Published:Updated:

"ஐபிஎல் வருமானம் மீண்டும் கிரிக்கெட்டுக்காக மட்டுமே செலவு செய்யப்படும்!"- பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

ஜெய் ஷா, தோனி

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக, ஒரு சீசனுக்கான ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைக்கும் பிசிசிஐ-யின் வருவாய் ரூ.1000 கோடியைத் தாண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

"ஐபிஎல் வருமானம் மீண்டும் கிரிக்கெட்டுக்காக மட்டுமே செலவு செய்யப்படும்!"- பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக, ஒரு சீசனுக்கான ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைக்கும் பிசிசிஐ-யின் வருவாய் ரூ.1000 கோடியைத் தாண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஜெய் ஷா, தோனி

ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) பிராண்ட் மதிப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் ஒரே சீசனில் மட்டும் ரூ.1000 கோடி வருமானத்தைக் கடந்துள்ளன ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்கள்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவருக்கான பர்ப்பில் கேப் (Purple Cap) மற்றும் அதிக ரன் எடுத்தவருக்கான ஆரஞ்சு கேப் (Orange Cap) போன்றவற்றின் ஸ்பான்சர்ஷிப்களும் அதிகரித்துள்ளன. இதைத் தொடர்ந்து, பிசிசிஐ ஊடக உரிமைகளுக்கான டெண்டரும் வெளியிடப்பட உள்ள நிலையில், பிசிசிஐ ஒருங்கிணைக்கப்பட்ட டெண்டரின் மதிப்பு ரூ. 45,000 கோடியைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2022
IPL 2022

இது பற்றிக் கூறிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, "இது ஒரு பிராண்டாக ஐபிஎல்-லின் மதிப்பைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்தப் புதிய ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களால் நாங்கள் முற்றிலும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டு நாங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஸ்பான்சர்ஷிப் வருவாயைப் பெற்றுள்ளோம்" என்று கூறினார்.

மேலும், "கிரிக்கெட்டை இன்னும் சிறப்பாக்குவது, கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது மற்றும் சிறப்பான விளையாட்டை விளையாடுவதற்கு அனைவருக்கும் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குவது போன்றவற்றில்தான் எங்கள் முழு கவனமும் இருக்கும்" என்று கூறிய அவர், "ஐபிஎல் மூலம் கிடைக்கும் வருமானம் நமது அடிமட்ட உள்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக மட்டுமே... அதாவது அந்த விளையாட்டிற்காகவே மீண்டும் செலவு செய்யப்படும்" என்றும் உறுதியளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism