Ipl-2021 banner
Published:Updated:

IPL 2021 : பயோபபுளுக்குள் பரவிய கொரோனா... பயிற்சியை நிறுத்திய CSK... ஐபிஎல் தொடருமா?

IPL 2021 - தோனி - கோலி
IPL 2021 - தோனி - கோலி

கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு கொரோனா பாசிட்டிவ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து வெளியாகும் கொரோனா செய்திகள் பயோபபுள் கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக இன்று நடைபெற இருந்த பெங்களூர் - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு கொரோனா பாசிட்டிவ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து வெளியாகும் கொரோனா செய்திகள் பயோபபுள் கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் இடம்பெற்றிருக்கும் சிஇஓ காசி விஸ்வநாதன், பெளலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி மற்றும் சென்னை அணி பஸ் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் தங்கியிருக்கும் சென்னை அணி இதனால் பயிற்சிகளை நிறுத்தியிருக்கிறது. அதேப்போல் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பணியாற்றும் 5 ஊழியர்களுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Ipl
Ipl

கிளஸ்டர் கேரவன் மாடலில் சென்னை மற்றும் மும்பையிலேயே முதல் மூன்று வார போட்டிகள் நடந்த நிலையில் அடுத்தக்கட்டமாக டெல்லி, அஹமதாபாத் என போட்டி நடக்கும் நகரங்கள் மாறியதும் கொரோனா தொற்று பயோபபுளுக்குள்ளும் நுழைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மே 8-ம் தேதிவரை டெல்லி மற்றும் அஹமதாபாத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கொரோனா பரவல் செய்திகள் ஐபிஎல் தொடருமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு