Published:Updated:

சென்னையில்தான் ஃபேர்வெல், குற்றாலம் செம ஃபன்... இந்தியா சிமென்ட்ஸ் 75 விழாவில் ரகசியம் சொன்ன தோனி!

MS Dhoni | தோனி ( KBPHOTOGRAPHY )

நேற்று நடைபெற்ற இந்தியா சிமென்ட்ஸ் 75-வது ஆண்டு கொண்டாட்ட விழாவில் விர்ச்சுவல் வழியே பங்குகொண்டு பேசினார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அந்த விழாவின் ஹைலைட்ஸ் இங்கே!

சென்னையில்தான் ஃபேர்வெல், குற்றாலம் செம ஃபன்... இந்தியா சிமென்ட்ஸ் 75 விழாவில் ரகசியம் சொன்ன தோனி!

நேற்று நடைபெற்ற இந்தியா சிமென்ட்ஸ் 75-வது ஆண்டு கொண்டாட்ட விழாவில் விர்ச்சுவல் வழியே பங்குகொண்டு பேசினார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அந்த விழாவின் ஹைலைட்ஸ் இங்கே!

Published:Updated:
MS Dhoni | தோனி ( KBPHOTOGRAPHY )

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் அதன் 75-வது ஆண்டை நிறைவு செய்ததைக் கொண்டாடும் சிறப்பு விர்ச்சுவல் நிகழ்வு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, வீரர்கள் தீபக் சஹார், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாக்கூர் கலந்துகொண்டு இந்தியா சிமென்ட்ஸ் டீலர்கள் மற்றும் ஊழியர்களுடன் உரையாடினார். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவு துணைத்தலைவர் பதவியும் வகிக்கிறார் தோனி. ஏற்கெனவே இது போன்ற பல தருணங்களில் இந்தியா சிமென்ட்ஸ் ஊழியர்களைச் சந்தித்திருக்கிறார் அவர். இந்த நிகழ்வில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணைத்தலைவர் சீனிவாசனும் பங்குகொண்டார்.

இதில் என்.சீனிவாசனின் தொடக்க உரைக்கு அடுத்துப் பேசிய தோனி, "இந்தியா சிமென்ட்ஸ் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை. 75 ஆண்டுகள் என்பது முக்கிய மைல்கல். கொரோனா நெருக்கடியையும் கடந்து வந்திருக்கிறோம். இந்த சூழலிலும் யாரையும் நாம் பணி நீக்கவில்லை. அனைவரையும் ஒரு குடும்பமாகவே இந்தியா சிமென்ட்ஸ் நடத்தியிருக்கிறது!" என்ற அவர் அடுத்து ஜாலியான போட்டோ செக்மென்ட்டில் சிஎஸ்கே வீரர்களுடன் பங்குகொண்டார்.

MS Dhoni Tenkasi Visit
MS Dhoni Tenkasi Visit

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில் ஒரு புகைப்படமாக சில வருடங்களுக்கு முன்பு தோனி திருநெல்வேலி சங்கர் நகர் இந்தியா சிமென்ட்ஸ் ஆலைக்கு வருகை தந்தது பற்றியும் குற்றாலத்தில் குளித்தது பற்றியும் கேட்கப்பட்டது. "அங்கு சென்றதே ஒரு செம அனுபவம்தான். ஜீப்பில் சாலைகள் இல்லாத பகுதிகளில் பயணித்து அந்த அருவியைச் சென்றடைந்தோம். அந்த சவாலான பயணத்திற்கான முழு பலனையும் அனுபவித்தோம். தண்ணீர் மிகவும் தூய்மையாக இருந்தது" என்று அந்த பயணம் குறித்துச் சிலாகித்தார் தோனி!

பின்பு ராணுவத்தினருடனான அனுபவம் பற்றிக் கேட்கப்பட்டது. "பலரும் ராணுவத்தினரை உற்சாகப்படுத்த நான் அங்குச் செல்வதாக நினைக்கிறார்கள். மாறாக அவர்களிடமிருந்து உற்சாகம் பெறவே நான் அங்கு செல்கிறேன். எந்த ஒரு சூழலிலும் அவர்களிடத்தில் ஒரு புன்னகை இருக்கும். அவர்களால் முடிந்ததைச் செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள். அவர்களுடனான சந்திப்பு எப்போதுமே என்ன உத்வேகப்படுத்தும்" என்றார் தோனி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"ஸிவா பிறக்கும்போது தேசத்திற்கு பிறகே எல்லாம் என்றீர்கள்... இப்போது அது மாறியிருக்கிறதா?" என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

India Cements 75 Greet and Meet
India Cements 75 Greet and Meet

"இப்போதுதான் சூழல் மாறிவிட்டதே. நான் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில்லை. அதனால் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. ஆனால், அப்போது அப்படியில்லை. முதலில் தேசம் பிறகு பெற்றோர் அதன் பிறகு குடும்பத்தினர்... இதுவே நான் எனக்காக வைத்திருக்கும் கொள்கை. இப்படியான ஒரு கொள்கையில் நிலையாக இருந்தால்தான் முக்கியமான தருணங்களில் எளிதாக முடிவுகள் எடுக்க உதவும். இதுவே அன்று நான் அணியினருடன் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கவைத்தது" என்றார் தோனி

"நாங்கள் அனைவரும் உங்களுக்குப் பிரியாவிடை கொடுக்க ஒரு ஃபேர்வெல் மேட்ச் எதிர்பார்த்தோம். ஆனால், இப்படி திடீரென சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டீர்களே?" என ரசிகர் ஒருவர் கேட்க "நான் சிஎஸ்கேவுக்கு ஆடுவதை வந்து பாருங்கள். சென்னையில் எனது கடைசி ஆட்டத்தை ரசிகர்கள் முன்பு ஆடுவேன் என நம்புகிறேன். பார்ப்போம்!" என்று கூலாக பதிலளித்தார் தோனி!

அடுத்த ஆண்டு மெகா ஆக்ஷன் நடக்கவிருக்கும் சூழலில் சிஎஸ்கே அணியில் தோனி ரீடெய்ன் செய்யப்படுவாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருந்தது. அதற்கான பதிலாக இதை நாம் எடுத்துக்கொள்ளலாம்!