Ipl-2021 banner
Published:Updated:

KKR v MI: ஆண்ட்ரே ரஸல் - ஹீரோவாக இருந்தவர் வில்லன் ஆன கதை!

Andre Russell
Andre Russell

வெறும் இரண்டே ஓவர்கள் பந்துவீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ரஸல், 15 பந்துகள் சந்தித்து 9 ரன்களே எடுத்தார். முதல் போட்டியிலும் சரியாக பேட்டிங் செய்திடாத அவர், தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெறவேண்டிய நிலையில் இருந்து கோட்டை விட்டிருக்கிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். 31 பந்துகளுக்கு 31 ரன்கள் தேவை என்ற நிலையில், 7 விக்கெட்டுகள் கையில் இருந்தும் 10 விக்கெட்டுகள் வித்யாசத்தில் தோற்றிருக்கிறது அந்த அணி. இந்தப் போட்டியின் ஹீரோவாக மாறியிருக்கவேண்டிய ஒருவரே, கடைசியில் வில்லன் ஆகிவிட்டார் - ஆண்ட்ரே ரஸல். என்ன நடந்தது - இந்த வீடியோவில்!

வெறும் இரண்டே ஓவர்கள் பந்துவீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ரஸல், 15 பந்துகள் சந்தித்து 9 ரன்களே எடுத்தார். முதல் போட்டியிலும் சரியாக பேட்டிங் செய்திடாத அவர், தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்.

டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்துவீசிவரும் ரஸல், இன்று தன் முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்த ஓவரில் 10 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீசி அசத்தினார். நூலிழையில் அவரின் ஹாட்ரிக் வாய்ப்பு தவறிப்போனது. வெறும் 12 பந்துகளிலேயே அவரால் எப்படி 5 விக்கெட்டுகள் வீழ்த்த முடிந்தது?

ரஸல் | KKR v MI
ரஸல் | KKR v MI

இதற்கு முன்பு ஃபிட்டாக இல்லாததால் அதிகம் பந்துவீசாத அவர், இந்த சீசன் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசுகிறார். அதுவும் மிகவும் கடினமான டெத் ஓவர்களில் சிக்கனமாகப் பந்துவீசி விக்கெட்டும் வீழ்த்துகிறார். எப்படி? அவர் ஆயுதங்கள் என்னென்ன?

பந்துவீச்சில் அட்டகாசமாக செயல்பட்டிருந்தாலும், பேட்டிங்கில் மிகவும் சுமாராகவே ஆடியிருக்கிறார். அவரிடம் அணியும் ரசிகர்களும் அதிகம் எதிர்பார்க்கும்போது 15 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அதிலும், முதல் 5 பந்துகளுமே டாட் பால்கள். வெற்றி பெறவேண்டிய அணியை தோல்வியை நோக்கித் தள்ளியதில் இவருக்கும் நிச்சயம் பங்கிருக்கிறது. ஹீரோவாக கொண்டாடப்படவேண்டியவர், வில்லனாக மாறியது எப்படி. முழுமையாக இந்த வீடியோவில்.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு