Published:Updated:

IPL அணியை வாங்க குறைந்தபட்ச விலை 2000 கோடி... புதிய இரண்டு அணிகளை வாங்கப்போவது யார்?

ஐபிஎல்
ஐபிஎல்

ஆண்டுக்கு 3000 கோடி டர்ன் ஓவர் கொண்ட நிறுவனங்களே ஐபிஎல் அணியை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க முடியும். இது ஒரே நிறுவனமாகவும் இருக்கலாம் அல்லது மூன்று நிறுவனங்களின் கூட்டமைப்பாகவும் இருக்கலாம். ஆனால், மூன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது எனத் தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

20/20 கிரிக்கெட் தொடராக 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்தியன் பிரிமியர் லீக். ஆரம்பத்தில் 8 அணிகளாக இருந்த ஐபிஎல் தொடர் பின்னர் 10 அணிகளாக இருந்து மீண்டும் 8 அணிகளாக மாறிப்போனது. இந்நிலையில் ஐபிஎல் தொடரை மீண்டும் 10 அணிகள் கொண்ட தொடராக மாற்றுகிறது பிசிசிஐ. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.

பிசிசிஐ அறிக்கையில் ‘’ திரும்பப் பெறமுடியாத கட்டணமாக 10 லட்சம் ரூபாய் பணம் கட்டி ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளை சொந்தமாக வாங்கி நடத்துவதற்கு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்’’ என்றும்'' அக்டோபர் 5, 2021தான் கடைசி நாள்'' என்றும் அறிவித்துள்ளது.

ஐபிஎல்
ஐபிஎல்

10 லட்சம் கட்டி ஏலத்துக்கு விண்ணப்பித்தாலும் ஒரு அணியை வாங்குவதற்கான குறைந்தபட்ச விலை 2000 கோடியில் இருந்து தொடங்குகிறது. ஏலத்தில் எந்த நிறுவனம் அதிகத் தொகைக்கு கேட்கிறதோ அந்த நிறுவனத்துக்கு புதிய அணி விற்கப்படும். ஆரம்ப விலை 2000 கோடி என்றாலும் ஒவ்வொரு அணியையும் 3500 முதல் 4000 கோடிக்கு பிசிசிஐ விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் உடனடியாக பிசிசிஐ வருமானத்தில் கிட்டத்தட்ட 8000 கோடி கூடும்.

யார் வாங்க முடியும்?!

ஆண்டுக்கு 3000 கோடிக்கு டர்ன் ஓவர் கொண்ட நிறுவனங்களே ஐபிஎல் அணியை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க முடியும். இது ஒரே நிறுவனமாகவும் இருக்கலாம் அல்லது மூன்று நிறுவனங்களின் கூட்டமைப்பாகவும் இருக்கலாம். ஆனால், மூன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது எனத் தெரிகிறது.

ஐபிஎல்
ஐபிஎல்

யார் யார் போட்டி போடுகிறார்கள்?

தற்போதைய நிலவரப்படி குஜராத்தைச் சேர்ந்த அதானி நிறுவனம், கொல்கத்தாவைச் சேர்ந்த கோயங்கா நிறுவனம், கேரளாவைச் சேர்ந்த முத்தூட் ஃபினான்ஸ் நிறுவனம் மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனம் என நான்கு நிறுவனங்கள் போட்டியில் முன்னிலையில் உள்ளன. இதில் குஜராத்தைச் சேர்ந்த அதானி நிறுவனத்துக்கு நிச்சயம் குஜராத் அணி கிடைத்துவிடும் எனத் தெரிகிறது. மற்றொரு அணிக்குத்தான் பெரும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

எந்தெந்த அணிகள்?

குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் என இரண்டு மாநிலங்களுக்கு புதிய ஐபிஎல் அணிகள் கிடைக்கும் என தெரிகிறது. குஜராத், லக்னோ இந்த அணிகளின் தலைமையகமாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு