Published:Updated:

Chennai Super Kings: ரூ.7600 கோடி சந்தை மதிப்பு - இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் யுனிகார்ன் நிறுவனம்!

Dhoni | Chennai Super Kings (CSK)

சென்னை சூப்பர் கிங்ஸ் சந்தை மதிப்பு அதன் தாய் நிறுவனமான இந்தியா சிமிண்ட்ஸ் மதிப்பை விட அதிகரித்திருக்கிறது.

Chennai Super Kings: ரூ.7600 கோடி சந்தை மதிப்பு - இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் யுனிகார்ன் நிறுவனம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் சந்தை மதிப்பு அதன் தாய் நிறுவனமான இந்தியா சிமிண்ட்ஸ் மதிப்பை விட அதிகரித்திருக்கிறது.

Published:Updated:
Dhoni | Chennai Super Kings (CSK)

இந்தியாவின் ஐபிஎல் டீம்களில் பிரபலமானதும் 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸின் சந்தை மதிப்பு ரூ.7600 கோடியைத் தொட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் யுனிகார்ன் நிறுவனமாக (1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பைக் கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்) சிஎஸ்கே உருவெடுத்துள்ளது. இதன் பங்கு மதிப்பு ரூ.210லிருந்து ரூ.225 வரை பட்டியலிடப்படாத சந்தையில் விற்பனையாகிறது.

சிஎஸ்கே கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற IPL போட்டியில் சாம்பியன் பட்டத்தை தோனி தலைமையில் வென்றது. இந்த வெற்றிக்கு பிறகு அதன் மதிப்பு எகிறத் தொடங்கியது.

CSK IPL Champion
CSK IPL Champion

இன்னொரு காரணம், ஐபிஎல் பிரான்சைஸியாக இரண்டு புதிய டீம்கள் வருகிற சீசனில் இணைய உள்ளன. சஞ்சீவ் கோய்ங்காவின் RPSG குரூப் லக்னோ டீமை ரூ.7090 கோடிக்கு வாங்கியுள்ளது. அதே நேரத்தில் CVC Capital அஹமதாபாத் டீமை ரூ.5625 கோடிக்கு வாங்கியுள்ளது. இதனால் ஐபிஎல் பக்கம் கூடுதல் கவனம் வந்திருக்கிறது. அது ஏற்கெனவே இங்கே ரசிகர்களின் பேராதரவுடன் கோலோச்சிக் கொண்டிருக்கும் சிஎஸ்கே-வுக்கு சாதகமாகி போயிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனக்கென எப்போதும் தனி ரசிகர் படையையே வைத்திருக்கும் சிஎஸ்கே, நடுவில் இரண்டு வருடங்கள் தடையில் இருந்தாலும், வந்த பிறகு அதன் தொடர்ச்சியான வளர்ச்சி, பிராண்டின் மதிப்பை தக்க வைத்துள்ளது.

தோனி, ஸ்ரீனிவாசன்
தோனி, ஸ்ரீனிவாசன்

பிசிசிஐ முன்னாள் தலைவரும் இந்தியா சிமிண்ட்ஸ் மேலாண்மை இயக்குநருமான N.ஶ்ரீனிவாசன், "சிஎஸ்கே பிராண்ட் இந்தியா சிமெண்டைத் தாண்டி வளர்ந்திருக்கிறது. நீங்கள் அமெரிக்காவின் பிரான்ஸைசி அடிப்படையிலான போட்டிகளைப் பார்த்தால், எல்லாவற்றையும் தாண்டி அவற்றின் மதிப்பு உயரும். இந்தியாவில் கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகம். பிரான்ஸைசி அடிப்படையிலான போட்டிகள் முக்கியத்துவம் பெறுவதை நம் நாடு பார்த்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஐபிஎல் போட்டியின் போதுதான் சிஎஸ்கே-வின் பட்டியலிடப்படாத பங்கின் மதிப்பு ரூ.110-120 என்பதிலிருந்து ரூ.220 வரையாக உயர்ந்தது. குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்னில் சிஎஸ்கே தோற்கடித்த 11 நாள்களுக்குள் இந்த வளர்ச்சி ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism