Election bannerElection banner
Published:Updated:

ஶ்ரீசாந்த், முரளி விஜய் நீக்கம்... இறுதி செய்யப்பட்ட 292 பேர்... ஐபிஎல் ஏலத்தில் யார், யார் உள்ளே?!

ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் ஏலம்

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீகில் ஜாஃப்னா அணிக்காக விளையாடிய ஈழத்தமிழரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தின் பெயர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. வலது கை லெக் ஸ்பின்னரான விஜயகாந்த்தின் ஆரம்ப விலை 20 லட்சம் ரூபாய்.

சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க கடந்த வாரம் 1097 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தார்கள். இதில் 283 வீரர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். 8 அணிகளிலும் 61 வீரர்களுக்கே தேவை இருக்கும் நிலையில் ஏலத்துக்கான இறுதிப்பட்டியலை வெளியிட்டிருக்கிறது பிசிசிஐ. பதிவுசெய்த 1097 பேரில் 292 பேரையே இறுதிசெய்திருக்கிறது பிசிசிஐ.

ஸ்பாட் ஃபிக்ஸிங் பிரச்னையில் சிக்கி, தடைவிதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுவந்து சையது முஸ்தாக் டிராஃபியில் விளையாடி ஐபிஎல் ஏலத்திலும் பெயரைப்பதிவு செய்திருந்தவர் ஶ்ரீசாந்த். கேரளாவைச் சேர்ந்த ஶ்ரீசாந்த் தன்னுடைய ஆரம்ப விலையை 75 லட்சமாக நிர்ணயித்திருந்தார். ஆனால் அவரின் பெயர் பிசிசிஐ அறிவித்திருக்கும் இறுதிப்பட்டியலில் இல்லை.

அதேப்போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு வீரர் முரளி விஜய்யின் பெயரும் இறுதிப்பட்டியலில் இல்லை. சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீகில் ஜாஃப்னா அணிக்காக விளையாடிய ஈழத்தமிழரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தின் பெயர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. வலது கை லெக்ஸ்பின்னரான விஜயகாந்த்தின் ஆரம்ப விலை 20 லட்சம் ரூபாய்.

ஶ்ரீசாந்த், முரளி விஜய் நீக்கம்... இறுதி செய்யப்பட்ட 292 பேர்... ஐபிஎல் ஏலத்தில் யார், யார் உள்ளே?!

தமிழக வீரர்கள் ஹரி நிஷாந்த், ஷாருக்கான், சித்தார்த் மணிமாறன், சோனு யாதவ், அருண் கார்த்திக், பெரியசாமி, பாபா அபராஜித், மொகமது என சமீபத்தில் சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாட்டின் 8 வீரர்கள் ஐபிஎல் ஏல இறுதிப்பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

ஐபிஎல் ஏலத்தில் பேட்ஸ்மேன்களில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், ஆல்ரவுண்டர்களில் ஷகிப் அல் ஹசன், விக்கெட் கீப்பர்களில் சாம் பில்லிங்ஸ் ஆகியோரின் பெயர்கள் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளன.

வேகப்பந்து வீச்சாளர்களில் ஷெல்டன் காட்ரெல், ஸ்பின்னர்களில் க்வாஸ் அஹமது ஆகியோரின் பெயர்கள் முதலிடத்தில் இடம்பிடித்துள்ளன. இந்தவரிசைப்படிதான் வீரர்களின் ஏலம் நடைபெறும்.

நியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடிவரும் 21 வயது ஃபின் ஆலனின் பெயரும் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இவரை வாங்க ஐபிஎல் அணிகள் மிகப்பெரிய போட்டியில் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஐபிஎல் ஏலம் அடுத்த வியாழக்கிழமை(18-02-2021) அன்று சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. ஏலம் மதியம் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு