Published:Updated:

மும்பையை மீண்டும் வென்றால்... ப்ளே ஆஃப்க்குத் தகுதிபெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?! #CSKvMI

#CSKvMI
#CSKvMI

மும்பையுடனான இன்றையைப் போட்டி சென்னைக்கு 200வது ஐபிஎல் போட்டி. இதுவரை 199 போட்டிகளில் விளையாடி 118 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறது சென்னை.

சென்னையின் ப்ளே ஆஃப் கனவுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என தோனியே சொல்லிவிட்டாலும், இன்னும் வாய்ப்பிருக்கிறது என்கிறது ஐபிஎல் புள்ளிகள் பட்டியல். நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஹைதராபாத்தின் வெற்றி, புள்ளிகள் பட்டியலில் கட்டக்கடைசியில் இருக்கும் சென்னைக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்திருக்கிறது.

மும்பை வெர்சஸ் சென்னை!

ஐபிஎல்-ன் எல்கிளாஸிக்கோ என புகழப்படும் மும்பை வெர்சஸ் சென்னைப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சிக்ஸர்கள் சிதறும் ஷார்ஜாவில் நடைபெற இருக்கிறது. மும்பைக்கு எதிராக ஏற்கெனவே அபுதாபியில் நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் சென்னை வெற்றிபெற்றிருந்தது. ஆனால், மும்பை போட்டிக்குப்பிறகு ஒன்பது போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் பரிதாப நிலையில் இருக்கிறது சென்னை. இன்று மும்பையை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு, அடுத்த மூன்று போட்டிகளிலும் பெருவெற்றிபெற்று, மற்ற அணிகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று தோல்வியடைந்தால் சென்னைக்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு முதலில் இன்று மும்பையைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?!

#CSKvMI
#CSKvMI

மும்பையுடனான இன்றையைப் போட்டி சென்னைக்கு 200வது ஐபிஎல் போட்டி. இதுவரை 199 போட்டிகளில் விளையாடி 118 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறது சென்னை. போட்டி நடக்கும் ஷார்ஜாவில் இதுவரை 8 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் முதல் நான்கு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 200 ரன்களுக்கு மேல் அடித்து வெற்றிபெற்றிருக்கின்றன. அடுத்த நான்கு போட்டிகளில் ரன்வேகம் குறைந்துவிட்டது. 180-190 ரன்களுக்குள்ளேயே முதலில் ஆடும் அணிகள் ரன்கள் அடிக்கின்றன. பெரும்பாலான போட்டிகளில் முதலில் ஆடிய அணிகளே வெற்றிபெற்றிருந்தாலும், சமீபத்திய போட்டிகளில் சேஸிங் செய்யும் அணிகளும் வெற்றிபெறுகின்றன. கடைசியாக ஷார்ஜாவில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது சென்னை சூப்பர் கிங்ஸ். இதில் சென்னை 179 ரன்கள் அடிக்க, அதை வெற்றிகரமாக சேஸ் செய்தது டெல்லி.

முதலில் ஷார்ஜாவில் சுழற்பந்து வீச்சாளர்களை பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது ஸ்பின்னர்களின் பெளலிங்கில் விக்கெட்கள் விழுவதோடு, ஸ்பின்னர்களின் எக்கானமி ரேட்டும் குறைந்திருக்கிறது.

Sai Kishore
Sai Kishore

ஷார்ஜாவில் இதுவரை சென்னை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது. இன்று பேட்டிங்/பெளலிங் என இரண்டு ஏரியாவிலும் பரிட்சார்த்த முயற்சிகள் செய்ய தோனி முன்வந்திருப்பதால் சென்னையின் ப்ளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஜெகதீசன், ருத்துராஜ் கெய்க்வாட், இம்ரான் தாஹிர் என மூவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம் அல்லது எப்படியும் இதில் இருவர் உறுதியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். மும்பையைப் பொறுத்தவரை கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அப்படி ரோஹித் இல்லையென்றால் அவருக்கு பதில் கீரோன் பொலார்ட் இன்று மும்பையின் கேப்டனாக இருப்பார்.

13-வது ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னையின் கேப்டன் தோனி, இந்தமுறைதான் இதுவரை அரைசதம் அடிக்கவில்லை. ஸ்ட்ரைக் ரேட்டும் குறைவாகவே இருக்கிறது. அதனால், தோனி இன்று ஃபார்முக்கு வர அதிகம் மெனக்கெடுவார் என எதிர்பார்க்கலாம். அதேசமயம் சர்ப்ரைஸாக இன்று தோனி ப்ளேயிங் லெவனில் இல்லாத கேப்டனாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அப்படி தோனி இன்று விளையாடவில்லை என்றால் டுப்ளெஸ்ஸி சென்னையின் கேப்டனாக இருப்பார்.

இன்று சென்னையை மும்பை தோற்கடித்துவிட்டால் ரன்ரேட் அடிப்படையில் மும்பை புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்குப் போய்விடும். சென்னை 2020 ஐபிஎல்-ல் இருந்து கிட்டத்தட்ட முழுமையாக வெளியேவந்துவிடும்!

அடுத்த கட்டுரைக்கு