Ipl-2021 banner
Published:Updated:

Decoding Risabh: கேப்டன் பன்ட், பேட்ஸ்மேன் பன்ட் எப்படி? | IPL 2021

Risabh Pant
Risabh Pant ( Hasif Khan )

"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பன்ட் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்தேன். ஆனால், இப்போது மிகப்பெரிய முன்னேற்றம் கண்டிருக்கிறார். முழுமையான பேட்ஸ்மேனாக மாறியிருக்கிறார்" என்று பன்ட் பற்றி புகழ்ந்திருக்கிறார் ஜாம்பவான் லாரா.

டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது ராயல்ஸ். தோல்வியின் விளிம்பிலிருந்த அந்த அணி, டெல்லி பௌலர்களின் சொதப்பலால், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் அதிரடியால் அசத்தலாக வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இருந்தாலும், கேப்டனாக அவர் எடுத்த ஓரிரு முடிவுகள் கொஞ்சம் சிக்கலாக அமைந்தது. கேப்டன், பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் பற்றிய அலசல் இந்த வீடியோவில்...

16/2 என்று ஸ்கோர் இருந்தபோது களத்துக்குள் நுழைந்தார் பன்ட். அவர் வந்ததும் ரஹானே, ஸ்டாய்னிஸ் இருவரும் வெளியேற 37/4 என மிகமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது டெல்லி கேபிடல்ஸ். களத்தில் ரிஷப் பன்ட், லலித் யாதவ். இவர்கள் தவிர்த்து பிரதான பேட்ஸ்மேன்கள் என்று யாரும் இல்லை. அணி முழுதும் அவரையே நம்பியிருக்கும் சூழ்நிலை. அப்படியொரு நேரத்தில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 51 ரன்கள் எடுத்தார் அவர்.

அவர் ஆடிக்கொண்டிருக்கும்போது, "இதற்கு முன் ரிசப் பன்ட்டை நான் விமர்சித்திருக்கிறேன். ஆனால், இப்போது பல மடங்கு முன்னேறியிருக்கிறார். முழுமையாக பேட்ஸ்மேனாக மாறியிருக்கிறார்" என்று புகழ்ந்தார் பிரையன் லாரா. அவர் புகழ்ந்ததன் காரணம் என்ன, பன்ட் அப்படி என்ன செய்தார்? இந்த வீடியோவில்...

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு