Published:Updated:

LSG vs CSK: அலிபாய் ரிட்டர்ன்ஸ்; ஜடேஜாவின் ப்ளேயிங் லெவன் சவால்கள்... முதல் வெற்றியை பெறுமா சிஎஸ்கே?

CSK ( CSK )

பேட்டிங்கிலும் சரி பௌலிங்கிலும் சரி, பவர்ப்ளேயில் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல தொடக்கத்தைப் பெற வேண்டிய நெருக்கடியில் சென்னை இருக்கிறது.

LSG vs CSK: அலிபாய் ரிட்டர்ன்ஸ்; ஜடேஜாவின் ப்ளேயிங் லெவன் சவால்கள்... முதல் வெற்றியை பெறுமா சிஎஸ்கே?

பேட்டிங்கிலும் சரி பௌலிங்கிலும் சரி, பவர்ப்ளேயில் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல தொடக்கத்தைப் பெற வேண்டிய நெருக்கடியில் சென்னை இருக்கிறது.

Published:Updated:
CSK ( CSK )
ஐ.பி.எல் 15வது சீசனின் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் இன்று மோதவிருக்கின்றன. இந்தப் போட்டி மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இரண்டு அணிகளுக்குமே இது அவர்களின் இரண்டாவது போட்டியாகும். முதல் போட்டியில் இரண்டு அணிகளுமே தோல்வியைத் தழுவியிருந்த நிலையில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார் எனும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரைக்கும் கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டி அவர்களுக்கு அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கவில்லை. தோல்வி என்பதால் மட்டுமல்ல ஒரு அணியாக சிறப்பாகச் செயல்படாததே பிரச்னையாக இருந்தது. பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே கடுமையாகச் சொதப்பியிருந்தனர்.

மொயீன் அலி
மொயீன் அலி
CSK

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேட்டிங்கை பொறுத்தவரை ருத்துராஜ் கெய்க்வாட்தான் சென்னை அணியின் மிக முக்கிய தூண். கடந்த முறை ருத்துராஜ் கெய்க்வாட்டுடன் டு ப்ளெஸ்ஸியும் இருந்ததால் சென்னை அடித்திருந்த மொத்த ரன்களின் முக்கால்வாசி ரன்களை இவர்களே அடித்திருந்தனர். இந்த முறை டு ப்ளெஸ்ஸி இல்லாதது பிரச்னையே. ருத்துராஜ் கெய்க்வாட்டும் முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகியிருக்கிறார். ருத்துராஜ் எப்போதுமே ஒரு சீசனை மெதுவாக தொடங்கி கொஞ்சம் சூடுபிடித்த பிறகுதான் வேகமெடுப்பார்.

2020 சீசனின் முதல் 3 போட்டிகளில் ருத்துராஜ் எடுத்திருந்த ஸ்கோர் 0, 0, 5 மட்டுமே. ஆனால், அதன்பிறகு ஆடிய மூன்று போட்டிகளிலுமே சிறப்பாக ஆடி ஹாட்ரிக் அரைசதம் அடித்திருப்பார். 2021 சீசனிலுமே முதல் 3 போட்டிகளில் 5, 5, 10 என்றே ஸ்கோர் செய்திருப்பார். அதன்பிறகு ருத்துராஜ் எடுத்த வேகத்திற்கு யாராலுமே ஈடுகொடுக்க முடியவில்லை. ஆரஞ்சு தொப்பியை அவர்தான் வென்றிருந்தார்.
Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad

அதனால் முதல் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் டக் அவுட் ஆனது பெரிய விஷயமில்லை. ஆனால், இதை ருத்துராஜ் கெய்க்வாட்டின் இடத்திலிருந்து பார்க்காமல் டெவான் கான்வேயின் இடத்திலிருந்து பார்க்க வேண்டும். அவர் இப்போதுதான் ஐ.பி.எல்லுக்கே அறிமுகமாகியிருக்கிறார். அவர் செட் ஆவதற்கு இன்னும் சில போட்டிகள் கூட ஆகலாம். இந்தச் சமயத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் கூடுதல் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஆட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களிலும் ருத்துராஜ் முதல் மூன்று போட்டிகளில் சோபிக்காத போது இன்னொரு முனையில் இருக்கும் டு ப்ளெஸ்ஸி அதை ஈடுகட்டும் வகையில் பெர்ஃபார்ம் செய்துவிடுவார். அதனால் அணிக்கும் பெரிய அழுத்தம் ஏற்படாது. ருத்துராஜுக்கும் அவருக்குத் தேவையான நேரம் கிடைக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போது டெவான் கான்வேக்கு தொடக்க சிக்கல்களை போக்கிக் கொள்ள அப்படியொரு நேரம் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட டூ ப்ளெஸ்ஸி தனக்கு செய்ததை இப்போது டெவான் கான்வேக்கு செய்ய வேண்டிய இடத்தில் ருத்துராஜ் இருக்கிறார். ஆக, அந்த முதல் 3 போட்டி சொதப்பல் என்கிற ருத்துராஜின் பேட்டர்ன் இங்கே உடையும் என நம்பலாம்.

மொயின் அலி மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குள் வருவதே சென்னை அணிக்கு பெரிய தெம்பாக இருக்கும்.
Conway
Conway
CSK

ஏனெனில், முதல் போட்டியில் அவர் இல்லாத இடத்தை சிவம் துபே, சாண்ட்னர் என இரண்டு வீரர்களை கொண்டு சென்னை நிரப்ப வேண்டியிருந்தது. இந்தப் போட்டியில் மொயீன் அலி உள்ளே வருவதால் ஒரு இடம் மிச்சமாகும். அணியின் சமநிலையும் வலுவாகும். நம்பர் 4-ல் இறங்கி ரன்ரேட்டை கீழே விழ விடாமல் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிவிட்டு வருவதே மொயின் அலிக்கான பணி. அதை கடந்த சீசனில் நன்றாகவே செய்திருந்தார். இந்த சீசனிலும் அதை தொடரும்பட்சத்தில் சென்னக்கு ஜாக்பாட்தான். பௌலிங்கிலும் கடந்த சீசனில் எக்கனாமி 6 என்ற அளவிலேயே வீசியிருக்கிறார். கொஞ்சம் செட் ஆகாத வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டிருக்கும் சூழலில் ஆறாவது பௌலிங் ஆப்சனான மொயின் அலியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும் அணிக்கு பெரிதாக உதவும்.

ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறிய போதும் இரண்டு சீசன்களுக்கு பிறகு தோனி கடந்த போட்டியில் அரைசதம் அடித்திருந்தார்.

தோனி வலுவான ஃபார்மில் இருப்பது ஒட்டுமொத்த அணிக்குமே நம்பிக்கையைக் கொடுக்கும். புதிய கேப்டனான ஜடேஜாவும் மீண்டும் அதிரடிக்குத் திரும்பும்பட்சத்தில் லோய்ர் மிடில் ஆர்டரும் கச்சிதமாக இருக்கும்.
மொயின் அலி
மொயின் அலி

கான்வே, சாண்ட்னர், ப்ராவோ, ஆடம் மில்னே ஆகிய நான்கு பேர்தான் கடந்த போட்டியின் வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்டை நிரப்பியிருந்தனர். மொயீன் அலி ரிட்டர்ன் ஆவதால் இந்த நால்வரில் சாண்ட்னர் மீண்டும் பென்ச்சுக்குச் செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.

பேட்டிங்கை விட சென்னையின் பந்துவீச்சிற்கே அதிக கவனம் தேவைப்படுகிறது. குறைவான ஸ்கோரை டிஃபண்ட் செய்த கடந்த போட்டியில் பவர்ப்ளேயில் சென்னை அணியால் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை. தீபக் சஹாரின் இல்லாமையும் பிரச்னையாகியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், அவர் கம்பேக் கொடுக்க இன்னும் சில போட்டிகள் ஆகும். அதுவரை சமாளித்துதான் ஆக வேண்டும். ப்ராவோ மட்டுமே கடந்த போட்டியில் மிகச்சிறப்பாக வீசியிருந்தார். ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் விக்கெட்டே எடுக்கவில்லை. ஆனாலும், அவர்களுக்கு இந்தப் போட்டியிலுமே வாய்ப்பளிக்கப்படும் என்றே தெரிகிறது. அதுதானே சென்னையின் ஸ்டைல்? ஆனால், சிவம் துபே விஷயத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பது ஒரு சஸ்பென்ஸே. மொயின் அலி வந்துவிட்டதால் அவரை வெளியே உட்கார வைத்துவிட்டு முழுமையாக ஒரு பௌலரை எடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

Rajvardhan Hangargekar
Rajvardhan Hangargekar
அப்படி செய்யும்பட்சத்தில் கே.எம்.ஆசிப் அல்லது ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். லெக் ஸ்பின்னரான பிரஷாந்த் சொலாங்கிக்கு வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சர்யமில்லை.

இந்த சீசனில் இதற்கு முன்பு இந்த ப்ராபோர்ன் மைதானத்தில் டெல்லி vs மும்பை போட்டி நடந்திருந்தது. அதில், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்திருந்தார். முருகன் அஷ்வின் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். இதையெல்லாம் மனதில் வைத்து பிரஷாந்த் சொலாங்கி சேர்க்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.

பேட்டிங்கிலும் சரி பௌலிங்கிலும் சரி பவர்ப்ளேயில் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல தொடக்கத்தைப் பெற வேண்டிய நெருக்கடியில் சென்னை இருக்கிறது.

இன்னொரு பக்கம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அவர்களுமே கடந்த போட்டியில் குஜராத்துடன் தோற்றிருக்கிறார்கள். ருத்துராஜ் டக் அவுட் ஆனதை போன்று அங்கே கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகியிருந்தார். டீகாக், மணீஷ் பாண்டே, எவின் லீவிஸ் என டாப் ஆர்டர் மொத்தமும் சொதப்பியிருந்தது. தீபக் ஹூடா மற்றும் அறிமுக வீரரான ஆயுஷ் பதோனியின் அரைசதத்தாலேயே ஓரளவுக்குத் தப்பித்திருந்தது. பந்துவீச்சில் சமீரா, பிஷ்னோய், க்ரூணால் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாகவே வீசியிருந்தனர். டெத் ஓவரில்தான் பயங்கரமாகச் சொதப்பியிருந்தனர். 60+ ரன்களை வாரிக்கொடுத்து தோற்றிருந்தனர்.

LSG
LSG
LSG

கடந்த சீசனில் கலக்கிய ஆவேஷ் கான் மற்றும் இடதுகை பந்துவீச்சாளரான மோனிஷ் கான் ஆகியோர் இன்னும் செட் ஆக வேண்டும். லக்னோவின் ப்ளேயிங் லெவனில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. பேட்டிங் யூனிட் முழுமையாக ஜொலிக்கும்பட்சத்தில் டெத் ஓவர்கள் நன்றாக அமையும்பட்சத்தில் லக்னோவும் வலுவான போட்டியளிக்கும்.

நிஜமாகவே இரண்டு அணிகளுமே சம அளவிலான பலம் பலவீனங்களுடன் இருப்பதாகவே தெரிகிறது. எந்த அணியின் பலவீனம் அதிகமாக நோண்டப்பட்டு தோல்வியை சந்திக்கப்போகிறது, எந்த அணி திறம்பட செயல்பட்டு புள்ளிக்கணக்கை தொடங்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism