Published:Updated:

DC v RCB: தவானின் ஒரு விக்கெட் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்... எப்படி?

Dhawan
Dhawan

இந்த சீசனில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 259 ரன்கள் எடுத்து ஆரஞ்ச் கேப்பை தன்வசப்படுத்தியிருக்கிறார் இந்திய அணியின் ஓப்பனர். இரண்டு முறை அரைசதம் அடித்திருக்கிறார். ஆனால், அவர் டெல்லி அணிக்கு முக்கியம் என்று சொல்வதற்கு இன்னொரு மிகமுக்கியக் காரணம் இருக்கிறது. அது என்ன?

அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு நடக்கும் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. புள்ளிப் பட்டியலில் டெல்லி இரண்டாவது இடத்திலும், ஆர்.சி.பி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி முதலிடத்துக்கு முன்னேறும். இந்த ஆட்டத்தின் எந்தப் பகுதி மிகவும் முக்கியமானது. இரண்டு அணிகளும் பலமாக இருக்கும் அந்த ஒரு விஷயம் என்ன? இந்த வீடியோவில் காணுங்கள்.

இதுவரை இந்த இரண்டு அணிகளும் 24 முறை நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. அதில் பெங்களூரு 15 போட்டிகளில் வென்றிருக்கிறது. டெல்லி 8 போட்டிகளில் மட்டுமே ஜெயித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு 3 போட்டிக்கும் 1 வெற்றி. ஆனால், கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் அந்த அணிதான் வெற்றி பெற்றிருக்கிறது. அவர்களின் ஆதிக்கம் இன்றும் தொடருமா?

இந்தப் போட்டியில் மிகவும் முக்கியமான வீரராக இருக்கப்போவது டெல்லி அணியின் ஓப்பனர் ஷிகர் தவான். இந்த சீசனில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 259 ரன்கள் எடுத்து ஆரஞ்ச் கேப்பை தன்வசப்படுத்தியிருக்கிறார் இந்திய அணியின் ஓப்பனர். இரண்டு முறை அரைசதம் அடித்திருக்கிறார். மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் அவர், 142.30 என்ற ஸ்டிரைக் ரேட்டில் பட்டையைக் கிளப்புகிறார். நிச்சயம் இன்று பெங்களூரு பௌலிங்கையும் அவர் பதம் பார்க்கக்கூடும். ஆனால், அவர் டெல்லி அணிக்கு முக்கியம் என்று சொல்வதற்கு இன்னொரு மிகமுக்கியக் காரணம் இருக்கிறது. அது என்ன? இந்த வீடியோவில் காணுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு