக்கலாக வீசியிருப்பார். மொயின் இல்லை என்றால் பேட்டிங் வரிசை கொஞ்சம் பலவீனமாகும். ஜடேஜாவுடன் சேர்ந்து வீசப்போகும் இரண்டாவது ஸ்பின்னர் யார் என்ற கேள்வியும் எழும்.

மொயின் அலி
மொயின் அலி

சென்னை அணி தவறவிடப்போகும் இரண்டாவது வீரர் தீபக் சஹார். வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் குறைந்தபட்சமாக ஒரு இரண்டு வாரங்களுக்காகாவது அவர் ஐபிஎல் இல் ஆடமாட்டார் எனக் கூறப்படுகிறது. கடந்த 4 சீசன்களிலுமே நியூபாலில் பவர்ப்ளேயில் சென்னை அணியின் பிரதான ஆயுதமாக தீபக் சஹாரே இருந்தார். அதனால்தான் அவரை அதிகப்பட்சமாக 14 கோடி கொடுத்து சென்னை அணி மீண்டும் வாங்கியிருந்தது. தீபக் சஹார் இல்லையெனில் அவருடைய இடத்தை நிரப்பும் வகையில் அனுபவமிக்க ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது சென்னைக்கு பலவீனமாக இருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மும்பை இந்தியன்ஸ்: ஜோஃப்ரா ஆர்ச்சர், சூர்யகுமார் யாதவ்
Suryakumar Yadav
Suryakumar Yadav

ஜோஃப்ரா ஆர்ச்சரை 8 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியிருந்தது. பும்ரா + ஆர்ச்சர் கூட்டணியைக் காண மும்பை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், கடந்த சீசனை போலவே ஆர்ச்சர் இந்த சீசனிலும் ஆடப்போவதில்லை என்றே செய்திகள் வெளியாகியுள்ளது. மும்பை அணி தவறவிடப்போகும் இன்னொரு வீரர் சூர்யகுமார் யாதவ். காயம் காரணமாக முதல் ஒரு வாரத்திற்கு சூர்யகுமார் யாதவ் ஆடமாட்டார் எனக் கூறப்படுகிறது. மும்பை அணியின் மிடில் ஆர்டரில் நின்று சுற்றி சுழன்று அதிரடியாக ஆடக்கூடிய சூர்யகுமார் இல்லாதது அந்த அணிக்கு பெரும்பின்னடைவே. அவருக்குப் பதில் சில இளம் வீரர்களை மும்பை அணி அந்த இடத்தில் முயன்று பார்க்கக்கூடும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: மேக்ஸ்வெல், ஹேசல்வுட், பெஹ்ரண்டாஃப்
Maxwell
Maxwell
IPL

திருமண நிகழ்வு காரணமாக விடுப்பில் இருக்கும் மேக்ஸ்வெல் ஐபிஎல்-லிலும் முதல் ஒன்றிரண்டு வாரங்களைத் தவறவிடக்கூடும். கடந்த சீசனில் பெங்களூரு அணியின் மிக முக்கிய வீரராக மேக்ஸ்வெல் இருந்தார். மற்ற அணிகளுக்கெல்லாம் ஆடி தொடர்ந்து சொதப்பிவிட்டு வந்த மேக்ஸ்வெல் பெங்களூருவிற்காக பட்டையைக் கிளப்பினார். கோலி மற்றும் டீ வில்லியர்ஸை தாண்டி இன்னொரு வீரர் பெங்களூருவிற்குச் சிறப்பாக ஆடுகிறார் என்பதே ஆச்சர்யம்தான். அதை மேக்ஸ்வெல் நிகழ்த்திக் காட்டியிருந்தார். அவர் சில போட்டிகளுக்கே இல்லையென்றாலும் பெரும் இழப்புதான்.

சென்னை அணிக்கு வெற்றிகரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஹேசல்வுட்டை இந்த முறை பெங்களூரு ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரும் ஏப்ரல் 6 ஆம் தேதிதான் இந்தியாவிற்கு வருவார் எனக் கூறப்படுகிறது. அதேமாதிரி, இன்னொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பெஹ்ரண்டாஃபுமே 6-ம் தேதி வரை போட்டிகளைத் தவறவிடுகிறார்.

முக்கியமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் முக்கியமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை சில போட்டிகளுக்கு தவறவிடுவது பெங்களூருவிற்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: வார்னர், மிட்செல் மார்ஷ், நோர்க்கியா, லுங்கி இங்கிடி, முஷ்டபிசுர் ரஹ்மான்
டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்
Cricket Australia

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மீண்டும் வந்திருக்கும் வார்னர் மற்றும் புதுவரவான மிட்செல் மார்ஷ் இருவருமே பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தால் இரண்டு மூன்று போட்டிகளைத் தவறவிட வாய்ப்பிருக்கிறது. நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்டில் வார்னர், மார்ஷ் இருவருமே கட்டாயம் இடம்பிடிக்கக்கூடியவர்கள். இவர்கள் இருவருமே ஒரு சில போட்டிகளை தவறவிடுவது அணியைக் கொஞ்சம் பலவீனமாக்கும். அதேமாதிரி வேகப்புயலான நோர்க்கியா மும்பைக்கு வந்துவிட்டாலும் அவரின் உடற்தகுதி பற்றி இன்னும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. அவருமே ஒரு சில போட்டிகளைத் தவறவிட வாய்ப்பிருக்கிறது. லுங்கி இங்கிடி, முஷ்டபிசுர் ரஹ்மான் இவர்கள் இருவரும் முதல் போட்டியைத் தவறவிடக்கூடும். முதல் ஒன்றிரண்டு போட்டிகளை வெளிநாட்டு வீரர்கள் கூண்டோடு தவறவிடுவதால் டெல்லி கொஞ்சம் தடுமாறும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பேட் கம்மின்ஸ், ஆரோன் ஃபின்ச்
Pat Cummins
Pat Cummins

ஆஸ்திரேலிய வீரர்கள் பலருமே பாகிஸ்தான் தொடர் மற்றும் ஷேன் வார்னேக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல் சில போட்டிகளைத் தவறவிடுகின்றனர். அந்த வரிசையில் கொல்கத்தா அணிக்கு பேட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் ஃபின்ச் இருவரும் முதல் நான்கு போட்டிகளில் ஆட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அலெக்ஸ் ஹேல்ஸுக்கு ரீப்ளேஸ்மெண்ட்டாக வந்த ஆரோன் ஃபின்ச் சில போட்டிகளில் ஆடமாட்டார் என்பதால் ஓப்பனர்களுக்கான ஸ்லாட்டில் சில பிரச்னைகள் வரலாம். பேட் கம்மின்ஸ் பேட்டிங் பௌலிங் இரண்டிலுமே கலக்கக்கூடியவர். அவர் இல்லாததும் பிரச்னையே.

பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்ட்டோ, நேதன் எல்லிஸ், ரபாடா
Bairstow
Bairstow
ECB

வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடர் காரணமாக ஜானி பேர்ஸ்ட்டோ முதல் போட்டியையும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் காரணமாக நேதன் எல்லிஸ் 4 போட்டிகளையும் தவறவிடுகின்றனர். நேதன் எல்லிஸ் இல்லாததால் பஞ்சாபிற்கு பெரிய பிரச்னை இருக்காது. ஜானி பேர்ஸ்ட்டோ ஓப்பனிங்கில் இறங்குவார். அவருமே ஒரே ஒரு போட்டியில் ஆடாதது பெரிய பிரச்னையாக இருக்காது. ரபாடாவும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடமாட்டார் என்பதால் பெரிய பிரச்னையில்லை.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: மார்க் வுட், ஸ்டாய்னிஸ், ஹோல்டர், கைல் மேய்ர்ஸ்

மார்க் வுட் காயம் காரணமாக இந்தத் தொடர் முழுவதுமே ஆடப்போவதில்லை. ஸ்டாய்னிஸ், ஹோல்டர், கைல் மேயர்ஸ் ஆகியோர் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து தொடர்களினால் முதல் ஒரு சில போட்டிகளைத் தவறவிடக்கூடும். ஸ்டாய்னிஸ் மற்றும் ஹோல்டர் என இரண்டு முக்கியமான வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களைத் தவறவிடுவது அந்த அணிக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தும்.

Marcus Stoinis
Marcus Stoinis
குஜராத் டைட்டன்ஸ்: அல்சாரி ஜோசப்
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுவதால் அல்சாரி ஜோசப் முதல் ஒன்றிரண்டு போட்டிகளைத் தவறவிடக்கூடும். ஒன்றிரண்டு போட்டிகள்தான் என்பதால் பெரிய பிரச்னையில்லை.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: சீன் அப்பாட்

சீன் அப்பாட் முதல் ஒரு சில போட்டிகளைத் தவறவிடலாம். ஆனால், அவர் இல்லாததால் அணிக்கு பெரிய இழப்பு எனச் சொல்ல முடியாது.

சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ, கொல்கத்தா போன்ற அணிகள் சில வீரர்களின் ஆப்செண்டால் கொஞ்சம் அதிகமாகவே பிரச்னைகளைச் சந்திக்கவிருக்கின்றனர். இந்தத் தடையையும் தாண்டி அவர்கள் சாதிப்பார்களா? கமென்ட்டில் சொல்லுங்கள்.