Published:Updated:

RR v DC: மில்லர் மில்லர் சிக்கன் டின்னர்... டெத் ஓவர்களில் போட்டியை மாற்றிய ராஜஸ்தான்!

David Miller
David Miller

42 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது ராஜஸ்தான். ஆனால், அதன்பிறகு தன் அட்டகாசமான ஆட்டத்தால் போட்டியை மாற்றினார் டேவிட் மில்லர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த 3 நாள்களாக ஒரே டெம்ப்ளேட்டில்தான் ஐபிஎல் போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. 35 ஓவர்வரை ஜெயிக்கும் நிலையில் இருந்த அணிகள் கடைசியில் தோற்றிருந்திருக்கின்றன. கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் பேட்டிங்கில் சொதப்பி தோற்றன என்றால், பந்துவீச்சில் சொதப்பி 2 புள்ளிகளைக் கோட்டைவிட்டிருக்கிறது டெல்லி கேபிடல்ஸ். இந்தப் போட்டியைப் பற்றிய அலசல் இந்த வீடியோவில்...

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 148 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். பவர்பிளேவிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி டெல்லி அணியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தார் ஜெய்தேவ் உனத்கட்.

வெறும் 148 ரன்களே எடுத்திருந்த நிலையில் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியது டெல்லி. கிறிஸ் வோக்ஸ், ரபாடா ஆகியோர் பவர்பிளேவில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்கள். 42 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது ராஜஸ்தான். ஆனால், அதன்பிறகு தன் அட்டகாசமான ஆட்டத்தால் போட்டியை மாற்றினார் டேவிட் மில்லர். அவேஷ் கான் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்தவர், ஸ்டாய்னிஸ் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி பறக்கவிட்டார். மீண்டும் அவேஷ் கான் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர் அடித்துவிட்டு 62 ரன்களுக்கு வெளியேறினார்.

ஆட்டத்தின் முதல் 35 ஓவர்களில் ஒரு சிக்ஸர் கூட இல்லை. அடுத்த 5 ஓவர்களில் 7 சிக்ஸர்கள். மில்லர் தொடங்கிவிட்டதை கிறிஸ் மோரிஸ் தொடர, கடைசி ஓவரில் வென்றுவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ். ஒரு ஓவருக்கு 12 ரன்கள் வேண்டும் என்ற நிலையில், டாம் கரண் பந்துவீச்சில் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார் மோரிஸ். அதன்மூலம் இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். உனத்கட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு